குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேட்டிகன் கலாச்சார அமைச்சரான கியான்பிரான்கோ ரவாசி கருத்து படி இயேசு கிறிஸ்து தான் உலகில் முதன் முதலில் டிவிட்டரை பயன்படுத்தியர்!. அதாவது தகவல் பகிர்வு சாதனமாக எவை எல்லாம் டிவிட்டரின் தனித்தன்மையாக இருக்கின்றனவோ அந்த அம்சங்களை இயேசு கிறிஸ்து சீடர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவரது வாதம். இதற்கு ஆதாரமாக கிறிஸ்துவின் பெரும்பாலான உபதேசங்கள் 45 எழுத்துக்களுக்குள் அடங்கி விடுவதாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் வாட்டிகன் நகரில் நடைபெற்ற நாளிதழ் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது இந்த கருத்தை ரவாசி தெரிவித்துள்ளார்.
இது ஒருவிதத்தில் டிவிட்டர் சேவையின் செல்வாக்கை காட்டுகிறது.
மதத்தலைவர்களும் கூட டிவிட்டரின் ஆதார அம்சங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதன் அடையாளமாக இந்த கருத்து வெளிப்பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்.
நிற்க இயேசு கிறிஸ்து டிவிட்டர் செய்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றும் இணைய வெளியில் ஒரு கட்டுரை பார்த்த ஞாபகம். முடிந்தால் அதையும் தேடி கண்டுபிடித்து பகிர்கிறேன்.இப்போதைக்கு இந்த செய்தியின் மூலக்கட்டுரையை படியுங்கள்.;http://www.theatlantic.com/technology/archive/2013/09/claim-twitter-is-2-000-years-old/279997/