பெண்களிடம் பேசுவது எப்படி

SSH_logo_horizontal_highres-webஇப்படி ஒரு தலைப்பில் நான் பதிவெழுதுவது உங்களுக்கு வியப்பளிக்கலாம். பெண்களிடம் எப்படி பேசுவது என்பதில் யாருக்கும் வழிகாட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கான நிபுணத்துவமும் எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை. தவிர இனையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மட்டுமே இங்கு எழுதி வருகிறேன். அப்படியிருக்க இந்த தலைப்பை தேர்வு செய்தது தற்செயலானது.

தேடியந்திரம் மூலம் என வலைப்பதிவுக்கு வந்திருந்த வாசகர் ஒருவர் , பெண்ணிடம் பேசுவது எப்படி? என்னும் கேள்விக்கான பதிலை தேடியிருந்தார். இந்த கேள்விக்கான பதிலை நான் எந்த பதிவிலும் எழுதவில்லை. நிச்சயம் இது அந்த வாசகருக்கு ஏமாற்றத்தை தந்திருக்கலாம்.

பொதுவாக , தேடியந்திரம் மூலம் வருபவர்களின் தேடலை பூர்த்தி செய்ய வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். இந்த வாசகரின் கேள்வியை பார்த்ததும் , இதே கேள்வியை இணையத்தில் ஆங்கிலத்தில் தேடிப்பார்த்து பதில் அளித்தால் என்ன என தோன்றியது. அது தான் இந்த பதிவு.

இந்த கேள்விக்கான பட்டியலில் வரும் முதல் இணைப்பு ,பெண்ணிடம் எப்படி பேசுவது என்னும் விக்கிஹவ் தளத்தின் பதிவு. புகைப்படங்களுடன் இந்த வழிகாட்டி அமைந்த்திருக்கிறது. அடுத்த இணைப்பு ஆஸ்க்மென்.காம் தளத்தின் பத்து வழிகள். இந்த இணைப்புகள் பற்றி விரிவாக எழுதும் ஆர்வம் எனக்கில்லை. ஆனால் , ஸ்டாப் ஸ்டிரீட் ஹரஸ்மெண்ட் தளத்தின் பதிலை பற்றி சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன்.

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் தொல்லைகளை எதிர்த்து விழுப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமைப்பின் தளம் இது. பெண்களிடம் பேசுவது எப்படி எனும் தலைப்பில் இந்த தளத்தில் அமைந்துள்ள கட்டுரை சிந்தனைக்குறியது. இந்த கட்டுரை பெண்களை கவர நினைப்பவர்களுக்கானது அல்ல, பெண்களை புன்படுத்தி விடக்கூடாது என நினைப்பவர்களுக்கானது.

பெண்களை மனிதப்பிறவியாக கண்ணியத்துடன் ,மதிப்புடன் நடத்துங்கள் என்று இந்த கட்டுரை சொல்கிறது. அறிமுகம் இல்லாத பெண்ணிடம் பேசுவது என்றால் புன்சிரிப்புடன் ஹலோ சொல்லுங்கள். விசிலடிப்பது போன்றவற்றை எல்லாம் செய்யாதீர்கள். ஹாய் பேபி, ஹாய் கியூட்டி என்றெல்லாம் அழைக்காதீர்கள் என்று இந்த கட்டுரை அறிவுறுத்துகிறது.

பெண்களி அணிந்திருக்கும் உடை அவர்கள் குணம் பற்றி எதையும் சொல்வதில்லை,எனவே உடையை வைத்து எதையும் தப்பாக முடிவு செய்யாதீர்கள் என்றும் இந்த கட்டுரை சொல்கிறது.

பெண்ணிடம் எப்படி நடத்து கொள்வது என அறிய இந்த கட்டுரையை அவசியம் படித்து பாருங்கள்….;http://www.stopstreetharassment.org/resources/male-allies/how-to-talk-to-women/

மற்ற இணைப்புகளை ஆர்வம் உள்ளவர்கள் தாங்களே தேடிக்கொள்ளலாம்!.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பெண்களிடம் பேசுவது எப்படி

  1. நல்லதொரு பதிவு ஸார் !!, சிந்தனைக்குறிய பதிவாக இருந்தது, நன்றி ! 🙂

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி நண்பரே.

      Reply
  2. அன்பின் சைபர்சிம்மன்

    பயனுள்ள பதிவு – தலைப்பைப் பார்த்த உடன் என்னடா இது என நினைத்தேன். பிற்கு – ஒரு நண்பரின் விருப்பத்தினைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் – தங்களீன் இயல்பான செயலுக்கு விரோதமாக – ஒரு பதிவு எழுதியமை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      இணையத்தில் உள்ள நல்ல மற்றும் பயனுள்ள விஷ்யங்களை சுட்டிக்காட்டுவதில் இருந்தும் என்றும் விக மாட்டேன். தேடியத்திர்ம் மூலம் வருபவர்கள் பயன்படுத்தும் குறிச்சொற்கள் சில நேரங்களில் வியப்பை தருகிறது.
      நன்றி நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *