ஜிமெயில் பிறந்த கதை

gm1இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று ஆண்டு கால உழைப்பின் விளைவாக உருவானது. கூகிளிடம் இருந்து ஒரு இமெயில் சேவையை பலரும் எதிர்பார்த்திராத நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர்களில் பலரே கூட அதன் தேவையை கேள்விகுறியாக்கியதை மீறி ஜிமெயில் அறிமுகமாகி இணைய உலகை வென்றது. ஜிமெயிலை அனைவருக்கும் தெரியும் ,ஆனால் அதை உருவாக்கிய பால் புக்கைட் பற்றி எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஜிமெயில் உருவான கதை திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தம் கூட ! இணைய உலகின் மைல்கற்களின் ஒன்றான ஜிமெயிலின் கதை இதோ:

2004 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ஜிமெயில் சேவை அறிமுகமானது. அப்போது அது உண்மையான சேவை என்று யாருமே நம்பவில்லை. முட்டாள்கள் தினம் என்று வர்ணிக்கப்படும் ஏப்ரல் முதல் தேதியில் அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பது மட்டும் அல்ல, அப்போது கூகிள் இமெயில் சேவை ஒன்றை அறிமுகம் செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை. 1998 ல் அறிமுகமான கூகிள் அடுத்த சில ஆண்டுகளில் முன்னணி தேடியந்திரமாக உருவாகியது. தேடியந்திரங்கள் எல்லாம் , வலைவாசலாக உருமாறுவதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் கூகிள் மிக எளிமையான முகப்பு பக்கத்துடன் தூயத்தேடியந்திரமாக தேடல் சேவையை மட்டும் துல்லியமாக வழங்கி இணையவாசிகளை கவ்ர்ந்திருந்தது. தேடலில் இருந்து கவனத்தை திசைத்திருப்புவதில்லை என்று கூகிள் உறுதியாக இருந்ததால் அதனிடம் இருந்து இமெயில் சேவை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படாதது இயல்பானது தான். ஆனால் 2001 ம் ஆண்டில் இருந்தே கூகிள் இமெயில் சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது.

ஜிமெயிலின் பிரம்மா

கூகுளின் 23 வது ஊழியராக சேர்ந்திருந்த பால் புக்கைட் ( Paul Buchheit ) எனும் மென்பொருளாளரிடம் தான் புதிய இமெயில் சேவையை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. புக்கைட் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இமெயில் உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு அதை கைவிட்டவர். இந்த முறை பயனுள்ள இமெயில் சேவையை உருவாக்கிவிட வேண்டும் எனும் உறுதியில் இருந்தார். முதல் நிலையில் இருந்தே பயனுள்ள ஒரு சேவையை உருவாக்கி அதை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டு என்பதை தனக்கான இலக்காகவும் நிர்ணயித்துக்கொண்டார்.

தேடலே முதல் புள்ளி

இப்படி அவர் முதலில் உருவாக்கிய சேவை தனது இமெயிலுக்கான தேடல் வசதி.
அந்த கால கட்டத்தில் கூகிள் ஊழியர்களுக்கு அலுவல் நிமித்தமாக நூற்றுக்கணக்கான மெயில்கள் வந்து கொண்டிருந்தன. புக்கைட் இன்பாக்சிலும் மெயில்கள் குவியவே அவற்றை தேடிப்பார்ப்பதற்கான வசதியை உருவாக்கினார். இந்த தேடல் சேவைக்கு என்று தனியே சர்வர் இல்லாமல் அவரது சர்வரிலேயே செயல்பட்டது. இந்த இமெயில் தேடல் வசதியை அவர் சக ஊழியர்களிடம் காண்பித்து கருத்து கேட்டார். அட பயனுள்ள சேவையாக இருக்கிறதே என்றவர்கள், தங்கள் மெயிலையும் தேடும் வசதி தேவை என்று கேட்டனர். இதனால் தனது சேவையின் பயன்பாடு குறித்து திருப்தி அடைந்த புக்கைட் விரைவிலேயே எல்லா மெயில்களையும் தேடக்கூடியதாக அதை மேம்படுத்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

6 Comments on “ஜிமெயில் பிறந்த கதை

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    http://www.Nikandu.com
    நிகண்டு.காம்

    Reply
    1. cybersimman

  2. தெரியாத பல தகவல்களை தெரிந்துகொண்டேன்.

    Reply
    1. cybersimman

      ஆம், நிச்சயமாக இதற்கு வித்திட்ட மூல கட்டுரை டைம் இதழில் வெளியானது. மேலும் பல இடங்களில் தகவல்களை திரட்டி இதை எழுதினேன். ஒரு பிரபலமான சேவை உருவான விதத்தை ஆய்வு செய்து எழுதியிருந்த விதம் கண்டு அசந்தி போனேன். தமிழில் ஓரளுவுக்கேனும் நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன்.
      இதே போல நம் இணைய சேவைகள் பிறந்த விதம் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்பது விருப்பம். ஏதேனும் பரிந்துரைகள்?

      அன்புடன் சிம்மன்

      Reply
  3. அன்பின் சைபர் சிம்மன் – அருமையான பதிவு – ஜிமெயிலின் துவக்கத்தில் இருந்து இன்றிருக்கும் நிலை வரை அலசி ஆராய்ந்து பதிவாக இட்டமை நன்று – பொறுமையாக இந்த நீண்ட பதிவினைப் படித்து இரசித்து ம்கிழ்ந்தேன் – தங்கலீன் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ஜிமெயில் அறிமுகமான காலத்தில் இருந்து அதனை உற்சாகமாக கவனித்து வருகிறேன். தங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *