காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.
சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் யாருமே இல்லை’ என்பது போன்ற பாராட்டு வாசகத்தோடு இந்த இணையதளம் உங்களை வரவேற்கும்.
நல்லதாக நாலு வார்த்தை என்பார்களே, அதே போல இந்த இணையதளத்தில் எப்போதுமே ஊங்களைப்பற்றி ஊக்கம் அளிக்கும் வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்த வாசகம் உங்களை புன்னகைக்க வைத்து, உற்சாகம் கொள்ள வைத்தால், கிழே உள்ள நன்றி, பட்டனை அழுத்தலாம். ( உங்களை மகிழ்வித்த வாசகத்தை அச்சிட்ட வடிவில் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது ). இல்லை, இன்னும் மோசமான மனநிலை தான் நீடிக்கிறது எனும் பட்டனை அழுத்தினால், உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய வேறு ஒரு வாசகம் தோன்றும்.
குறிப்பாக உங்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமான வாசகங்கள் தான் என்றாலும், இந்த பாராட்டுக்கள் நிச்சயம் மன மகிழ்ச்சியை தரும்.
அவசர உலகில் இப்படி அவசரகால பாராட்டும் தேவைப்பட தான் செய்கிறது இல்லையா?
இணையதள முகவரி: http://emergencycompliment.com/
—
இந்த எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இணையதளத்தை அமெரிக்காவை சேர்ந்த மேக் செங் என்பவர் உருவககியுள்ளார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த நல்லெண்ண இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் பாதிப்பால் ஒரு யூடியூப் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாசகங்களை தொகுத்து புத்தகமாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். இது அவ்ரது இணையதளம்: http://megssenk.com/

2 Comments on “உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்”
Cheena ( சீனா )
அன்பின் சைபர் சிம்மன் – நல்லதொரு அறிமுகம் – மனம் சோர்ந்திருக்கையில் சென்று பார்க்க வேண்டிய தளம் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
மிக்க நன்றி. என்னைப்பொருத்த வரை தங்களைப்போன்றொரின் பின்னூட்டங்களே ஊக்கம் தருகின்றன.
அன்புடன் சிம்மன்