இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/.
இந்த சேவை , இமெயிலில் வரும் கட்டுரை இணைப்புகளை காத்திருக்காமல் படிக்க உதவுகிறது. மெயில்ல் வரும் இணைப்புகளை கிள்க் செய்தாலே படிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மை தான். படிக்கலாம் தான். ஆனால் அதற்கு அந்த இணைப்பு உயிர்பெறும் வரை காத்திருக்க வேண்டுமே ! அதாவது அந்த இணைய பக்கம் லோட் ஆன பின் தானே படிக்க முடியும். சில நேரங்களில் இணைய பக்கம் நம் கோரிக்கைக்கு கீழ் படியாமல் நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
இது போன்ற நேரங்களில் இணைய அவசரம் நம்மை பிடித்தாட்டும். மெயில் பெட்டியில் இருந்து வெளியே எட்டிப்பார்க்கும் போது உடனே அந்த கட்டுரையை படித்து பார்க்க விரும்பலாம். இதற்குள் இமெயிலிலும் இணையத்திலும் பல வேலைகள் காத்திருக்கலாம்.என்ன செய்ய, பேஸ்புக்கில் அப்டேட் செய்ய வேண்டும். புதிய தளம் பார்க்க வேண்டும். எவ்வளவு வேலை இருக்கின்றன.
பெட்ச் ட்கெஸ்ட் இந்த இணைய அவசரத்திற்கு தீர்வாக அமைந்துள்ளது. உங்களுக்கு வரும் இமெயில் இணைப்புகளை, நீங்கள் இந்த fetch@to.andyjiang.com தளத்திற்கு பார்வேர்டு செய்தால் போதும் . இந்த தளம் அந்த இணைப்பிலுள்ள கட்டுரை லோடாகும் வரை காத்திருந்து ,அந்த கட்டுரையை மட்டும் உங்களுக்கு மெயிலாக அனுப்பும். மெயிலை கிளிக் செய்தால் கட்டுரையை மட்டும் படிக்கலாம்.
இணைய காத்திருப்பில் இருந்து விடுவிக்கும் இந்த சேவை எனக்கு பிடித்திருக்கிறது. உங்களுக்கு ?
——