ஹார்ட்பிலீட் பாதிப்பை கண்டுபிடித்த இந்தியர்

ஹார்ட்பிலீடு பாதிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட பெரிதாக இருப்பதாக சொல்கின்றனர். இணைய பாதுகாப்பு நிபுணர் ஒருவர், பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவில் 1 முதல் 10 ல் இதன் அச்சுறுத்தல் 11 என்று கூறியிருக்கிறார். ஹார்ட்பிலீடு பாதிப்பு பற்றி இணையத்தில் பக்கம் பக்கமாக எழுதுகின்றனர். அவற்றில் முக்கியமான சில விஷயங்கள் ; முதலில் இது வைரஸ் அல்ல. ஒரு குறைபாடு. தொழில்நுட்ப மொழியில் ’பக்’ ( Bug). நாம் புரிந்து கொள்வதற்காக சாப்ட்வேர் ஓட்டை என வைத்துக்கொள்ளலாம். இணையத்தில் என்கிரிப்ஷன் செயல்பாட்டுக்கான சாப்ட்வேர் நூலகத்தில் ஏற்பட்ட குறைபாடு என்கின்றனர். 

நிற்க இந்த குறைப்பாட்டை முதலில் கண்டுபிடிதத்து கோட்னாமிக்ஸ் எனும் நிறுவனம் மற்றும் கூகுல் பொறியாளர் ஒருவர் என குறிப்பிடப்படுகிறது. கூகுல் பொறியாளர் பெயர் நீல் மேத்தா. அட நம் நாட்டுக்காரர். 

மேத்தாவுக்கு இந்த கண்டுபடிப்பிற்காக நிறைய கைகுலுக்கல்களும் டாலரில் ரொக்கப்பரிசும் கிடைத்திருகிறது. அந்த பரிசை மேத்தா, பத்திரிகை சுதந்திரத்துக்காக பாடுபடும் அமைப்பு ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். 

மேலும் அப்டேட்களை எதிர்பாருங்கள். 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

2 Comments on “ஹார்ட்பிலீட் பாதிப்பை கண்டுபிடித்த இந்தியர்

  1. ஹார்ட்பிலீட் ரொம்ப பிரச்சினையாகத்தான் இருக்கு போல. பல தளங்களில் இருந்து பாஸ்வேர்ட் ஐ மாற்றிவிடவேண்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.

    Reply
    1. cybersimman

      பாஸ்வேர்டை மாற்றும் முன் இமெயில் உண்மையில் அந்த தளத்தில் இருந்து தான் வந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பிஷிங் மோசடியும் இருக்கலாம். பாஸ்வேர்டு நிர்வாகத்திற்கு மாற இது நல்ல நேரம் என்கின்றனர். கைட்பாசை பரிச்லிக்கலாம். ஓபன் சோர்ஸ் மற்றும் இலவசம்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *