இன்றைய இமெயிலை நாளை அனுப்பும் தேவை உங்களுக்கு ஏற்படலாம். அதாவது ஒரு இமெயிலை அதை எழுதியவுடன் அனுப்பாமல் குறிப்பிட்ட வேறு ஒரு நாளில் திட்டமிட்டு அனுப்ப விரும்பலாம். அலுவல் நிமித்தமாக , வர்த்தக நோக்கமாக தனிப்பட்ட தேவைக்காக என பல காரணங்களினால் நீங்கள் ஒரு மெயிலை பின்னர் குறிப்பிட்ட ஒரு நாளில் அனுப்பி வைக்க விரும்பலாம். இதற்கான எளிய வழி இமெயிலை டைப் செய்து விட்டு திட்டமிட்ட நாளில் அனுப்பிக்கொள்ளலாம் என்று அதை சேமித்து வைப்பது. இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் மறதி அல்லது வேலை பளு காரணமாக அன்றைய தினமு இமெயிலை அனுப்பி வைக்க முடியாமல் போகலாம்.
இதை தவிரப்பதற்கான எளிய வழியாக செண்ட்லேட்டர் எக்ஸ்டென்ஷன் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசரில் செயல்படும் இந்த எக்ஸ்டென்ஷன் , பின்னாளில் அனுப்பி வைக்க விரும்பும் இமெயிலை அதே நாளின் அனுப்பி வைக்க உதவுகிறது.
இந்த சேவையை பயன்படுத்த முதலில் எக்ஸ்டென்ஷனை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் மெயில் கணக்கை அணுக அனுமதி அளிக்க வேண்டும். அவ்வளவு தான், மற்றவற்றை இந்த சேவை கவனித்துக்கொள்ளும். எப்போது இமெயிலை பிறகு அனுப்பி வைக்க விரும்புகிறீர்களோ அப்போது மெயிலை டைப் செய்து விட்டு, அனுப்புக (செண்ட்) கட்டளையை கிளிக் செய்வதற்கு பதில் இந்த சேவை வழங்கும் பின்னாளில் அனுப்புக ( செண்ட் லேட்டர்) கட்டளையை கிளிக் செய்து, எந்த நாளில் அந்த மெயில் அனுப்பபட வேண்டும் என குறிப்பிட்டு விட்டால் , சரியாக அன்றைய தினம் அந்த மெயில் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
மெயில் அனுப்பி வைக்கப்பட வேண்டிய நாளை வார்த்தைகளிலும் குறிப்பிடலாம். அல்லது இதில் இணைக்கப்பட்டுள்ள கூகுல் காலண்டரில் இருந்து தேதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே கூட நினைவூட்டல்களை அனுப்பி கொள்ளலாம்.
இந்த சேவையில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி, எந்த மெயிலுக்கான நினைவூட்டல் வசதியையும் பெற்லாம் என்பது தான். குறிப்பிட்ட முக்கிய இமெயிலை அடுத்த வாரம் மீண்டும் பார்க்க வேண்டும் என நினைத்தால் எப்போது நினைவு ப்டுத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். மெயிலின் மேலே இதற்கென உள்ள கடிகார பகுதியில் இதற்கான வசதி உள்ளது. இதில் குறிப்பிடும் தினத்தில் அந்த இமெயில் நினைவுபடுத்தப்படும் . நீங்கள் அனுப்பிய் மெயிலுக்கு பதில் வரவில்லை என்றால் மட்டும் நினைவூட்டும்படி கூட அமைத்துக்கொள்ளலாம்.
இமெயிலை கையாளுவதில் தான் அதன் பயன்பாடே இருக்கிறது. இமெயிலை மேலும் சிறப்பாக கையாள உதவும் சேவைகளில் இந்த எக்ஸ்டென்ஷனையும் சேர்த்துக்கொள்ளலாம்.நீங்கள் ஜிமெயில் பயனாளி என்றால் இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்திப்பார்க்கலாம்.
பிரவுசர் நீட்டிப்பை பெற: https://chrome.google.com/webstore/detail/sndlatr-beta-for-gmail/nfddgbpdnaeliohhkbdbcmenpnkepkgn
————–
இமெயில் தொடர்பாக பயனுள்ள சில பதிவுகள் :
1.இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி.
2.தற்கொலை செய்து கொள்ளும் இமெயில்கள்!
3.
இமெயில் வழியே இணைய பக்கத்தை அனுப்பும் வசதி

2 Comments on “விரும்பிய நேரத்தில் இமெயில் அனுப்ப உதவும் சேவை”
அன்பின் சீனா .
அன்பின் சைபர் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நன்றி நண்பரே. நலமா?