உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப்போட்டியை நினைத்தே ஆறுதல் அடைந்திருக்கிறது. பிரேசில் தான் ஐயோ பாவம் சோகத்தில் இருக்கிறது. கோப்பையை அசத்தலாக நடத்தி முடித்தாலும் சொந்த நாட்டு அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் வாங்கிய அடி இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக இருக்கும் .
நிற்க, நடந்து முடிந்த உலக கோப்பையின் மலரும் நினைவுகளில் அசை போட விருப்பமா? ஆன்லைனில் அதற்கு அழகான வழிகள் இருக்கின்றன. யூடியூப்பிலும் , ஆறு நொடி வீடியோ சேவையான வைனிலும் கோல்களையும் முக்கிய தருணங்களையும் பார்த்து ரசிப்பதை தாண்டி அழகான வழிகள் இருக்கின்றன. கில்லாடி கலைஞர்கள் சிலர் உலக கோப்பையின் மறக்க முடியாத தருணங்களை கலைவடிவமாக்கி ரசிக்க வைத்துள்ளனர்.
கலையாக மாறிய கோல்கள்
டேவிட் பெக்காமில் துவங்கி மெஸ்ஸி வரை எத்தனையோ வீரர்களின் ஃப்ரி கிக் அற்புத்ததை புகைப்படமாகவும் ,வீடியோ காட்சியாகவும் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால் ஃபிரி கிக்கை வரைகலையாக பார்த்திருக்கிறீர்களா? ரிக் ஹாங்சின் இணையதளத்திற்கு சென்றால் , கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் அடித்த ஃபிரி கிக்கை வரைகலையாக பார்க்கலாம். கோடுகளாக இருக்கும் இந்த படத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்திர்க்ள் என்றால் லூயிஸ் அடித்த ஃபிரி கிக் அப்படியே மனக்கண்ணில் உயிர் பெறும். ரிக் ஹாங்ஸ் , சும்மா ஒரு கோல் போஸ்ட்டை வரைந்து , அதில் லூயிஸ் கோல் அடித்த கணத்தில் வீரர்கள் இருந்த இடங்களை புள்ளிகளாகவும் கோடுகளாகவும் வரைந்திருப்பதன் மூலமே அந்த காட்சியின் துடிப்பான இயக்கத்தை வரைகலையாக்கி இருக்கிறார்.
இதே போல பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹாவர்டு பாய்ந்து பாய்ந்து பந்தை பிடித்து கோல்களை சேவ் செய்த சாகசத்தையும் அழகான வரைகலை ஆக்கி இருக்கிறார். ஹாவர்டு எங்கெல்லாம் பந்தை பிடித்தார் என்பதை கோல் கம்பாம் முன் வட்டங்களாக சுட்டிக்காட்டியே அவரது அருமையை உணர்த்தியிருக்கிறார் ஹாங்ஸ்.
இத்தாலி வீர்ர் காதை உருகுவே வீரர் சுவ்ரேஸ் கடித்த தருணத்தையும் வரைகலையாக்கி இருக்கிறார்.
2014 உலக கோப்பையின் கிளாசிக் தருணங்களை கலாப்பூர்வமாக பிளேஷ் பேக்கில் பார்க்க இந்த தளம் சிறந்த வழி: http://shop.rincks.co.uk/.
கிராபிக் டிசைனரான ஹாங்ஸ் இந்த வரைகலைகளை போஸ்டர்களாகவும் விற்கிறார்.
வீடியோ கேம் வடிவில்
நீங்கள் வீடியோ கேம் பிரியரா? அப்படி என்றால் உலக கோப்பையை வீடியோ கேம் வடிவில் ரசிக்கலாம் வாருங்கள் என்கிறார் மேத்யூஸ் டாஸ்கனோ. பிரேசில் நாட்டு கலைஞர் இவர். டாஸ்கனோ என்ன செய்திருக்கிறார் என்றால் உலக கோப்பையின் முக்கிய தருணங்ககளை வீடியோ கேம் வடிவில் சித்திரமாக்கி இருக்கிறார்.
விடியோ கேம் உலகம் எங்கேயே ஹைடெக்கில் வந்து விட்டாலும் , 1980 களில் பிரபலமாக இருந்த பிக்சல் வடிவிலான கேம்களை இப்போது நினைத்து ஏங்குபவர்கள் இருக்கிறார்கள். 8 பிட் என்று சொல்லப்படும் இந்த வீடியோ கேம் பாணியிலேயே டாஸ்கனோ , உலக கோப்பை தருணங்களை காட்சியாக்கியிருக்கிறார். இதற்காகவே 8பிட்புட்பால் எனும் (http://8bit-football.com/ ) இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். இந்த தளத்தில் அந்த கால வீடியோ கேம் பாணியில் இந்த உலக கோப்பையின் முக்கிய கணங்களையும் , இதற்கு முன்னர் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டிகளையும் காணலாம். அர்ஜெண்டினா பயிற்சியாளர் சாபெல்லா, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹிகுய்ன் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட போது நம்ப முடியாமல் அப்படியெ விழ்ந்து விடுபவர் போல பின்