ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை.
பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன.
இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க வேண்டும்,பெரிய எழுத்து சின்ன எழுத்து வேறுபாடு இருக்க வேண்டும் என்று அவற்றை சிக்கலானதாக மாற்றவும் வலியுறுத்துகின்றனர். பாஸ்வேர்டுகளை யூகித்தறிய முயலும் தாக்காளர்களிடம் இருந்து தப்பிக்க இவையெல்லாம் அவசியம்.
எல்லாம் சரி,ஆனால் இத்தகைய சிக்கலான பாஸ்வேர்டை நினைவில் கொள்வது எப்படி? பாஸ்வேர்டு ஆலோசனையில் அவற்றை காகிதத்தில் எழுதியும் வைத்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.இது மட்டுமா எல்லா இணைய சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு கூடாது,வெவ்வேறு பாஸ்வேர்டு தேவை என்று சொல்லப்படுவதும் ஏற்கக்கூடியதாகவே இருக்கிறது.ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கலான பாஸ்வேர்டுகளை மனப்பாடம் செய்து கொள்வது என்றால் படிக்காத மாணவனுக்கு தேர்வை நினைத்து உண்டாகும் அச்சம் அல்லாவா ஏற்பட்டு விடுகிறது.
ஆனால் இந்த அலவுக்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பிற்காக அஞ்சி நடுங்க வேண்டியதில்லை. பாஸ்வேர்டையும் எளிமையாக்காமல் அதே நேரத்தில் அதன் பாதுகாப்பு அம்சத்தியும் நீர்த்து போகச்செய்யாமல் நல்ல பாஸ்வேர்டை அமைத்து கொள்ள எளிய வழி இருக்கிறது.
பாஸ்வேர்டை நேரடியாக தேர்வு செய்யாமல் அடிப்படையாக ஒரு சொல் அல்லது சொற்றடரை வைத்துக்கொண்டு அதன் மீது மாற்றங்களை செய்வதன் மூலம் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளலாம். உதாரணத்திற்கு சாலிட் எனும் ஆங்கில சொல் அடிப்படை பாஸ்வேர்டு சொல் என வைத்துக்கொள்வோம். இப்போது இதில் உள்ள ஆங்கில் எழுத்துக்களை எல்லாம் எண்களாக மாற்றி அதை பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம்.அல்லது முதல் மற்றும் கடைசி எழுத்தை எண்ணாக மாற்றலாம். அதே போல அந்த சொல்லை அப்படியே தலைக்கீழாக எழுதி வைத்துக்கொண்டால் அதுவும் நல்ல பாஸ்வேர்டாக இருக்கும்.
அடிப்படையான சொல் நினைவில் நிற்கும் என்பதால் அதில் செய்த மாற்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு பாஸ்வேர்டை மறக்காமல் இருக்கலாம். கொஞ்சம் கற்பனையை பயன்படுத்தி படைப்பாற்றலோடு மாற்றங்களை செய்தால் மற்றவர்களால யூகிக்க முடியாத பாஸ்வேர்டை எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
இதே யுக்தியை இன்னும் ஒரு படி மேலே சென்று பயன்படுத்தலாம். அடிப்படை சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றடரை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த சொற்றொடர் நீங்கள் உருவாக்கிய வாசகமாகவோ கவிதை வரியாகவோ இருக்கலாம். இந்த சொற்றொடரில் உள்ள சொற்களின் முதல் எழுத்தை மட்டும் ஒன்றாக சேர்த்தால் வலுவான பாஸ்வேர்டு தயாராகி விடும்.இந்த சொற்றொடரில் எண்கள் இடம்பெற்றால் இன்னும் விஷேசம்.
இந்த ஒரு வாசகத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு இணைய சேவைக்கும் ஏற்ப சின்ன மாற்றத்தை செய்து வெவ்வேறு பாஸ்வேர்டை உ