இணைய பயன்பாட்டில் தீவிரமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டரில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ஆசியான் மாநாட்டில் இருந்து முதல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக உலகில் பேஸ்புக் ,டிவிட்டர் போலவே இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கிறது.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் மூலம் புகைப்ப்டங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். செல்போன் செயலி வழியே புகைப்படங்க்ளை பகிரலாம். இன்ஸ்டாகிராம் தளம் வழியே படங்களை பார்க்கலாம்.
டிவிட்டர் போலவே இதிலும் விருப்பமான கணக்குகளை பின் தொடரும் வசதி மற்றும் கருத்துக்களை பரிமாறும் வசதி இருக்கின்றன. இன்ஸ்டாகிராம் சேவை நட்சத்திரங்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது.
இந்நிலையில் சமூக ஊடக் செயல்பாட்டில் ஆர்வமும், தேர்ச்சியும் உள்ளவராக பாராட்டப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். மியன்மரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து தனது முதல் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுள்ளார்.
மாநாட்டு மேடையின் சிவப்பு கம்பள தோற்றத்தை அவர் புகைப்படமாக எடுத்து, பகிர்ந்து கொண்டுள்ளார். ‘ ஹ்லோ வேர்ல்ட். இன்ஸ்டாகிராமிக்கு வருவதில் மகிழ்ச்சி. என் முதல் புகைப்பட்ம ஆசியான் மாநாட்டில் இருந்து” என்று அதில் மோடி தெரிவித்துள்ளார்.இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்திலும் தகவல் தெரிவித்திருந்தார்.
பிரதமர் இன்ஸ்டாகிராமுக்கு வருகை தந்த செய்தி உடனே பரவி அவருக்கு பாலோயர்கள் குவிந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கியிருக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போது இன்னும் அதிகமாகி இருக்கும்.
இந்த புகைப்படத்திர்கு இதுவரை 20,ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளன. சக இன்ஸ்டாகிராமர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமரின் இன்ஸ்டாகிராம் முகவரி: http://instagram.com/narendramodi

1 Comments on “இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நரேந்திர மோடி”
yarlpavanan
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்