இதை விட எளிதான தளத்தை பார்த்ததில்லை என்று தான் அந்த தளத்தை பார்த்ததும் சொல்லத்தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மிக எளிமையான தளங்களில் இதுவும் ஒன்று . இருப்பினும் இந்த தளத்தின் எளிமையும் பயன்பாட்டுத்தன்மையும் கொண்டாடத்தோன்றுகிறது.
அந்த தளத்தின் முகவரியும் கூட எளிமையாக இருக்கிறது. http://a5.gg/ இது தான் அந்த தளத்தின் முகவரி. சரி இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது. ஒன்றுமே இல்லை. அது தான் இந்த தளத்தின் சிறப்பு. குழம்ப வேண்டாம். இந்த தளத்தில் எந்த உள்ளடக்கமும் கிடையாது. ஏனெனில் இதன் நோக்கமே இணைய குறிப்பேடாக பயன்பட வேண்டும் என்பது தான்.
இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் விஷயங்கள் குறித்து வைப்பதற்காக என்றே இந்த தளம் வெற்று இணைய காகிதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பார்ப்பதை இங்கே குறித்து வையுங்கள் . மீண்டும் வரும் போதும் அப்படியே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்களும் அப்படியே செய்யலாம்.
இணையத்தில் குறிப்பெடுக்க பல வசதிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் தனியே ஒரு கணக்கை துவக்க வேண்டும். இல்லை தலைப்பிட்டு குறிப்புகளை வகைப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு எல்லாம் எதுவுமே இல்லாமல் ,பார்த்ததும் ஒரு காகிதத்தில் எழுதி வைப்பது போல பிரவுசரில் இருந்தே இந்த தளத்தில் எழுத முடிவது சிறப்பம்சம். அதனால் இதன் எளிமை கவர்கிறது. பயன்படுத்திப்பார்த்து சொல்லுங்கள்.
இணையதள முகவரி: http://a5.gg/
—-
பிகு: இங்கிலாந்தை சேர்ந்த ஜேஸ்கூப் என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார். இணையதள வடிவமைப்பாளரான அவரது இணையதளமும் எளிமையால கவர்கிறது ; ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுவும் நல்ல உதாரணம்: http://jasecoop.com/
–
பிகு2; எளிமையான தளம் எனும் போது , விண்வெளியில் இப்போது எத்தனை பேர் உள்ளனர் என்பதை மட்டும் அடையாளம் காட்ட உதவும் இணையதளம் பற்றி நினைவுக்கு வருகிறது. இது பற்றிய அறிமுகம் எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இணையத்தால் இணைவோம் புத்தகத்தை தொடர்ந்து என்னுடைய இரண்டாவது தொகுப்பான நெட்சத்திரங்கள் ( http://www.udumalai.com/netchathirangal.htm) சென்னை புத்தக கண்காட்சிக்கு வெளிவந்துள்ளது.
அன்புடன் சிம்மன்