இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் நிச்சயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இந்த தளத்தின் பெயரே சுவாரஸ்யமானது. வேர்டு ஹிப்போ – இது தான் தளத்தின் பெயர். அதாவது ‘வார்த்தை நீர்யானை‘. ஜாலியான பெயராக தான் இருக்கு இல்லையா?
இந்த தளத்தில் நுழைந்ததுமே அழகிய நீர்யானை பொம்மையை பார்க்கலாம். அந்த நீர்யானை படத்துக்கு கீழே தான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியனும் வைச்சுக்கங்க, அந்த வார்த்தையை நீர்யானை படத்துக்கு கீழே உள்ள கட்டத்தில் டைப் செய்தால் போதும் . அந்த வார்த்தைக்கான அர்த்தம் வந்து நிற்கும். அட, இதற்கு தான் ஆன்லைன் அகராதிகள் இருக்கேன்னு நீங்கள் நினைக்கலாம். இந்த தளம் அதுக்கு மேலே. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு இந்த தளத்தில் என்ன எல்லாம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டால் அசந்து போவீங்க.
இதில் வார்த்தையை டைப் செய்ததுமே , அந்த வார்த்தை தொடர்பாக உங்களுக்கு என்ன தேவை என்று கேட்கப்படும். அதாவது அந்த வார்த்தைக்கான எதிர் சொல் வேணுமா ? அல்லது அதற்கான இன்னொரு வார்த்தை வேணுமா? இல்லை அந்த சொல்லுடன் எதுகை மோனை நயத்துடன் சேர்ந்து ஒலிக்க கூடிய சொற்கள் தேவையா ? இப்படி பலவிதமான தேர்வுகள் கொடுகப்பட்டிருக்கும். இதற்காகவே தனியே ஒரு பட்டியல் இருக்கு. அவற்றில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்தால் , அதற்கான பதில் அடுத்த பக்கமாக வந்து நிற்கும்.
நீங்கள் கேட்ட பதிலோடு இருக்கும் இந்த புதிய பக்கத்தை பார்த்தால் அப்படியே அசந்து போயிடுவீங்க ! ஏன்னா, நீங்க தேடிய பதிலும் கச்சிதமாக இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் தேடாத பலவிஷயங்களுக்கான பரிந்துரைகளும் இருக்கும். இந்த பரிந்துரைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்தால் அந்த வார்த்தை தொடர்பான அநேக பயன்பாடுகள் அத்துபடியாகிவிடும்.
உதாரணத்துக்கு ஒரு வார்த்தையை தேடிப்பார்ப்போமா ? இண்டரியேக்டிவ் ( interactive ) – ’இரண்டு நபர்கள் அல்லது பொருட்கள் பரஸ்பரம் பாதிப்பு கொண்டிருப்பது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம் சொல்லப்படுகிறது. கம்ப்யூட்டர் உலகில் அதிகம் பயன்படுத்தப்பும் சொல்லாகவும் இருப்பதால் அந்த பயன்பாடு பற்றிய பொருளும் இடம்பெற்றுள்ளது.
சரி, இந்த வார்த்தைக்கு அர்த்தம் கிடைச்சாச்சு. அடுத்து என்ன ?
இண்டரியேக்டிவ் போலவே வேறு வார்த்தைகள் என்ன என்ன ? இதற்கான எதிர் பதம் என்ன ? அவற்றையும் தேடிப்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போலவே இந்த பக்கத்திலேயே இவற்றுக்கான பரிந்துரைகள் இருக்கு. அவற்றில் தேவையானதை கிளிக் செய்தால் போதும். கம்யூனிகேட்டிங் ( communicating) கொலாப்ரேட்டி

2 Comments on “விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்.”
Narayanan
Nice information.i will check
cybersimman
tell your views.
thanks
simman