சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும்.
எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட கலைஞர் ஒருவர் சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு ஏற்ப அதன் பயனாளிகளை உருவகப்படுத்தி அழகான புகைப்படங்களாக்கி இருக்கிறார்.
ஆண்கள் சமூக வலைப்பின்னல்களாக இருந்தால் எப்படி இருக்கும்? எனும் கேள்வியுடன் இதற்கான திட்டத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அதாவது பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் ஆண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து அதனடிப்படையில் மாடல்களை அலங்காரம் செய்து கொள்ள வைத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
பிரபல பேஷன் புகைப்பட கலைஞரான விக்டோரியா பஷுடா (Viktorija Pashuta
) என்பவர் தான் இந்த புதுமையான புகைப்பட வரிசையை உருவாக்கி அளித்திருக்கிறார்.
சமூக வலைப்பின்னல்களின் தன்மைக்கு ஏற்ப மின்னும் இந்த புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன. சமூக வலைப்பின்னல் தளங்களின் லோகோ நிறத்தை அடிப்படையாக கொண்டு அவற்றின் சமூக பகிர்வு குணங்களை இணைத்து மாடல்களை அவர் போஸ் கொடுக்க வைத்திருக்கிறார்.
உதாரணத்திற்கு டிவிட்டர் ஆண், நீல நிற சட்டை மற்றும் ஷூவுடன் அசத்தலாக போஸ் தருகிறார். பேஸ்புக் ஆண், தலை வரை மூடிய அடர் நீல டி ஷர்ட் மற்றும் அதே வண்ண பேண்டுடன் கூலாக காட்சி அளிக்கிறார்.
புகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கர் ஆணின் தோற்றம் இன்னும் வண்ணமயமாக இருக்கிறது. லிங்க்டுஇன் ஆண் சும்மா நீல நிற கோடு சூட்டுடன் கம்பீரமாக தோன்றுகிறார்.
இன்ஸ்டாகிராம்,கூகிள் பிளஸ் ஆண்களின் போஸ்களும் அசத்தலாக இருக்கிறது.
சமூக வலைப்பின்னல் யுகத்தில் அவற்றின் தாக்கம் தினசரி வாழ்க்கையில் நேரடியாக உணரப்படும் நிலையில் நாம் அவற்றை தகவல் தொடர்பு மற்றும் பகிர்வுக்கு பயன்படுத்தும் தேவை இருப்பதாக கூறும் பஷுடா, சமூக வலைப்பின்னல் மூலம் நண்பர்கள் ,சகாக்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த ஆன்லைன் மேடைகள் ஒருவிதத்தில் உயிர் பெற்று நிற்பதாகவும் சொல்கிறார். இந்த எண்ணமே பிரபலமான சமூக வலைப்பின்னல் சேவைகளை மனித முகம் கொள்ள வைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியதாகவும் அதன் விளைவே இந்த புகைப்பட திட்டம் உருவானதாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைப்பின்னல் தளங்களில் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் ஒன்று போன்றவை என்றாலும் ஒவ்வொரு சமூக வலைப்பின்னலுக்கும் ஒரு தனி குணம் இருப்பதாக சொல்லும் பஷுடா பேஸ்புக் கேஷுவலானது, டிவிட்டர் கிளாசிக்கானது, பிண்டிரெஸ்ட் படைப்பாற்றல் மிக்கது, பிலிக்கர் கலைநயம் மிக்கது என அடுக்கி கொண்டு போகிறார்.
இந்த தன்மையின் அடிப்படையில் அவற்றின் லோகோவின் காட்சி தன்மையை வழிகாட்டியாக கொண்டு சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்தி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்துவது எல்லாம் சரி தான், ஆனால் பேஸ்புக்கும் , டிவிட்டரும் ஏன் ஆண்களாக தான் இருக்க வேண்டும் என்று கேட்கத்தோன்றலாம். இதற்கான பதில் என்ன என்றால் ஏற்கனவே பஷுடா, இணையத்தில் பயன்படுத்தப்படும் பல வகை பிரவுசர்களை அழகான பெண்களாக உருவகப்படுத்தி , ‘What If Girls Were Internet Browsers’ எனும் புகைப்பட வரிசையை உருவாக்கி இருக்கிறார். பெண்கள் பல வித பிரவுசர்களாக கற்பனை செய்யப்பட்ட அந்த பட வரிசை இணைத்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தான் தற்போது, சமூக வலைப்பின்னல் தளங்களாக இருந்தா.? எனும் கேள்வி கேட்டு புகைப்படங்கள் மூலம் பதில் அளித்திருக்கிறார்.
புகைப்பட கலைஞரின் இணையதளம்: http://pashutaphotography.blogspot.in/2014/10/what-if-guys-were-social-networks.html