இணையத்தில் கோப்பு பகிர்வு தளங்களுக்கு குறைவே இல்லை. இருந்தும் புதிய கோப்பு தளங்கள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பது வாலபைல்.இயோ. நாங்கள் மற்ற தளங்கள் போல் இல்லை, உங்கள் கோப்புகளை சேமித்து வைப்பதில்லை என்று இந்த தளம் குறிப்பிடுகிறது. அதாவது உங்கள் அந்தரங்கத்தை மதிக்கிறோம் என்கிறது இந்த தளம்.
இணையவாசிகள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான காரணமாகவும் இது தான் இருக்கும். பொதுவாக கோப்பு ப்கிர்வு தளங்களில் பகிரப்படும் கோப்புகள் அதன் சர்வரிலேயே சேமிக்கப்படுகின்றன. இப்படி இணையவாசிகளின் கோப்புகள் எங்கே ஒரு சர்வரில் சேமிக்கப்படுவது ஆபத்தானது. ஆனால் இணையத்தில் பெரும்பாலான சேவைகள் பயனாளிகளின் தகவல்களை சேகரித்து கொள்கின்றன.அவற்றை கையாளுவதில் பயனாளிகளுக்கு அதிக உரிமை இருப்பதில்லை.
இந்த நிலைக்கு மாறாக இணையத்தில் தனிநபர் பகிருக் தகவலகளை அவர்கள் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவை என வலியுறுத்தப்படுகிறது.
கோப்பு பகிர்வை பொருத்தவரை இந்த கட்டுப்பாட்டை அளிக்கும் சேவையாக வாலபைல் அறிமுகமாகியுள்ளது. பாதுகாப்பானது என்பதோடு இதை பயன்படுத்துவதும் எளிதானது. கோப்பு பகிர விரும்புகிறவர்கள் இதில் நுழைந்து முதலில் தங்களுக்கான அரட்டை அறை ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அந்த அறையில் கோப்புகளை பதிவேற்ற வேண்டியது தான். புகைப்படம், ஆடியோ,வீடியோ என எல்லா வகையான கோப்புகளையு இப்படி பதிவேற்றி பகிர்ந்து கொள்ளலாம். எந்த கோப்பும் 24 மணி நேரத்தில் டெலிட் செய்யப்பட்டு விடும்.
புதிய சேவை . அதை உறுப்பினர்கள் இல்லை. பயன்படுத்தி பாருங்கள். குறைந்த்து இனையத்தில் அந்தரங்க பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வேனும் ஏற்படும்.