கிறிஸ்துமஸ் கதை தெரியுமா உங்களுக்கு ? கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பின் கதை. கிறிஸ்த்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடும் கதை. இந்த கதையை கொஞ்சம் புதுமையான முறையில் தெரிந்து கொள்ள ஆர்வமா? #ஏப்பி கிறிஸ்துமஸ் இணையதளம் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
அதென்ன #ஏப்பி கிறிஸ்தும்ஸ் என்று கேட்கலாம். கிறிஸ்துமஸ் வாழ்த்தான ஹேப்பி கிறிஸ்துமசை இணைய மொழியில் சின்னதாக மாற்றியிருக்கின்றனர். ஹேப்பியில் வரும் முதல் எழுத்தான எச் எழுத்தை இணைய உலகின் பரிபாஷையான ஹாஷ்டேகை குறிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளனர். அதற்கேற்ப புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டகிராமில் கிறிஸ்துமஸ் தொடர்பான ஹாஷ்டேகுடன் வெளியாகும் புகைப்படங்களை திரட்டி தருகின்றனர். ஆக இந்த தளத்தில் கிறிஸ்துமஸ் தொடர்பான இன்ஸ்டாகிராம் புகைபடங்களை பார்த்து ரசிக்கலாம்.
கூடவே, கிறிஸ்துமஸ் கதையையும் தெரிந்து கொள்ளலாம். புகைப்படங்களுக்கு கீழே , ஒவ்வொரு வரியாக கிறிஸ்துமஸ் கதையை படிக்கலாம். இயேசு பிறந்த கதையை இதைவிட அழகாக சொல்ல முடியாது என்று நினைக்க வைப்பது போல , அத்தனை நேரத்தியாக இந்த கதை சொல்லப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அதிகம் போனால் மொத்தமே 15 வாக்கியங்கள் தான் பயன்படுத்தியிருப்பார்கள்.அதற்குள் தேவனின் கதையை வார்த்தைகளில் கச்சிதமாக வெளிப்படுத்தி விடுகின்றனர். நீங்களும் படித்துப்பாருங்கள்.
இணைய படைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் http://www.wearesuburb.com/ குழு இந்த இயேசு கதை தளத்தை அமைத்துள்ளது.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
http://apichristmas.com/

0 Comments on “கிறிஸ்துமஸ் கதை சொல்லும் இணையதளம்”
wintvindia
Nice Post Wish you all the best By http://wintvindia.com/
cybersimman
தளத்தை உருவாக்கியவ்ருக்கு இந்த பாராட்டை சமர்பிக்கிறேன்.
அன்புடன் சிம்மன்