இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை.
லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம்.
இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தானியங்கி லைக் சேவை. இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் அதன் பிறகு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருப்பவர்கள் பக்கத்தில் புதிதாக வெளியாகும் புகைப்படங்களையும் எல்லாம் அவர்கள் சார்பாக இந்த சேவை தானாகவே லைக் செய்து விடும். மிகவும் பொறுத்தமாக இந்த செயலிக்கு லவ்மேட்டிகலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தானாக லைக் செய்ய ஒரு செயலியா ? இது தேவை தானா என்று கேட்கலாம். லைக் தெரிவிப்பது இயல்பானதாக இருக்க வேண்டாமா என்றும் கேட்கலாம். ஆனால் லவ்மேட்டிகலில் செயலியை உருவாக்கியவர் இதற்கு அழகான பதில் வைத்திருக்கிறார். பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராம் சேவை வித்தியாசமானது என்கிறார் அவர். பேஸ்புக்கில் தகவல்கள் இடம்பெறுகின்றன. அவற்றை யாரும் லைக் செய்யவில்லை என்றால் கூட பார்த்திருப்பார்கள் படித்திருப்பார்கள் என நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இன்ஸ்டாகிராமில் வெறும் புகைப்படங்கள் தான். அவற்றை லைக் செய்யவில்லை என்றால் படத்தை பார்க்கவில்லை என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. எனவே தான் , இன்ஸ்டாகிராமில் நண்பர்கள் புகைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை தானாகவே லைக் செய்ய இந்த செயலையை உருவாக்கியதாக அதை உருவாக்கிய ரமீத் சாவ்லா கூறியுள்ளார்.
சாவ்லாவின் நண்பர் ஒருவர் , நீ ஏன் எனது இன்ஸ்டாகிராம் படத்தை லைக் செய்யவில்லை என்று கவலையோடு கேட்ட போது , சாவ்லாவுக்கு எல்லோரும் லைக் செய்வதை எத்தனை முக்கியமாக கருதுகின்றனர் என்பதும் ,லைக் செய்யப்படாமல் இருப்பதால் கவலை அடைவதும் புரிய வந்திருக்கிறது. அதன் பயனாகவே இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.
லைக் பிரியர்கள் விரும்பக்கூடிய இந்த செயலியை இன்ஸ்டாகிராம் நிறுத்து வைத்துள்ளதாம்.
இணைய முகவரி; http://lovematically.com/