கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, முன்னதகாவே தகவல்களை தெரிந்து கொண்டு செல்லும் போது எந்த டென்ஷனும் இல்லாமல் சுற்றுலாவை அனுபவிக்கலாம்.
சுற்றுலா ஆய்வு
சரி,சுற்றுலா செல்வதற்கான இடத்தையே தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம், நம் விருப்பத்திற்கு ஏற்ற சுற்றுலா தலங்களை தேர்வு செய்வதற்கான ஆய்வையும் இணையம் மூலமே மேற்கொள்ளலாம். இதற்காக என்றே பிரத்யேகமாக பல பயண இணையதளங்கள் இருக்கின்றன. இந்த ஆய்வை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் வண்ணமயமாக மேற்கொள்ள விரும்பினால் , இருக்கவே இருக்கிறது பிண்டிரெஸ்ட் சேவை.
பிண்டிரெஸ்ட் சேவை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதுவும் பேஸ்புக் போல சமூக வலைப்பின்னல் சேவை தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த சேவையில் புகைப்படங்கள் தான் எல்லாம். புகைப்படங்களை பின் செய்வதன் முலம் இதில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.பகிர்ந்து கொள்ளலாம்.
பிண்டிரெஸ்ட் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. இளம் பெண்கள் திருமண ஏற்பாடுகளை திட்டமிட பிண்ட்ரெஸ்ட்டை பயன்படுத்துகின்றனர். வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்ய தேவையான ஊக்கம் மற்றும் யோசனைகளை பெற பயன்படுத்துகின்றனர். இதே போலவே சுற்றுலா பயணங்களை திட்டமிடவும் பிண்டிரெஸ்ட்டை அழகாக பயன்படுத்தலாம்.
சுற்றுலா செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் துவங்கி அந்த இட்த்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வது வரை அனைத்தையும் பிண்ட்ட்ரெஸ்ட் பலகை மூலமே செய்துவிடலாம்.
பிண்டிரெஸ்ட் ஒரு அறிமுகம்
முதலில் பிண்டிரெஸ் சேவை பற்றி சுருக்கமாக அறிமுக்ம் செய்து கொள்ளலாம். பிண்டிரெஸ்ட் இணைய குறிப்பு பலகை என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது இணையத்தில் நமக்கான பலகையை உருவாக்கி அதில் தேவையான விவரங்களை புகைப்படம் வாயிலாக குறித்து வைத்துக்கொள்ளலாம். இதை பின் செய்வது என பிண்டிரெஸ்ட் குறிப்பிடுகிறது. பள்ளி ,கல்லூரிகளில் அறிவிப்பு பலகையில் தகவல்க்ளை குறித்து வைப்பது போல இதில் நமக்கான பலகையில் புகைப்பட தகவல்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். எந்த தலைப்பின் கீழும் பலகையை உருவாக்கலாம். இந்த பலகையை மற்றவர்களிடன் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் பலகையில் பிடித்த தகவல்களை நாமும் பின் செய்து கொள்ளலாம். டிவிட்டர் போலவே இதிலும் சக உறுப்பினர்களை பின்தொடர்லாம். இப்படி புகைப்படம் சார்ந்த சுவாரஸ்யமான சமூக வலைப்பின்னல் சேவையாக பிண்டிரெஸ்ட் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் இருப்பிடம் சார்ந்த தகவல் பரிமாற்றத்துக்கான பிலேஸ்பின்ஸ் வசதி அறிமுகம் செய்யபட்டது.
பிண்டெர்ஸ்ட் வழி திட்டமிடல்
பிண்டிரெஸ்ட் அறிமுகம் செய்துள்ள பிலேஸ்பின்ஸ் வசதி தான் இப்போது பயண திட்டமிடலுக்கு அருமையாக கைகொடுக்கிறது. பிண்டிரெஸ்ட்டில் வழக்கமாக புகைப்படங்களை பின் செய்து கொள்ளலாம். தொடர்புடை புகைப்படங்களையும் பின் செய்து கொள்ளலாம். இந்த புகைப்படங்களில் இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணைப்பதற்கும் அந்த புகைப

2 Comments on “பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?”
victor
பிண்டிரெஸ்ட் – What is the web address
cybersimman
https://www.pinterest.com/