மினி லாக்ஸ் சேவையை மினி விஸ்வரூபம் எடுக்கும் தளம் என்று சொல்லலாம்.அதாவது முதல் பார்வைக்கு எளிமையாக அறிமுகமாகும் இந்த தளம் அதனை பயன்படுத்தி பார்க்கும் போதே கூடுதல் அம்சங்களோடு விரிவிடைந்து கொண்டே போகிறது.அதுவும் எளிமை மாறாத தன்மையோடு!
அடிப்படையில் இது புக்மார்கிங் சேவையாக தோன்றினாலும்,வலைப்பதிவாக,இணைய பட்டியலாக,குழு தேடல் சாதனமாக விரிந்து வியக்க வைக்கிறது.
இந்த தளம் முன்வைக்கும் அம்சங்களுக்கும் வசதிகளுக்கும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும் சிக்கலானதாக இருக்க வேண்டும்.ஆனால் பயன்படுத்த எளிமையாகவே இருப்பது ஆச்சயம் தான்.
இணையத்தில் பார்ப்பவற்றை சேமிப்பதற்கும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்குமான புதிய வழி என பெருமைப்படடு கொள்ளும் இந்த சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்து கொள்ள கூட தேவையில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம்.
இந்த சேவையை கொண்டு சுவாரஸ்யமான இணையதள முகவரி பட்டியலை உருவாக்கி அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பட்டியலை ‘லாக்'(log) என்று குறிப்பிடுகிறது.
இததகை லாகை உருவாக்கி கொள்ள நீங்கள் சேமித்து வைக்க அல்லது பகிர்ந்து கொள்ள விரும்பும் இணைய முகவரிகளை குறித்து வைக்க துவங்க வேண்டும்.இது மிகவும் சுலபமானது.இதற்காக என்று உள்ள ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள கட்டத்தில் அந்த இணைய முகவரியை கொண்டு வந்து பேஸ்ட் செய்தால் போதும்,அவ்வளவு தான் உங்களுக்கான ‘லாக்'(பூட்டு அல்ல,குறிப்பு) தயார்.
தொடர்ந்து இதே போல இணைய முகவரிகளை சேர்த்து கொண்டே போகலாம்.இந்த முகவரிகள் உங்களை கவர்ந்த இணையதளங்களாக இருக்கலாம்.பிடித்தமான வீடியோக்களாக இருக்கலாம்.இணையத்தில் கவர்ந்த எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இப்படி வரிசையாக இணைய முகவரிகளை சேமித்த பிறகு அந்த பட்டியலுக்கு அழகாக ஒரு தலைப்பு கொடுத்து அதற்கான சுருக்கமான விளக்கத்தையும் இடம் பெற வைக்கலாம்.
இந்த இணைய முகவரிகளுக்கு என்று தனியே ஒரு இணைய முகவரி உருவாக்கி தரப்படுகிறது.உங்கள் இணைய பட்டியலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் போது இந்த முகவரியை மட்டும் கொடுத்தால் போதும்.
இணைய அடையாளத்தோடு அந்த இணைய பட்டியல் எத்தனை முறை பார்க்கப்பட்டது,அதில் அதிகம் பார்க்கப்பட்ட இனைப்பு எது என்ற தகவல்களும் புள்ளிவிவரங்களாக கொடுக்கப்படுகின்றன.இணையவாசிகள் விரும்பினால் இணைய முகவரிகளின் இடத்தை பட்டியலில் மாற்றவும் செய்யலாம்.இந்த பட்டியலை பார்ப்பவர்கள் தங்களுக்கு பிடித்தமான முகவரிக்கு வாக்களிக்கும் வசதியும் இருக்கிறது.
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் நல்ல இணையதளங்களை இப்படி பட்டியலாக குறித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்.சுவாரஸ்யமான வீடியோ காட்சிகளையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ளலாம்.இசை விடியோக்கள்,திரைப்பட கிளிப்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.
டிவிட்டர் ,பேஸ்புக்,கூகுல் பிளஸ் என எந்த வலைப்பின்னல் வாயிலாகவும் இந்த இனைய பட்டியலை பகிரலாம்.
இவற்றை பெறும் நண்பர்கள் இந்த இணைப்புகள் மீது கிளிக் செய்தாலே அதில் உள்ள வீடியோ காட்சிகளை காணலாம்.வீடியோக்கள் ஒன்றுக்கு மேல இருந்த

0 Comments on “புக்மார்கிங் சேவையில் மேலும் ஒரு புதுமை.”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – பயனுள்ள தகவல் – பயன் படுத்துவோம் – லாக் என்பதற்கு குறிப்பு எனப் பொருள் தரப்பட்டிருந்தாலிம் LOG எனவும் அடைப்புக்குறிக்குள் தரலாம் என்பது என் கருத்து. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நல்ல யோசனை. ஏற்றுக்கொள்கிறேன்.
அன்புடன் சிம்மன்