இணையத்தில் தேடல் என்றவுடன் கூகிள் தான் பெரும்பாலனோருக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு கூகுள் தேடியந்திரம் பிரபலமாக இருக்கிறது. ஆனால் கூகிள் தவிர வேறு நல்ல தேடியந்திரங்களும் இணையத்தில் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அதைவிட முக்கியமாக உங்களைப்போன்ற மாணவர்களுக்காக என்றே சிறப்பு தேடியந்திரங்கள் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அப்படியா என்று ஆர்வத்துடம் கேட்கத்தோன்றுகிறாதா?
முதலில் ஸ்வீட்சர்ச்.காம் (http://www.sweetsearch.com/ ) தேடியந்திரத்தை பார்க்கலாம். ஸ்வீட்சர்ச் தன்னை மாணவர்களுக்கான தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்கிறது. இந்த தேடியந்திரத்தில் என்ன சிறப்புத்தெரியுமா? இது கூகிள் போல கோடிக்கணக்கான இணையதளங்களில் தேடாமல் மாணவர்களுக்கு ஏற்றது என தேர்ந்தெடுக்கப்பட்ட 35,000 இணையதளங்களில் இருந்து மட்டுமே தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. ஆக, இதன் தேடல் முடிவுகள் பாதுகாப்பாகவும் இருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஏனெனில் இந்ததளங்கள் எல்லாமே ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,நூலகர்கள் போன்றவர்களால் கவனமாக தேர்ந்த்டுக்கப்பட்டு அவற்றில் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்பட்டவை. பொதுவாககல்வி அமைப்புகளின் இணையதளங்கள் தேடியந்திரங்கள் கண்ணில் படும் வகையில் தகவல்களை வடிவமைக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவையாகஇல்லாதாதால் அவற்றில் உள்ளவிவரங்கள் தேடல் பக்கத்தில் இடம்பெறாமலேயே போகலாம்.ஆனால் ஸ்வீட்சர்ச் கல்வி நிறுவனதளங்களில் உள்ளதகவல்களை அழகாகதேடி எடுத்து பட்டியலிடுகிறது.
அதுமட்டும் அல்லதொடர்ந்து இந்தநிபுணர் குழு இணையதளங்களை தொடர்ந்து பரிசிலத்தவண்ணம் இருந்து பொருத்தமானஇணையதளங்களை மட்டுமே தேடலுக்கு சேர்த்துக்கொள்கிறது. மேலும் முடிவுகளை அலசி ஆராய்ந்து அவற்றை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்கிறது.
மாணவர்களை பொருத்தவரை இந்ததேடியந்திரம் மிகவும் பயனுள்ளதாகஇருக்கும்.தேடல் முடிவுகளில் பொருத்தமானதையும் நம்பகமானதையும் தேடிக்கண்டுபிடிக்கஅல்லாடாமல் எடுத்தஎடுப்பிலேயே தேவையானமுடிவுகளை இதன் மூலம் பெறலாம்.
இணையஉலகில் கூகுல் விளம்பரங்களை பெறுவதற்காகஎன்றே புத்திசாலித்தனமாகஉருவாக்கப்பட்டஇணையதளங்கள் பலஇருக்கின்றன. இவற்றில் உள்ளவிவரங்கள் பெரும்பாலும் பயனற்றவையாகஇருக்கும். ஸ்வீட்சர்ச் இந்த இணைய பதர்களை எல்லாம் தவிர்த்துவிடுகிறது. எனவே மாணவசமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாகஇருக்கும்.
ஸ்வீட்சர்ச்சில் இன்னும் சிலஅற்புதங்கள் இருக்கின்றன.அதன் தேடல் பக்கத்தல் இடது பகுதியில் யோலிங்க் என்று ஒரு கட்டம் தோன்றும்.அதில் ஏதாவது ஒரு குறிச்சொல்லை அடித்தால் முடிவுகளின் பொருத்தமானதன்மையை அலசி ஆராய்ந்து அதற்கேற்றமுடிவுகள் வடிக்கட்டப்படும்.இந்தமுடிவுகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் வழியே பகிர்ந்தும் கொள்ளலாம்.
இந்தபிரதானதேடல் வசதியை தவிரஇதில் சிலஉபதேடல்களும் உண்டு.ஸ்வீட்சர்ச்மீ என்றபகுதியை இளம் மாணவர்கள் தங்களுக்கானதாகவடிவமைத்துக்கொள்லாம். இதே போலஆசிரியர்கள் மற்றும் நூலகர்களுக்கானதனித்தனி பகுதிகளும் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் விடசூப்பரானது தினம் ஒரு தகவல் பகுதியும்,சுயசரிதைக்கானபகுதியும் தான் .தினம் ஒரு தகவல் பகுதியில் தினந்தோறும் ஏதவாது புதிதாககற்றுக்கொள்ளலாம்.இன்றையவார்த்தை,இன்றையபொன்மொழி,இன்றையபேட்டி,இன்றைய கவிதை,எனஏகப்பட்டவிஷயங்கள் இருக்கின்றன.
சுயசரிதை பகுதியில் சுயசரிதை எழுதுவதற்கானகுறிப்புகளோடு,தினம் ஒரு சுயசரிதைகளின் தொகுப்பு பிறந்தநாள் காண்பவர்கள் எனநிறையவிஷயங்கள் இடம்பெறுகின்றன.ஆர்வம் உள்ளவர்கள் மணிக்கனக்கில் பொழுதை கழிக்கலாம். டல்சினியா மீடியா எனும் நிறுவனம் இந்த தேடியந்திரத்தை நடத்தி வருகிறது. அடிப்படையில் கூகிள் சேவையை தான் பயன்படுத்துகிறது என்றாலும் வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்கள் துணையுடன் கவனமாக தேர்வு செய்து பாதுகாப்பான தளங்களில் உள்ள முடிவுகளை மட்டுமே வழங்குகிறது. கட்டாயம் இந்த தேடியந்திரத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள். தகவல் சேகரிப்பிலும் ,வீட்டுப்பாடத்திற்கான ஆய்விலும் உதவியாக இருக்கும்.
இதே போலவே இன்போடோபியாவும் (http://www.infotopia.info/ ) மாணவர்களுக்கான தேடியந்திரம் தான். ஸ்வீட்சர்ச் போலவே இதுவும் வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்ட இணையதளங்களில் இருந்து மட்டும் முடிவுகளை தேடித்தருகிறது. இதுவும் அடிப்படையில் கூகிள் தேடல் வசதியை தான் பயன்படுத்துகிறது.
இந்த தேடியந்திரத்தின் முகப்பு பக்கத்தில் மேலே அறிவியல்,இலக்கியம், கணிடம், செய்தி, சுயசரிதை போன்ற தலைப்புகளை பார்க்கலாம். அவற்றில் எதை கிளிக் செய்தாலும் அந்த தலைப்பில் மேற்கொண்டு தகவல்களை தெரிந்து கொள்வதற்கான இணைப்புகள் இருக்கின்றன. ஆக, இதை ஒரு களஞ்சியம் போலவும் பயன்படுத்தலாம்.
மாணவர்களுக்கான இன்னொரு தேடியந்திரம் ஐசீக் (http://www.iseek.com/iseek/home.page ) .இந்த தேடியந்திரத்தில் கேள்வியாகவும் கேட்கலாம் அல்லது வழக்கமான முறையில் தொடர்புடைய கீவேர்டை டைப் செய்தும் தேடலாம். எடுத்த எடுப்பிலேயே தேடும் சொல்லுக்கான விளக்கததை வழங்கிவிட்டு, தொடர்புடைய சொற்களையும் சுட்டிக்காட்டி , தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. கல்வி சார்ந்த இணையதளங்களை மட்டுமே இந்த பட்டியலில் பார்க்கலாம். வலது பக்கத்தில் தேடலை எப்படி எல்லாம் விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்பதற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கூகிள் போல லட்சகணக்கில் எல்லாம் முடிவுகள் வந்து நிற்காமல் தேவையான முடிவுகள் மட்டுமே இடம்பெறுகின்றன. தேடலை கல்வி சார்ந்த்தாக அல்லது இணையம் சார்ந்த்தாக தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆய்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதே போலவே ஸ்டடி நேவிகேடர் ( http://www.studynavigator.com/) தேடியந்திரம் கல்வி சார்ந்த இணையதளங்களில் தேட உதவுகிறது. தேடும் தகவல்கள் களஞ்சியங்களில் இருந்து வேண்டுமா? அகராதிகளில் இருந்து தேவையா? என தீர்மானித்துக்கொள்ளலாம். தகவல்கள் மற்றும் மேற்கோள்களையும் குறிப்பிட்டு தேடலாம்.
இணையத்தில் உலாவும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வகையில் இணையத்தில் பாதுகாப்பாக தேட இந்த தேடியந்திரங்கள் உதவியாக இருக்கும்
—-
சுட்டி விகடனில் எழுதியது. நன்றி சுட்டி விகடன்-
—–
தேடியந்திரங்களில் பலரும் அறிந்த கூகிள் தவிர எண்ணற்ற தேடியந்திரங்கள் இருக்கின்றன. கணித சமன்பாடுகளுக்கான பிரத்யேக தேடியந்திரம் போன்றவையும் உண்டு. இவை பற்றி அறியும் ஆர்வமும் தேவையும் இருக்கிறதா? என தெரிவிக்கவ்உம்
அன்புடன் சிம்மன்

1 Comments on “மாணவர்களுக்கான சிறப்பு தேடியந்திரங்கள்!”
spvvivek1998
Ennai pondra Students ku Help full irukku intha search engine
thanks for Posting