ஸ்மார்ட்போன் பாதை!
கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக என்று சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் 50 மீட்டர் ஸ்மார்ட்போனும் கண்ணுமாக இருப்பவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போனை பாதையில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் ,இதற்கான அறிவிப்பு நீங்களே பொறுப்பு எனும் எச்சரிக்கை பாணியில் எழுதப்பட்டுள்ளது. அருகிலேயே ,சீனாவின் முதல் செல்போன் நடைபாதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமையான இந்த யோசனையை செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்தை உணர்த்துவதற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சி சார்பில் அமெரிக்காவின் பின்பற்றப்பட்ட யோசனையின் உந்துதலால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் டிவிட்டரான வெய்போவில் இளசுகள் பலரும் மூழ்கி கிடப்பதும் அவர்களில் பலர் நடந்து கொண்டே குறும்பதிவு அனுப்பும் வழக்கம் கொண்டிருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஸ்மார்ட்போன் அடிமைகள்!
ஸ்மார்ட்போன் தாக்கம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கவலை தரும் தகவலை தெரிவிக்கிறது. கல்லூரி மாணவ,மாணவிகளில் 75 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை சார்ந்து இருப்பது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 5 பேரில் ஒருவர் ஸ்மார்ட்போன் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 86 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை இரவில் தூங்கும் போது கைக்கு அருகிலேயே வைத்திருப்பதாகவும், 81 சதவீதம் பேர் போனை இழந்தால் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மோசம் என்ன தெரியுமா, ஆயிவில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் போன் ஒலிக்காத நேரங்களில் கூட அது ஒலிப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளது தான். இன்னும் 55 சதவீதம் பேர் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அல்லது மோசமான மனநிலையில் இருந்து விடுபட ஸ்மார்ட்போனில் தஞ்சம் அடைவதாக கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போனை சார்ந்திருப்பதற்கான காரணம் நடைமுறை சார்ந்த்தாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் கையில் போன் வைத்திருக்கும் போது பாதுகாப்புடன் உணர்வதை இதற்கான உதாரணமாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் தாக்கத்தால் எதுவுமே உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடதப்பட்டுள்ளது. ஆனால் மிக சுலபமாக நம் நாட்டு மாணவர்களுக்கும் பொருந்தக்கூடியது தான் இல்லையா?
அலபாமா பலகலைக்கழக ஆய்வாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மாணவர்களுக்கான தேசிய சஞ்சிகையில் வெளியாக உள்ளது. ஆய்வின் தலைப்பு; ஸ்மார்ட்போன் மோகம் பற்றிய உண்மைகள்!.
செல்ஃபீ தொப்பி-செல்பீ காமிரா !
செல்ஃபீ என்று சொல்லப்படும் சுயபடங்களின் மோகம் அல்லது ஆர்வம் தீவிரமாகி கொண்டே தான் போகிறது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதுப்புது சாதனங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. செல்ஃபீ போன்கள், செல்ஃபீ பிரெஷ் என தொடரும் இந்த வரிசையில் சமீபத்திய வரவு செல்ஃபி தொப்பி. கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் தயாரிப்பில் புகழ்பெற்ற ஏசர் நிறுவனத்தின் யு.கே பிரிவு இந்த செல்ஃபீ தொப்பியை அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற பேஷன் வடிவமைப்பாளர் ஒருவருடன் இணைந்து உருவாக்கப்பட்டூள்ள இந்த அகண்ட தொப்பில் இணைக்கப்பட்டுள்ள டேப்லெட்டை கொண்டு அழகான சுயபடத்தை எடுத்துக்கொள்ளலாமாம்.
லண்டன் பேஷன் வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த செல்ஃபீ தொப்பி.
செல்ஃபீ தாக்கத்தின் இன்னொரு அடையாளம் காமிரா தயாரிப்பு நிறுவனமான நிக்கான் செல்ஃபீ வசதி கொண்ட காமிராவை அறிமுகம் செய்துள்ளது. அதன் புதிய கூல்பிக்ஸ் காமிரா (Coolpix S6900. ) சுயபடம் எடுப்பதற்கான டச்ஸ்கிரீன் வசதி கொண்ட எல்சிடி திரையை கொண்டுள்ளது. ஏற்கனவே கேனானின் பவர்ஷாட் காமிராவில் இதே போல செல்ஃபீக்கான வசதி உள்ளது. இதன் பின்பக்கத்தில் உள்ள எல்சிடி திரை மூலம் சூப்பராக சுயபடம் எடுக்கலாமாம்.
ஐபோன் 6 அறிமுகமும் வரவேற்பும்
ஒரு வழியாக ஐபோன் 6 அறிமுகமாகி விட்டது. பரவலாக கணிக்கப்பட்டது போலவே ஐபோன் 6 மற்றும் சற்றே பெரிய அளவில் ஐபோன் பிளஸ் ஆகியவற்றை ஆப்பிள் 9 ந் தேதி ஆப்பிள் அறிமுகம் செய்தது. கூடவே ஆப்பிள் வாட்ச் மற்றும் சொல்போனில் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் அடுத்த ஆண்டு தான் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதன் தோற்றமும், வடிவமைப்பும் பலரை கவர்ந்துள்ளது. அறிமுக விழாவில் இது வரையான ஐபோன்களிலேயே சிறந்ததாக ஐபோன் 6 உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் கூறினார். ஆப்பிள் அபிமானிகள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர் போலும். அது தான் ஐபோன் 6 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகியவற்றின் முன்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு24 மணி நேரத்தில் 4 மில்லியன் போன்கள் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஐபோன் 5 முதல் நாளில் 2 மில்லியன் விற்பனை ஆனதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
முன்பதிவில் ஐபோன் 6 மாதிரியை விட அளவில் பெரிய ( விலையும் அதிகம்) ஐபோன் பிளசுக்கு தான் அதிக மதிப்பு இருந்த்தாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பெரிய திரை போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி இதெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே நெக்சஸ் போனில் இருந்தது தானே என்று ஆண்ட்ராய்டு அபிமானிகள் சிலர் கேலி செய்கின்றனர் .தொழில்நுட்ப இதழ் ஒன்று இரண்டு போனின் அம்சங்களையும் ஒப்பிட்டு வெளியிட்ட வரைபட சித்திரத்தை அவர்கள் ஆதாரமாக காட்டுகின்றனர்.
