மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் என்றால் நினைவுக்கு வரும் பழங்களும் இருக்கின்றன. காய்கறிகளும் இருக்கின்றன. ஏன் இந்த திடீ காய்,கனி ஆய்வு என கேட்கலாம். இன்று அறிமுகம் செய்ய இருக்கும் ரைடிராக் இணையதளம் தான் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது.
இது போன்ற இணையதளத்தை நாமும் உருவாக்கலாமே என நினைக்க வைக்கும் இணையதளமாக ரைப்டிராக் இருக்கிறது. இந்தியாவுக்காக ,குறைந்தபட்சம் தமிழகத்திற்காக இது போன்ற ஒரு தளம் தேவை என்பது எனது விருப்பம்.
ரைப் டிராக்கில் அப்படி என்ன இருக்கிறது ? ரைப் டிராக் மிகவும் எளிமையான தளம். அதன் பின்னே இருப்பது எளிமையான கருத்தாக்கம்- பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பருவத்தை காட்டுகிறது இந்த இணையதளம். இப்போது சீசன் இருக்கிறதா ? என அறிய விரும்பும் பழம் அல்லது காய்கறி பெயரை இந்த தளத்தில் டைப் செய்தால் அதற்கான பதிலை இது அளிக்கிறது. இதற்கான விடையில் அதன் பருவகால மாதங்கள் பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படுகிறது. வேறு விதங்களிலும் தேடிப்பார்க்கலாம்.
ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு பருவம் உண்டு. காய்கறிகளுக்கும் அப்படியே. விஞ்ஞானம் மூலம் காய்,கனிகளை ஆண்டு முழுவதும் விளைய வைத்தாலும், பழங்கள் அவற்றுக்கு உரிய பருவதில் தான் சுவையுடன் இருக்கும். ஆக, இப்போது பருவத்தில் உள்ள பழங்களை வாங்கி பயன்படுத்துவதற்காக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பருவ காலங்களை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.
அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இந்த தளம் அமைந்துள்ளது. கனிகளின் பருவங்கள் பொதுவானது என்றாலும், இந்தியாவுக்கு உரிய பழங்களும் காய்கறிகளும் பிரத்யேகமானவை. எனவே நம்மூரிலும் இது போன்ற ஒரு இணையதளம் அமைக்கப்பட்டால், இது கொய்யா காலமா? அன்னாசி காலமா என்று தெரிந்து கொள்ளலாம். மதுரை மல்லி, கனகாம்பரம் என்று கூட விரிவுபடுத்தலாம்.
இப்போதைக்கு ரைப்டிராக் பக்கம் போய் பாருங்கள்: http://ripetrack.com/produces?utf8=%E2%9C%93&query=apple