இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்கு முடியாது என்று அசந்து போகும் வகையில் சூரிய அஸ்தமனத்தை அட்டகாசமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞரான சைமன் ராபர்ட்ஸ். சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிப்பது அப்படி என்ன கஷ்டமா? என்று கேட்கலாம். அமெசூர் புகைப்பட கலைஞர்கள் முதல் தொழில்முறை வல்லுனர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் படம் எடுத்து தள்ளியிருக்கின்றனர். அநேகமாக உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் சூரிய அஸ்தமனமும் கூட ஒன்றாக இருக்கலாம்.
இருந்தும் சைமன் ராபர்ட்ஸ் எடுத்துள்ள சூரிய அஸ்தமன காட்சி(கள்) இதற்கு முன்னர் ஒருவரும் எடுத்திராதது. ராபர்ட்ஸ் ஒரே நாளில் அனைத்து சூரிய அஸ்தமன காட்சிகளை காமிராவில் கிள்க் செய்திருக்கிறார் என்பது தான் விஷேசம். அதாவது 24 சூரிய அஸ்தமன காட்சிகளை அவர் தொடர்ந்து படம் பிடித்திருக்கிறார்.
அதெப்படி 24 சூரிய அஸ்தமனம் வரும்? என்று கேட்கலாம். பூமியில் உள்ள ஒவ்வொரு நேர மண்டலத்திலும் ( டைம் ஜோன்) சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை அவர் கிளிக் செய்திருக்கிறார்.
தினமும் பூமி தன்னைத்தானே சுற்ற்க்கொண்டிருக்கும் நிலையில் தொடுவானத்திற்கு கீழே சூரியன் செல்லும் போது நாம் சூரிய அஸ்தமனத்தை காண்கிறோம். ஆனால் இதில் நாம் கவனிக்காத விஷயம் என்ன என்றால், பூமியில் வேறு ஒரு பகுதியில் சூரியன் ஏற்கனவே மறைந்திருக்கலாம் என்பதும் இன்னும் சில பகுதிகளில் இனி மேல் தான் மறைய இருப்பதும் தான். அதாவது பூமியின் சுழற்சிக்கு ஏற்ப ஒவ்வொரு நேர மண்டலமாக சூரிய அஸ்தமனம் நிகழ்கிறது.
ஆக, ஒரு நாளில் ( ஒவ்வொரு நாளும்) 24 முறை சூரிய அஸ்தமனம் ஏற்படுகிறது. -24 நேர மணடலங்களிலும் வரிசையாக அதை காணலாம். பூமி சுற்றும் திசையிலேயே நாமும் பயணம் செய்தால் நமது பயணத்தில் சூரியன முழுவதும் மறையாமல் இருக்கும் அதிசயத்தை பார்க்கலாம். இதை தான் புகைப்பட கலைஞரான சைமன் ராப்ர்ட்ஸ் செய்திருக்கிறார். காமிராவை கழுத்தில் மாட்டிக்கொண்டு விமானத்தில் பூமி சுழற்ச்சிக்கு ஏற்ப சூரியனை பின் தொடர்ந்து சென்று ஒவ்வொரு இடத்திலும் சூரியன் மறையும் காட்சியை கிளிக் செய்திருக்கிறார். ஐஸ்லாந்தில் அவர்கள் பயணம் துவங்கியிருக்கிறது. ஒரு இடத்தில் கிளி செய்ததும் உடனே விமானத்தில் ஏறி சூரியனை துரத்திச்சென்றிருக்கிறார். இப்படி 24 நேர மண்டலத்திலும் சூரிய அஸ்தமன காட்சிகளை கிளிக் செய்து ஒரே நாளில் அனைத்து சூரிய அஸ்தமன காட்சிகளையும் பதிவு செய்திருக்கிறார்.
மனிதர் என்ன பாடு பட்டிருப்பார்? எப்படி ஓடி இருப்பார் ?மலைக்க வைக்கிறது அல்லவா? அவருக்காக விமானம் செலுத்திய சாரதியையும் நினைத்துப்பாருங்கள்.
