காமிக்ஸ் பிரியர்களுக்கான தங்கச்சுரங்கம் இந்த இணையதளம்

comix-583x310லேட்டஸ்ட் கிரேஸ் எல்லாம் பேஷனிலும் கேட்ஜெட்டிலும் தான். காமிக்ஸ் உலகைப்பொருத்தவரை பழைய புத்தகங்களுக்கும் தலைப்புகளுக்கும் இருக்கும் மதிப்பே தனி தான். காமிக்ஸ் பிரியர்கள் பழைய காமிக் புத்தகங்கள் கையில் கிடைத்தால் அதை படித்து மகிழும் வாய்ப்பையும் தவறவிட மாட்டார்கள். பழைய காமிக் புத்தகங்களை தேடித்தேடி படிப்பதையும் மறக்க மாட்டார்கள். அந்த காலத்தைச்சேர்ந்த அரிய பதிப்பு காமிக் புத்தகத்தை பார்த்தால், அட இப்படி ஒரு காமிக் வந்ததா? என உச்சிக்குளிர்ந்து போய் படித்து மகிழ்வார்கள். காமிக் புத்தகங்களின் அருமையை புரிந்து கொள்ள காமிக்ஸ் பிரியராக இருக்க வேண்டும்.
இத்தகைய காமிக்ஸ் புத்தக பிரியர்களுக்கான தங்கச்சுரங்கம் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இணையதளம் இருக்கிறது; டிஜிட்டல் காமிக்ஸ் மியூசியம்( http://digitalcomicmuseum.com/).
காமிக்ஸ் கதைகளுக்கான டிஜிட்டல் அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த இணையதளம் அந்த கால வடிவமைப்போடு மிக சாதாரணமாக தோற்றம் அளித்தாலும் கூடம் காமிக்ஸ் பிரியர்கள் இந்த தளத்தை பார்த்ததுமே சொக்கிப்போவார்கள். ஏனெனில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான அரிய காமிக்ஸ் கதை புத்தகங்களை எல்லாம் இங்கு டிஜிட்டல் வடிவில் பார்க்கலாம்.; படிக்கலாம்.
காப்புரிமை விடுப்பட்டு பொது வெளியில் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை தேடிப்பிடித்து பட்டியலிட்டு அவற்றை டிஜிட்டல் வடிவிலும் இடம்பெற வைத்திருக்கிறார்கள். இதன் பொருள் அவற்றை தாராளமாக டவுன்லோடு செய்து படிக்கலாம் என்பது தான்.
விரும்பிய காமிக்ஸ் புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கு முன் அவை பற்றிய சுருக்கமான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வெளியான ஆண்டு , பதிப்பித்த நிறுவனம் போன்ற விவரங்கள் சுருக்கமாக இடம்பெற்றுள்ளன. இது வரை எத்தனை பேர் டவுண்லோடு செய்துள்ளனர்,சமீபத்தில் டவுண்லோடு ஆன புத்தகம் எது போன்ற தகவல்களும் கூட இருக்கின்றன.
குறிப்பிட்ட நிறுவனம் வெளியிட்ட தலைப்புகளை அனைத்தையும் ஒரே இடத்தில் பட்டயலிடப்பட்டுள்ளன.
வரிசையாக இருக்கும் பட்டியலில் விதவிதமான காமிக் புத்தகங்களை பார்த்தாலே காமிக்ஸ் பிரியர்கள் பரவசமாக உணர்வார்கள்.
காமிக்ஸ் பிரியர்கள் குறிப்பிட்ட தலைப்பை விரும்பினாலும் அது இருக்கிறதா ? என தேடிப்பார்த்துக்க்கொள்ளலாம். இதற்கான தேடல் கட்டம் தனியே இருக்கிறது. இது தவிர சமீபத்தில் பதிவேற்றப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் , அதிக ரேட்டிங் பெற்றவை மற்றும் அதிகம் வாசிக்கப்பட்ட காமிக்ஸ் ஆகிய பட்டயலும் வழிகாட்டுகின்றன.
சர்வதேச அளவிலான காமிக்ஸ் புத்தகங்களை படிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த இணையதளம் அருமையானது.
தமிழில் காமிக்ஸ் படிக்க விரும்பினால், கூகிளில் காமிக்ஸ் என டைப் செய்து பார்த்தால் காமிக்ஸ் பற்றி ஆர்வத்துடன் பதிவு செய்து வரும் பல பதிவர்களின் வலைப்பதிவை பார்க்கலாம்.
இந்த தளத்தை பொருத்தவரை டவுண்லோடான காமிக்சை படிக்க காமிக் ரீடர் தேவை.

காமிக்ஸ் அருங்காட்சியகம்;http://digitalcomicmuseum.com/

காமிக் ரீடர்;http://www.digitalcomicmuseum.com/forum/index.php/topic,1808.0.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *