நீங்களும் வானிலை நிபுணராகலாம் !

முதலில் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. மழை பெய்திருப்பதை பல முறை பார்த்து ரசித்திருப்பீர்கள். மழைத்துளியின் அளவை உங்களால் சொல்ல முடியுமா? பதில் துல்லியமாக இருக்க வேண்டும் என்றில்லை. சும்மா முயன்று பாருங்கள். சரி இப்போது உங்கள் பதிலை சரியான இந்த பதிலோடு பொருத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்; ஒரு மழைத்துளியின் அளவு உண்மையில் ஒரு செண்டிமீட்டருக்கும் குறைவானது. மழைத்துளியின் சுற்றளவு ஒரு இன்ச்சில் நூறில் ஒரு பங்கில் இருந்து அதாவது .0254 செண்டி மீட்டரில் இருந்து ஒரு இன்ச்சில் நான்கில் ஒரு பகுதியாக ( .635 செண்டி மீட்டர்) இருக்கலாம். சரி இன்னொரு கேள்வி , மழைத்துளி எவ்வளவு வேகத்தில் வந்து விழுகிறது தெரியுமா? மணிக்கு 7 முதல் 18 மைல் வேகத்தில் மழைத்துளி பூமிக்கு வந்து சேர்கிறது. அதாவது விநாடிக்கு 3 முதல் 8 மீட்டர் வேகத்தில் வருகிறது.

மழை இருக்கட்டும், இப்போது மின்னல் தொடர்பாக ஒரு கேள்வி. மின்னல் என்பது மின்சாரம் தான். அந்த மின்னல் எந்த அளவுக்கு வெப்பமானது தெரியுமா? மலைத்து விடாதீர்கள், 54,000 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மின்னல் வெப்பமானது. அதாவது சூரியனின் மேல் பகுதியை விட 6 மடங்கு உஷ்ணமானது ! அம்மாடியோவ் என்று சொல்லத்தோன்றுகிறதா? மின்னல் எனும் போது இடியும் சேர்த்து நினைவுக்கு வருகிறதா? இடி மின்னல் என்று தானே வழக்கமாக சொல்கிறோம். அதுவும் சரி தான், எனெனில் மின்னல் உண்டாவதால் தான் இடி உண்டாகிறது. மேகத்தில் இருந்து மின்னல் புறப்பட்டு வரும் போது அது காற்றில் ஒரு சிறு துளையை உண்டாக்குகிறது. மின்னல் மாயமாக மறைந்த்தும் காற்று அந்த இடத்தில் சென்று ஒட்டிக்கொள்கிறது. அப்போது உண்டாகும் ஒலியை தான் இடியாக கேட்கிறோம். இந்த தகவல்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறதா ? அப்படி என்றால் வாருங்கள் வானிலை தொடர்பாக இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வெதர்விஸ்கிட்ஸ் (http://www.weatherwizkids.com/index.htm )  இணையதளத்திற்கு போகலாம். இந்த தளத்தில் தான் வானிலை பற்றிய எல்லா விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்களைப்போன்ற சுட்டீஸ்களுக்கு போரடிக்காமல் வானிலையின் அடிப்படை விஷயங்களையும் அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளையும் கற்றுத்தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தளம் இது.

வானிலை என்றவுடன் மேகம் எப்படி உண்டாகிறது? புயல் மழை வருவது எப்படி? காற்று எதனால் வீசுகிறது ? போன்ற அடுகடுக்கான கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம். இது போன்ற எல்லா கேள்விகளுக்கும் இந்த தளத்தில் பதில் தெரிந்து கொள்ளலாம். ஹரிகேன் என்று சொல்லப்படும் சூறாவளியில் துவங்கி , மேகங்கள், இடி மின்னல், காற்று, வெப்பம் , பூகம்பம்,எரிமலை என வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தனித்தனி தலைப்புகளில் அழகாக கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு காற்று என்றால் என்ன என பார்ப்போமா? காற்று என்பது வாயுவின் நகர்தலாகும். பூமிக்கு மேல் பகுதியில் உள்ள காற்று சூரிய வெப்பத்தால் சிரற்ற தன்மையால் உஷ்ணமாக்கப்படுவதால் , உஷ்ணமான வாயு மேல் பக்கமாக உயர்ந்து செல்வதால் சற்றே குளிர்வாக உள்ள வாயு அந்த பகுதிக்கு நகர்வதால் காற்று வீசத்துவங்குகிறது. காற்றில் இன்னும் என்ன எல்லாம் விஷயங்கள் இருக்கிறது, காற்றாலை எப்படி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *