எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது.
இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணையதளம் செய்கிறது.
இந்த இணையதளம் களவாடப்பட்டு பொது வெளியில் இருக்கும் பாஸ்வேர்டுகளை எல்லாம் பட்டியலிட்டுள்ளது. அடோப்,யாஹூ, ஸ்நேப்சாச் என நீளும் இந்த பட்டியல் நிச்சயம் அச்சமூட்டும். இந்த தளத்தில் உங்கள் பயனாளி பெயர் அல்லது இமெயில் முகவரியை சமர்பித்தால் , இந்த திருட்டு பட்டியலில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கிறதா? என பார்த்து சொல்லி எச்சரிக்கும்.
இது போன்ற தாக்குதல் எதிர்காலத்தில் நிகழும் போது உங்கள் பாஸ்வேர்டு அதில் சிக்கியிருந்தால் உங்களுக்கு தகவல் சொல்லவும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி; https://haveibeenpwned.com/
————
பாஸ்வேர்டு பற்றி தொடர்ந்து எழுது வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். முந்தைய பாஸ்வேர்டு பதிவுகளில் சுவாரஸ்யமானவை சில:
1. பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்; http://cybersimman.wordpress.com/2013/07/26/password-3/
2. பாஸ்வேர்டு மரம் வளர்போம்.;http://cybersimman.wordpress.com/2013/07/30/password-7/
3. பற்றில்லாத பாஸ்வேர்டு செய்வோம்.;http://cybersimman.wordpress.com/2013/12/21/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/