பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை. டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டு என்ற பெயரில் ஏதோ சொற்கூட்டத்தை சமர்பிக்கும் தேவை இல்லாமல், ஒருவர் தனது கையெழுத்தையே பாஸ்வேர்டாக பயன்படுத்துவது தான் டைனாஹான்டு முறை. இதில் பயனாளிகள் தங்கள் சொந்த கையெழுத்தை கண்டுபிடித்து அடையாளம் காட்டினால் போதுமானது.
இதற்காக முதலில் பயனாளிகள் தங்களது கையெழுத்து மாதிரிகளை சமர்பிக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் இந்த கையெழுத்தை அலசி ஆராய்ந்து அதன் தனித்தன்மைகளை குறித்து கொள்ளும். அதன் பிறகு கம்ப்யூட்டரில் அல்லது ஏதேனும் இணைய கணக்கில் நுழைய முற்படும் போது பலவிதமான எண்கள் காண்பிக்கப்படும்.அதில் நீங்கள் சம்ர்பித்த கையெழுத்து மாதிரியும் இருக்கும். அதை நீங்கள் சரியாக அடையாளம் காட்டினால் மேற்கொண்டு சேவையை பயன்படுத்தலாம்.
உங்களை கையெழுத்தை நீங்கள் மட்டுமே அடையாளம் காணமுடியும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த முறை உருவாக்கப்பட்டது. சொற்களை விட ஒருவர் எழுத்து எண்களின் மாதிரியே மற்றவர்களால் எளிதில் அடையாளம் காணப்பட முடியாது என்பதால் இந்த முறையில் ஒருவர் எழுதி சம்ர்பிக்கும் எண்களே பயன்படுத்தப்படுகிறது.
பயோமெட்ரிக் உள்ளிட்ட மற்ற பாஸ்வேர்டு முறைகளை காட்டிலும் இது எளிமையானது என்பது இதை உருவாக்கிய ஸ்காட்லாந்து ஆய்வாளர் கரேன் ரெனாடு கருத்து. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் புரிதல் குறைபாடு கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அவர். வங்கி கணக்கி போன்றவற்றை இயக்க இந்த முறையை பயன்படுத்தாவிட்டாலும் சமூக இணையதளங்களில் இதை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார்.
ஏனோ இந்த முறை ஆய்வு நிலையை தாண்டி முன்னேற்வில்லை.
மூல கட்டுரையை பார்க்க: http://www.technologyreview.com/news/408147/handwritten-passwords/

4 Comments on “தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.”
ஜோதிஜி திருப்பூர்
தங்கள் தளம் மற்றும் எழுத்தைப் போல மிக நாகரிகமான நல்ல மனிதர் நீங்கள். அதிக நேரம் பேச முடியவில்லை. மீண்டும் ஒரு தடவை உங்களை சந்திக்க வேண்டும்.
cybersimman
தங்களை நேரில் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.அவசியம் விரிவாக பேசுவோம்.
அன்புடன் சிம்மன்
நான் தான் சதா!
அதெப்டிங்க தாண்டும்? கையெழுத்து போடுறவங்களுக்கு மட்டும் தான் அவங்க கையெழுத்து தெரியுங்களா? அவங்க கையெழுத்த பரிமாறிக் கொள்ற எல்லாருக்குமே தெரிஞ்சிருக்குமே! உதாரணமா, ஆஃபீஸ்’ல ஒருத்தர் கையெழுத்து போட்ட ஃபைல்’ல இன்னொருத்தர் பாத்தாலே, அவரோட கணிணியில இருந்து அந்த இன்னொருத்தர் அடையாளம் காட்டி யூஸ் பண்ணலாமே! :-/
cybersimman
சரியான கேள்வி தான் நண்ரே. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் பாஸ்வேர்டாக கணக்கில் கொள்ளப்படுவது ஒருவர் கையெழுத்து அல்ல: அவர் எண்களை எழுதும் விதம் .மற்றொன்று இந்த முறையின் பின்னே உள்ள சாப்ட்வேர் ஒருவது எழுத்தில் உள்ள தனிதனமைகளை அதாவது அதன் நீள அகலங்களை கவனித்து வைத்து கொள்கிறது. மூன்றாவது விஷயம் பாஸ்வேர்டில் உள்ள சிக்கல் மாற்று பாஸ்வேர்டுகளிலும் இருப்பது தான்.அது தான் பாஸ்வேர்டில் உள்ள பிரசச்னை.
அன்புடன் சிம்மன்.