உங்களிடம் குறைந்தது பத்து பாஸ்வேர்டாவது இருக்கலாம்.எல்லோரும் பயன்படுத்தும் ஜீமெயிலுக்கான பாஸ்வேர்டு.வலைப்பதிவாளர் என்றால் அதற்கொரு பாஸ்வேர்டு.பேஸ்புக்,லின்க்டுஇன் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,அமேசான்,பிலிப்கார்ட் போன்ற இகாமர்ஸ்தளங்களுக்கான பாஸ்வேர்டு,யூடியூப்பிற்கான பாஸ்வேர்டு,புக்மார்ன்கிங் சேவைகளுக்கான பாஸ்வேர்டு,ரீடர் சேவைகளுக்கான பாஸ்வேர்டு … இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
அநேகமாக மொத்தம் எத்தனை முகவரி கணக்குகள் இருக்கின்றன,எத்தனி பாஸ்வேர்டுகள் இருக்கின்றன என்பதே கூட உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.சில பாஸ்வேர்டுகள் நீங்கள் மறந்தும் போயிருக்கலாம்.
பாஸ்வேர்டுகளை மறக்காமல் நினைவில் கொள்ள சரியான வழியை கடைபிடிப்பது அவசியமாகிறது.நிச்சயம் நீங்களும் ஒரு வழியை வைத்திருக்கலாம்.அல்லது ஒரு சிறந்த வழியை தேடிக்கொண்டிருக்கலாம்.அப்படி என்றால் நீங்கள் பாஸ்வேர்டு மரம் வளர்க்கலாம்.
பாஸ்வேர்டு மரம் என்பது ஒருவரிடம் உள்ள அனைத்து பயனாளர் முகவரி மற்றும் அவற்றுக்கான பாஸ்வேர்டுகளை குறித்து வைப்பதற்கான வரைபட சித்திரம்.பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவரான அமீத் அகர்வால் தனக்காக உருவாக்கி வைத்திருக்கும் வரைபடம் இது.
ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்வேர்டுகள் இருக்கும் போது அவற்றை காகிதத்தில் குறித்து வைக்க தோன்றும். என்ன தான், பாஸ்வேர்டுகளை குறித்து வைத்தாலும் எந்த சேவைக்கு எந்த பாஸ்வேர்டு என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம்.
ஆனால் பாஸ்வேர்டுகளை வரைபட சித்திரமாக குறித்து வைக்கும் போது இந்த சங்கடம் இல்லை.
வரைபடத்தின் மையமாக உங்கள் பெயர்.அதை சுற்றிலும் நீங்கள் பயன்படுத்தும் பல்வேறு பயனர் வகைகளை குறித்து வைக்க வேண்டும்.உதாரணத்திற்கு நடுவில் இருந்து கோடு இழுத்து அதன் மீது கம்பயூட்டர் என்று குறிப்பிட வேண்டும். பிறகு கம்ப்யூட்டடில் இருந்து ஒரு கிளை கோடு இழுத்து உங்களீடம் உள்ள கம்ப்யூட்டர் சார்ந்த பயனர் கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை குறித்து வைக்க வேண்டும்.
அடுத்ததாக இமெயிலுக்கு ஒரு கோடி .அதிலிருந்து, ஜிமெயில்,யாஹூமெயில் ஆகியவற்றின் பாஸ்வேர்டுகளை குறித்து வைக்கலாம்.அப்படியே கூகுலுக்கு என்று தனி கிலை உருவாக்கி கூகுல் சார்ந்த சேவைகளுக்கான பாஸ்வேர்டை குறித்து வைக்ககலாம்.இப்படியே வீடியோ சேவைகளுக்கான பாஸ்வேர்டுகள், கோப்புகளுக்கான பாஸ்வேர்டு,சமூக தளங்களூக்கான பாஸ்வேர்டு என்று ஒவ்வொரு வகைக்கும் ஒரு கிளை இழுத்து அதில் பாஸ்வேர்டுகளை குறிக்கலாம்.
இந்த சித்திரம் பாஸ்வேர்டு மரம் போலவே அழகாக தோற்றம் தருவதோடு எந்த கணக்கிறகான பாஸ்வேர்டு எங்கிருக்கிறது என உடனே கண்டு பிடித்து விடலாம்.
இந்த யுக்தி அட நன்றாக இருக்கிறதே என வியக்க வைத்தால் அமீத் அகர்வாலுக்கு ஒரு சபாஷ் போடுங்கள்!.
———–
http://www.labnol.org/tech/password-tree/19764/

0 Comments on “பாஸ்வேர்டு மரம் வளர்போம்.”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – அருமையான ஆலோசனை – இருப்பினும் படம் வரையத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்குச் சிரமம் தான் – பார்ப்போம் – சிந்திப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா