கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார்.
அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் ( Aimee Snowden ) தான் இந்த லேகோ பொம்மை விவசாயியை உருவாக்கி இருக்கிறார். எய்மீ தற்கால தலைமுறையை சேர்ந்தவராக இருந்தாலும் நவீன வாழ்க்கை மோகத்தால் அடித்துச்செல்லப்படாமல் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார். அவரது குடும்பமே விவசாய குடும்பம் என்பதால் தங்கள் பண்ணையேலேயே அவர் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.
விவசாயம் தவிர ஏய்மீக்கு இணையத்திலும் ஆர்வம் அதிகம். லொகோ பொம்மைகள் மீதும் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு அதிகம். புகைப்படக்கலையும் பிடிக்கும். இவை எல்லாவற்றின் கலைவயாக உருவானவர் தான் லெகோ விவசாயி –
ஆனால் இந்த லெகோ விவசாயின் விளையாட்டு முயற்சி அல்ல. விவசாயத்தையும்,விவசாயியையும் கொண்டாடும் வித்தியாசமான முயற்சி.
இங்கு லெகோ பொம்மை கலாச்சாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். லெகோ செங்கற்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் தான் என்றாலும் அவை பெரியவர்களாலும் புதுமையான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லெகோ செங்கற்களின் எளிமையான மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை அவற்றை கொஞ்சம் கற்பனை சேர்த்து படைப்பாற்றலை வெளிப்படுத்தி பயன்படுத்தவும் வழி செய்கிறது. இதற்கு அழகான உதாரணங்கள் பல இருக்கின்றன.
இவற்றில் ஒரு அழகான உதாரணம் தான் லெகோ விவசாயிக்கான விதையாக எய்மீ மனதில் விழுந்தது. அந்த உதாரணம் லெகோ பயணிகள் (http://legotravellers.com/) . ஸ்காட்லாந்தை பூர்விகமாக கொண்ட கிரேக் மற்றும் லின்சே தான் இந்த லெகோ பயணிகளை உருவாக்கியவர்கள். இந்த பயணிகளும் லெகோ பொம்மைகள் தான் . அதாவது லெகோ செங்கற்களை கொண்டு சுற்றுலா பயணிகள் போன உருவாக்கப்பட்ட பொம்மைகள். ( ஒரு ஆண், ஒரு பெண்)
பொதுவாக சுற்றுலா பயணிகள் மத்தியில் தாங்கள் செல்லும் இடங்களின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது இல்லையா? அதிலும் இப்போது செல்ஃபீ மோகம் பிடித்தாட்டும் நிலையில் எங்கு சென்றாலும் எல்லோரும் முதலில் ஒரு சுயபடத்தை எடுத்துக்கொள்கின்றனர்.
கிரேக்,லின்சே ஜோடியும் இப்படி உலக சுற்றுலாவுக்கு புறப்பட்ட போது இந்த பழக்கத்தில் இருந்து மாறுபட்டு தங்கள் பயண அனுபவத்தை புதுமையான முறையில் படமாக்கி பகிர்ந்து கொண்டனர். அதாவது தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் எல்லா இடங்களிலும் அந்த இடத்தில் தாங்கள் உருவாக்கி லெகோ பயண ஜோடியை நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர்.
ஒவ்வொரு ஊரிலும் அதன் பின்னணிக்கு ஏற்ப பொருத்தமான முறையில் லெகோ பயண ஜோடியை தயார் செய்து போஸ் கொடுக்க வைத்து படமெடுத்தனர். இந்த பயண புகைப்படங்கள் அவர்கள் பார்த்து ரசித்த இடங்களை அழகாக படம் படித்திருக்கும் .ஆனால் அதில் அவர்கள் இடம்பெறுவதற்கு பதில் அவர்கள் பிரதிநிதிகளாக லெகோ பொம்மை பயணிகள் காட்சி அளிப்பார்கள்.
இந்த லெகோ பயண புகைப்படங்களை இந்த ஜோடி இணையத்தில் பகிர்ந்து கொண்ட போது பலரும் கவரப்பட்டனர். பேஸ்புக்கில் இந்த படங்களுக்கு லைக்குகள் குவிந்தன. பலரும் ஆர்வத்துடன் இந்த பயண புகைப்படங்களை பின் தொடர்ந்தனர். இதன் விளைவாக இந்த ஜோடி லேகோ டிராவலர்ஸ் எனும் இணையதளத்தையே அமைத்துவிட்டது.
அட புதுமையான ஐடியாவாக இருக்கிறதே என்று லெகோ பயணிகள் புகைப்படங்களை பலரும் பார்த்து ரசித்து பாராட்டினர். இவர்களில் ஒருவரான எயிமீ இந்த ஐடியாவை ரசித்ததுடன் நில்லாமல் தானும் இதே போல செய்யலாமே என ஊக்கம் பெற்றார்.
எய்மீக்கும் லெகோ பொம்மைகள் மற்றும் புகைப்படக்கலை இரண்டிலுமே மோகம் இருந்தது. இரண்டையும் இணைத்து தான் நேசிக்கும் விவசாயத்திற்காக ஏதவாது செய்ய விரும்பினார். அவர் அடிக்கடி புழங்கும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் லெகோ குழுக்கள் பல இருந்தாலும் விவசாயம் சார்ந்து எதுவுமில்லை. அப்போது தான் அவருக்கு லெகோ பொம்மை விவசாயியை உருவாக்கும் எண்ணம் பிறந்தது.
லெகோ பொம்மை விவசாயியை தங்கள் பண்ணையில் பணி புரிவது போல படம் பிடித்து அதை புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளத்துவங்கினார். விவசாய பண்ணையில் என்ன நடக்கிறது என்பதை மற்றவர்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும் என அவர் நம்பினார்.
இப்படி தான் அவரது லெகோவிவசாயி வலைப்பதிவு ஆரம்பமானது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் பண்ணை நிலத்தில் லெகோ விவசாயியை பலவித வேலைகளில் ஈடுபட வைத்து அவர் படங்களாக பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்த புதுமையான முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது அவரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மகிழ்ச்சியுடன் தான் அவர், ஆஸ்திரேலிய வழக்கப்பட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய 12 நாள் கொண்டாட்டத்தையும் லெகோ விவசாயி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த 10 தேதி முதல் லெகோ விவசாயியை வயல்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்து ஒவ்வொரு நாளும் அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
முதல் நாள் அன்று விவசாயி மழையில் நனைந்தபடி இருப்பதில் துவங்கும் இந்த கொண்டாட்டம் 12 ம் நாள் வயலில் நண்பர்கள் ஒன்றாக புகைப்டம் எடுத்துக்கொள்வதுடன் முடிந்திருக்கிறது. நடுவே விவசாயி பாசனம் செய்வதும் ,அறுவடைக்கு தயாரான கதிரை பார்த்து மகிழ்வதுமான படங்கள் செம கியூட்டாக இருக்கிறது.
விவசாயத்தின் மீது ஆர்வத்தை இப்படி ஒரு வழியா என வியக்க வைக்கிறார் ஏய்மீ ஸ்னோடன்!.
லெகோவிசாயியின் இணைய வீடு: http://www.legofarmer.com/
லெகோ பயணிகளின் இணைய வீடு: http://legotravellers.com/
———–
விகடன்.காமில் எழுதியது.
( இது போன்ற புதுமையான முயற்சியில் ஈடுபட்டு கவனத்தை ஈர்த்து வருபவர்கள் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். இவர்கள் இணையத்தின் எல்லையில்லா சாத்தியங்களை உணர்த்தி வருகின்றனர். இவர்களே இணைய நட்சத்திரங்களாக உருவாகின்றனர். இத்தகைய இணைய நெட்சத்திரங்கள் பற்றிய விரிவான ஊக்கம் அளிக்கும் அறிமுகத்துடன் எனது இரண்டாவது புத்தகமான நெட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறது. சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் நூல் இது.
நெட்சத்திரங்கள் புத்தகம் பற்றி மேலும் விவரம் தேவை எனில் இமெயிலில் தொடர்பு கொள்ளலாம் )
லெகோ பயணிகள் பற்றிய முந்தைய பதிவை படிக்க விருப்பமா; http://cybersimman.com/2014/05/21/travel-5/