எது எப்படியோ, ஐபோன் 6 மற்ற ஐபோன்கள் போல தாமதமாக அல்லாமல் சிக்கிரமே இந்தியாவுக்கு வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் ஐபோன்6 வருகிறது. அதற்கு முன்னதாக ஐபோன் 5 மாதிரிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்ல, ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் வதந்திகளால் ஊகிக்க முடியாத தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இவை ஒருபுறம் இருக்க, ஆப்பிளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட எம்பி3 சாதனமான ஐபாடுகளின் நிலை என்ன என்று இசைப்பிரியர்கள் பலர் ஏக்கத்துடன் கேட்கின்றனர். ஐபாடுகளில் புதிய ரகம் எதுவும் அறிமுகமாகமல் இருப்பதால் ஆப்பிள் இதற்கு ஓசைப்படாமல் குட்பை சொல்ல இருக்கிறதா என்றும் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட்போன் யுகத்தில் ஐபாடுக்கு இடம் இருக்கிறதா ? இருந்தும் இது பற்றி வயர்டு இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை ஐபாடு பிரியர்களுக்கு ஆன்ந்தம் அளிக்கும்: http://www.wired.com/2014/09/rip-ipod/
கிழக்கிற்காக ஒரு ஸ்மார்ட்போன்!
எதிர்பார்க்கப்பட்டது போலவே கூகிள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. கார்பன் ( ஸ்பார்கில் வி), ஸ்பைஸ் (டிரிம் யூனோ ) மற்றும் மைக்ரோமேக்ஸ் (கேன்வாஸ் ஏ1 ) ஆகிய இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று போன்களுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்பைஸ் மற்றும் கார்ப்ன் ஆண்ட்ராய்டு ஒன் போன்களை பிலிகார்ட் மற்றும் ஸ்னேப்டீல் மின்வணிக தளங்கள் மூலமும் மைக்ரோம்கேஸ் போனை அமேசான் இந்திய தளம் மூலமும் வாங்கலாம். ஸ்பைஸ் போனின் விலை ரூ.6299. மைக்ரோமேக்ஸ் விலை ரூ. 6,499. கார்பன் போனின் விலை ரூ.6399 .
மூன்று போன்களுமே அடிப்படையில் பொதுவான அமசங்களை கொண்டிருக்கின்றன. மூன்றுமே இரட்டை சிம்கள் கொண்டவை, 4.5 இன்ச் டிஸ்பிலே கொண்டவை, முன் பக்க மற்றும் பின் பக்க காமிராக்களுடன் 1 ஜிபி ரேம் மற்றும் 1700mAh பேட்டரி கொண்டவை. 1.3GHz பிராசஸர் கொண்டிருக்கின்றன.
இரட்டை சிம் மற்றும் மெமரி கார்டு வசதி இந்தியாவுக்காக என சேர்க்கப்பட்டுள்ளன.
வாங்ககூடிய விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எனும் கருத்துடன் கூகிள் இந்த போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலையை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமான ஆண்ட்ராய்டு வடிவம் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு கொண்டிருப்பதாக கூகிள் தெரிவிக்கிறது.
ஆண்ட்ராய்டு ஒன் போனில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன என்றால் இவை இந்திய சந்தையில் முதன் முதலாக அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் இருந்து தான் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்,பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு அறிமுகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் இவை அறிமுகமாக உள்ளன. இவை மேற்கத்திய சந்தையில் அறிமுகமாகுமா ?என்று தெரியவில்லை . அடிப்படையில் கிழக்கில் உள்ள நாடுகளுக்கான போன் இது. இந்தியா இதன் மையமாக உள்ளது.
ஆண்ட்ராய்டு ஒன் அறிமுகம் தொடர்பான மற்ற முக்கிய அம்சங்கள் 2 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் வசதி மற்றும் ஆப்லைனில் யூடியூப் வீடியோ பார்க்கும் வசதி.
டாப் டென்னில் இந்தியா!
ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பொருத்தவரை இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக சர்வதேச அமைப்பான ஜி.எஸ்.எம்.ஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் 111 மில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் இருப்பதாக இதன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சீனா ,அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
ஸ்மார்ட்போனின் எதிர்கால போக்குகள் மற்றும் கணிப்புகள் தொடர்பான அறிக்கையாக இது அமைந்துள்ளது. 2020 வாக்கில் ஸ்மார்ட்போன் இணைப்புகளில் ஐந்தில் நான்கு இணைப்புகள் வளரும் நாடுகளில் இருந்து வரும் என தெரிவிக்கும் இந்த அறிக்கை மூன்று போனில் 2 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் சொல்கிறது.
ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவை ஆகியவை இந்த வளர்ச்சிக்க காரணங்களாகும்.
அடுத்த 18 மாதங்களில் மட்டும் 1 புதிய பில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் உருவாகும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி தமிழ் இந்து.