இந்த சாகசத்திற்காக இந்த குழு வட துருவத்திற்கு சென்று அங்கிருந்து சூரியனை விமானத்தில் பின் தொடர்ந்திருக்கிறது. வட துருவத்தில் என்ன ஸ்பெஷல்? பூமி சுழற்சிப்பாதையில் அங்கு தான் சுழலும் வேகமும் குறைவு, சுற்றளவும் குறைவு. மற்ற இடங்களில் அசுர வேகத்தில் சென்றாக வேண்டும். மேலும் பகலின் நீளம் அதிகமாக உள்ள பிப்ரவரி மாதத்தை இதற்காக தேர்வு செய்து இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
வட துருவத்தில் இந்த சாதகம் இருந்தாலும் அந்த பனிப்பிரதேசத்தில் விமான பாதையோ விமான நிலையங்களோ கிடையாது. முற்றிலும் புதிய பாதையில் ராபட்ஸ் பயணம் செய்திருக்கிறார்.
பூமி சுழலும் கோணம், காற்று வீசும் திசை, எரிபொருள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். நடுவே இரண்டு முறை 20 நிமிடம் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடிந்திருக்கிறது. 50 டிகிரிக்கும் குறைவாக வெப்ப நிலையில் 24 மணி நேரம் இந்த பயணம் நீடித்திருக்கிறது. பைலம் மற்றும் துணை பைலெட் ஷிப்ட் போட்டு தூங்கி இருக்கின்றனர். மற்ற குழுவினருக்கு தூங்கா பயணம் தான்.
இப்படி ஓடி ஓடி எடுத்த சூரிய அஸ்தமன காட்சிகளை வரிசையாக ஒரே வீடியோ காட்சியாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். அதன் புகைப்பட தொகுப்பை பார்த்தாலே பிரம்மிக்க வைக்கிறது.
பிரபல கைகடிகார தயாரிப்பு நிறுவனமான சிட்டிசன் தனது இகோடிரைவ் கைகடிகாரத்திற்கான விளம்பரத்திற்காக சைமன் ராப்ர்ட்சை இப்படி சவால் விடும் புகைப்பட கலையில் ஈடுபடுத்தியுள்ளது. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்குள்ள நேரத்தை தானாக காட்டும் இகோடிரைவ் கடிகாரத்தின் தனித்தன்மையை உணர்த்துவதற்காக சிட்டிசன் இந்த புதுமையான ஐடியாவை செயல்படுத்தியிருக்கிறது.
இந்த அசைன்மெட்ன் பற்றி குறிப்பிடும் சைமன் ராப்ர்ட்ஸ் , சூரிய அஸ்தமனம் கிளிக் செய்து அலுத்துப்போன விஷயம் என்பதால் வரிசையாக சூரிய அஸ்தமனத்தை கிளிக் செய்யும் பணியை ஒப்புக்கொள்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என்று கூறுகிறார்.
கூகிளில் சூரிய அஸ்தமனம் என்று டைப் செய்தால் லட்ச்கணக்கில் புகைபப்டங்கள் வந்து நிற்கின்றன. அவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்ட படத்தை எப்படி எடுக்க முடியும் என்று நினைத்தாதாக மேலும் கூறும் ராபர்ட்ஸ் , இந்த ஐடியா சூரிய அஸ்தமனததை அதன் விளிம்பிற்கு கொண்டு சென்று விட்டது என்கிறார் மன நிறைவுடன்.
—
24 சூரிய அஸ்தமன காட்சிகளை காண;http://www.betterstartsnow.com/en/f100/chasing-horizons/
சைமமன் ராபர்ட்ஸ் இணையதளம்: http://simoncroberts.com/news/
——–
விகடன்.காமில் எழுதியது. நன்றி;விகடன்.காம்

2 Comments on “சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்”
RAVICHANDRAN R
அருமை என்ன ஒரு முயற்சி. பாராட்டப்பட வேண்டியவர் அவர்
cybersimman
நிச்சயமாக.