கேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்கும் கதை

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் கதையும் இருக்கிறது.
கேலிக்கு இலக்கானவரை தேடி கண்டுபிடித்து அவருக்காக என்றே ஒரு பிரத்யேக நடன விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் நாங்களும் பாட வருகிறோம் என முன்னணி பாடகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சி கதையின் நாயகன் இப்போது ’நடனமாடும் மனிதர்’() என கொண்டாடப்படுகிறார். ஆனால் சில வாரங்களுக்கு முன் அவர் இணைய அரட்டை அறையில் பருமனான தோற்றத்திற்காக இறக்கமில்லாமல் கேலி செய்யப்பட்டிருந்தார். அந்த கேலி அவரது இதயத்தை சுக்குநூறாக உடைத்து, வெளியே தலைகாட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே சுருங்கிப்போக செய்திருக்கும். நல்லவேளையாக இணையம் உரிய நேரத்தில் கைகொடுத்து உற்சாகம் அளித்திருக்கிறது.

எல்லாம் 4சேன் (4chan) எனப்படும் இணைய குழுவில் வெளியான ஒரு புகைப்படத்தில் இருந்து துவங்குகிறது. இணைய அரட்டையறை போல செயல்படும் 4 சேன் இணையதளத்தில் எந்த செய்தியையும் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் பகிர்ர்ந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் தான் உறுப்பினர் ஒருவர், நடமாடும் மனிதர் ஒருவருடைய புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். புகைப்படத்தில் இருந்த மனிதர் நல்ல பருமனான தோற்றம் கொண்டிருந்தார். முதல் படத்தில் அவர் நடனமாடுவது போல இருந்தது. அடுத்த படத்தில் அவர் முகம் வாடி தலை குணிந்த நிலையில் காணப்பட்டார். இநத படங்களின் கீழே, ” இந்த ஜந்து நடனமாடுவதை பார்த்தோம்.நாங்கள் சிரிப்பதை பார்த்து அவர் ஆடுவதை நிறுத்திக்கொண்டார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
da2
இந்த கருத்தில் வெளிப்பட்ட கேலியும் அதன் பின் மறைந்திருந்த குரூரமான நகைச்சுவையும் மனதநேயம் மிக்க எவரையும் வேதனையில் ஆழ்த்திவிடும். இணையத்தில் அவ்வப்போது இப்படி சிலர் முன் பின் தெரியாதவர்களின் கேலித்தாக்குதலுக்கு இலக்காகி அவதிப்பட்டு தங்களுக்குள்ளேயே புழுங்கித்தவிப்பதும் உண்டு.
இந்த வகை கேலியும் கிண்டலும் இணையத்தின் முக்கிய பிரச்ச்னையாக இருக்கும் சைபர் சீண்டுதலின் அங்கமாக கருதப்படுகிறது.

இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டவர் என்ன எதிர்பார்த்தார் என்று தெரியாது! ஆனால் பிரோசன் பேட்ஜர் எனும் பயனாளி ஒருவர் இந்த புகைப்படத்தை இம்குர் (Imgur) எனும் புகைப்பட பகிர்ந்து தளத்தில் வெளியிட்டு, ” இந்த அணுகுமுறை ஆவேசம் கொள்ள வைக்கிறது என்று குறிப்பிட்டு, பருமனான மனிதர் இதைப்பார்க்க நேர்ந்தால் இந்த விடலைகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆடி மகிழுங்கள் என்றும் கூறியிருந்தார்.
ஒருவர் தன்னளவில் மகிழ்ச்சி அடைய நடனமாட முற்பட்டதில் என்ன தவறு இருக்கிறது,அதை கேலி செய்வது எந்த விதத்தில் சரி எனும் பொருளில் அமைந்திருந்த பகிர்வு பலரையும் கவர்ந்திழுத்தது. உடனே ரெடிட் உள்ளிட்ட தளங்களில் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு, முதலில் கேலி செய்தவரை கண்டித்ததுடன், நடனமாடிய மனிதருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

உடல் தோற்றம் காரணமாக ஒருவரை அவமானம் கொள்ள வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். அதோடு இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, கேலிக்கு இலக்கான அந்த மனிதரை தேடி கண்டுபிடித்து, நீங்க ஆடுங்க பாஸ் என்று உற்சாகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
கேப்டன் பிட்ச் எனும் டிவிட்டர் பயனாளி , “இந்த படத்தில் உள்ள மனிதரை கண்டுபிடித்து ,அவர் அழகாக இருக்கிறார், நாங்கள் அவரை நேசிக்கிறோம் என சொல்ல வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
இன்னொரு டிவிட்டர் பயனாளி இதற்காக என்றே #FindDancingMan எனும் ஹாஷ்டேகை உருவாக்கி அந்த மனிதரை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
da4
மற்றொரு டிவிட்டர் பயனாளி ‘அந்த மனிதரை கட்டித்தழுவி அன்பை தெரிவிக்க்க பாதி இணைய சமூகம் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இப்படி டிவிட்டரில் ஆதரவு பொங்கிய நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் கஸாண்ட்ரா பேர்பேங்ஸ் (@CassandraRules ) எனும் எழுத்தாளர், அந்த் மனிதரை தேடிக்கண்டு பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டார்.

அவருக்காக விஷேசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பது பேர்பேங்சின் நோக்கமாக இருந்தது. விளைவு அடுத்த 24 மணி நேரத்தில் #FindDancingMan எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் பிரபலமானது. ஆயிரக்கணக்கானோர் அந்த ஹாஷ்டேகுடன் இந்த தேடல் செய்தியை பகிர்ந்துகொண்டனர்.
இதனிடையே நடனமாடுவதற்காக அவமானத்திற்கு இலககான அந்த மனிதருக்காக என்றே ஒரு நடன விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நோக்கத்தை விவரித்து திறந்த கடிதம் ஒன்றும் வெளியிடப்பட்டது.
நடனமாடும் மனிதருக்கு என துவங்கிய அந்த கடிதம், “ நீங்கள் யார் என எஅங்களுக்கு தெரியாது, இணையத்தில் உங்கள் படத்தை பார்த்த போது நீங்கள் நடனமாட விரும்பியதும், அவ்வாறு கூடாது என உணர வைக்கபப்ட்டதும் தெரிந்தது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

நீங்கள் சுதந்திரமாக நடனமாடுவதை நாங்கள் விரும்புகிறோம், நீங்கள் விரும்பினால் உங்களுடன் சேர்ந்து ஆட தயாராக இருக்கிறோம், உங்களுக்காக என்றே ஒரு நடன விருந்து ஏற்பாடு செய்கிறோம் என்றும் அந்த கடிதம் தெரிவித்தது.

கலிப்போர்னியாவை சேர்ந்த இளம் பெண்கள் சார்பாக அந்த கடிதம் வெளியானது.
இதைவிட அற்புதம் என்ன இருக்க முடியும்? பருமனாக இருந்ததால் நடனமாடியதற்காக கேலி செய்யப்பட்ட ஒருவரை , இகழ்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள், நீங்கள் வாருங்கள் நாம் நடடமாடலாம் என சொல்வதற்காகவே ஒரு விருந்து நிகழ்ச்சியை இணையவாசிகள் ஏற்பாடு செய்ய முன் வந்தது அருமையான விஷயம் தான் இல்லையா?

இதனிடயே இந்த விருந்து நிகழ்ச்சிக்கான செலவுக்கு நிதி திரட்டுவதற்கான இணைய பக்கமும் அமைகக்ப்பட்டு நிதியும் குவிந்தது.

இணையம் மூலம் இத்தனை நல்ல மனம் கொண்டவர்கள் தேடலில் ஈடுபட்டதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. அந்த நடனமாடும் மனிதர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் பெயர் சீன் என்றும் லண்டன் நகரில் வசிப்பவர் என்றும் தெரிய வந்தது.

இணைய ஆதரவால் நெகிழந்து போன சீன், டேன்சிங்மேன்பவுண்ட் ( @Dancingmanfound ) எனும் பெயரிலேயே டிவிட்டரில் ஒரு கணக்கை துவக்கி தன்னை அடையாளப்படுத்திகொண்டுள்ளார். விருந்து அழைப்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு இணையத்தில் நெகிழ்ச்சி அலையை உண்டாக்கிய நிலையில் பிரபல பாடகர்களும் நடனமாடும் மனிதருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாப் பாடகரான பாரேல் வில்லியம்ஸ் ,விருந்து நிகழ்ச்சியில் பாடத்தயாராக இருப்பதாக கூறியுள்ளதுடன், ஒருபோதும் உங்களை நினைத்து அவமானம் கொள்ள வேண்டாம் என உற்சாகப்படுத்தியுள்ளார்.

பாடகர் மோபி, யாரும் நடனமாடுவதற்காக அவமானம் கொள்ளும் நிலை வரக்கூடாது என தனது டிவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அந்த நடன விருந்து நிகழ்ச்சி நடைபெறும் போது, அது உடல் தோற்றத்தால் கேலிக்கு இலக்காகும் ஒவ்வொரு மனிதருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை;
உருவு கண்டு எள்ளாமை செய்யும் அவமானத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் செய்தியும் இந்த மூலம் அழக்காக சொல்லப்பட்டிருக்கிறது.

———-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *