இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்ப முடியாமல் திண்டாடும் அனுபவமும் இப்போது ஏற்படுவது இல்லை. டிராப் பாக்ஸ் சேவையில் துவங்கி , கூகுல் டிரைவ், மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் ( ஸ்கை டிரைவ்) என பல வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் கோப்பு பகிர்வில் உதவ புதிய சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.
இந்த திசையில் சமீபத்திய வரவு, பைல்ஸ் ஆப் பிரெண்ட்ஸ். நண்பர்களுக்கு பெரிய கோப்புகளை அனுப்பி வைக்கும் அவசியம் ஏற்பட்டால் இந்த சேவையை பயன்படுத்த்தலாம்.
கோப்புகளை பகிர்வது எளிதாகவே இருக்கிறது. அனுப்ப வேண்டிய கோப்பை கிளிக் செய்தோ , அல்லது இழுத்து வந்தோ அதற்குறிய கட்டத்தில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்து நண்பரின் மெயில் முகவரியையும் குறிப்பிட்டால் போதும். கோப்பு போய் சேர்ந்துவிடும். அனுப்பும் போது கோப்பு தொடர்பான செய்தியையும் சேர்த்து குறிப்பிடலாம்.
எளிமையான பயனுள்ள சேவை. அடிப்படையில் இலவசமானது. ஆனால் ஒரு ஜிபி கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும்.
கட்டண சேவைக்கு மாறினால் அதிக கோப்புத்திறன் உள்ளிட்ட கூடுதல் வசதி உண்டு. பழைய கோப்புகளை பார்ப்பது, நமக்கென தனி இணைய முகவரி ஆகிய அம்சங்கள் இதில் அடக்கம்.
வர்த்தக நோக்கில் அதிக கோப்புகளை பகிர்ந்து கொள்பவர்களுக்கு இந்த கட்டண சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இணைய முகவரி: https://filestofriends.com/
———————-
பி.கு; டிராப் பாக்ஸ் பற்றி ஒரு குறுந்தொடர் எழுதும் அளவுக்கு விஷ்யம் இருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு அதை படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தெரிவித்தால் மற்ற பதிவுகளோடு டிராப்பாகஸ் பற்றியும் அடிக்கடி எழுத விருப்பம். இன்றைய கிலவுட் கம்பூட்டிங் யுகத்தில் டிராப்பாக்ஸ் போன்ற சேவைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். நம்முடைய எல்லா கோப்புகளையும் அவர்களை நம்பி ஒப்படைத்து விடுகிறோமே !
அன்புடன் சிம்மன்.
———

2 Comments on “நண்பர்களுக்கு கோப்புகளை எளிதாக அனுப்ப ஒரு இணைய சேவை”
Vijay
Nice
cybersimman
thanks