இணைய நாயகியான மாணவி.

வேலைக்கோ கல்லூரி படிப்பிற்கோ விண்ணப்பிக்கும் போது நிராகரிப்பு கடிதம் வந்தால் நெஞ்சம் லேசாக நொறுங்கத்தான் செய்யும். அதிலும் அபிமாக கல்லூரிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் போது இடமில்லை என்பதை நயமாக சொல்லும் கடிதம் வந்தால் மனது நொந்து நூடுல்சாக தான் செய்யும். நீங்க யான் என்னை நிராகரிக்க நான் உங்களை நிராகரிக்கிறேன் என்று கூட சொல்லத்தோன்றும்.

அமெரிக்க மாணவி ஒருவர் இதை தான் செய்திருக்கிறார். ஆனால் இந்த மறுநிராகரிப்பை அவர் கொஞ்சம் கவித்துவம் கலந்து கிரேயிட்டிவாக செய்து இணையவெளியில் கைத்தட்டல் வாங்கியிருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட நிராகரிப்பு கடிதம் சமூக வலைப்பின்னல் தளங்களில் ஆயிரக்கணக்கில் லைக் பெற்று அவரை இணைய நாயகியாக்கி இருக்கிறது.

அந்த மாணவியின் பெயர் சியோபான் ஒ’டெல். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர். 17 வயதான ஓ’டெல் கண்களில் கனவுகளோடு டியூக் பலகலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் கல்லூரியில் இடம் கிடைக்கும் அதிர்ஷ்டம் அவருக்கு இல்லை. மாறாக உங்களுக்கு இடம் அளிக்க முடியாததற்கு வருந்துகிறோம் எனும் நிராகரிப்பு இமெயில் தான் வந்து சேர்ந்தது.
le-2
இப்படி ஒரு கடிதம் வந்தால் எத்தகைய ஏமாற்றமும் ,கோபமும் ஏற்படுமோ அது தான் அவருக்கும் ஏற்பட்டது. ஆனால் இந்த நிராகரிப்பை அவர் அப்படியே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பார்த்தார், இந்த நிராகரிப்பை தான் நிராகரிப்பதாக பலகலைக்கழகத்திற்கு ஒரு மெயில் அனுப்பினார். ஆனால் அதில் கோபத்தையோ, ஏமாற்றத்தையோ வெளிப்படுத்தாமல், ” உங்கள் நிராகரிப்பு கடிதம் கிடைத்தது. மிகவும் கவனமாக பரிசிலித்த பின் டியூக்கில் பட்டபட்டியில் 2015 ல் எனக்கு அனுமதி வழங்க நீங்கள் மறுத்ததை நான் ஏற்க முடியாமல் இருக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.’
‘இந்த ஆண்டு நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து நிராகரிப்பு கடிதங்களை பெறும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இப்படி பர்ந்து விரிந்த நிராகரிப்பு கடிதங்களை பெற்றிருக்கும் நான் உங்கள் கடிதத்தை ஏற்க முடியாமல் இருக்கிறேன் என்றும் எழுதியிருந்தவர் ,முந்தைய மாணவர்களை நிராகரிப்பதில் டியூக் பல்கலை என்ன தான் சாதனைகள் செய்திருந்தாலும் என்னுடைய தேர்வு தகுதியை நீக்கள் பூர்த்தி செய்யவில்லை.. எனவே நான் புதிய வகுப்பிற்கு வருவேன்’ என்றும் முத்தாய்ப்பாக குறிப்பிட்டிருந்தார்.

ஏறக்குறைய பல்கலைக்கழகங்கள் அனுப்பும் நிராகரிப்பு கடித மொழியிலேயே இந்த கடிதத்தை அமைத்திருந்தார்.
இப்படி ஒரு மெயிலை எழுதியதும் அவருக்கு பல்கலைக்கழத்திற்கு சரியான பதிலடி கொடுத்த திருப்தி இருந்திருக்க வேண்டும்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு இந்த மெயிலை அனுப்பியதுடன் அவர் நின்றுவிடவில்லை. இந்த மெயிலை அப்படியே ஸ்கேன் செய்து தனது டம்ப்ளர் வலைப்பதிவு பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அவ்வளவு தான் , அந்த நிராகரிப்பு மெயிலை பார்த்தவர்கள் அதில் ஏமாற்றம் நயமாக வெளிப்பட்ட விதத்தால் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். உடனே அதை மறு பதிவு செயதனர். அதை பார்த்தவர்களும் அட இது நல்ல இருக்கே என ஈர்க்கபப்ட்டு தங்கள் பங்கிற்கு மறுபதிவு செய்ய அந்த கடிதம் சமூக வலைதள பரப்பில் வேகமாக பரவியது. பலர் டிவிட்டரில் அதை பகிர்ந்து கொண்டனர். கூடவே மாணவியை பாராட்டவும் மறக்கவில்லை.
தனது மெயில் இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை மாணவி ஒ’டெல் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. சும்மா விளையாட்டாக தான் செய்தேன், இந்த அளவு பிரபலமாகும் எனத்தெரியவில்லை என அவர் வியந்து போயிருக்கிறார். இப்படி பிரபலமாகும் என்று தெரிந்திருந்தால் எழுத்து பிழைகளையும் திருத்தியிருப்பேன் என்று அழகாக அலுத்துக்கொண்டிருக்கிறார்.
le-3
ஓ’டெல் இணைய உலகில் பிரபலமானது மட்டும் அல்ல, நிராகரிப்பு இலக்கான டியூக் பல்கலைக்கழகம் அவரது மெயிலுக்கு பதிலும் அனுப்பியிருக்கிறது. அவர் நிராகரிக்கப்ப்ட திறமை குறைவு காரணம் இல்லை, போதிய இடம் இல்லாததே காரணம் என டியூக் பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேண்டுமானால் மனு சீராய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சீராய்வு செய்யப்பட்டாலும் இடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு தானாம். ஆனால் இடம் கிடைக்கிறதோ இல்லையோ மாணவி ஒ’டெல் அமெரிக்கா முழுவதும் அறியப்படவராக இருக்கிறார்.
கல்லூரியில் இடம் கிடைக்காமல் நிராகரிப்பு கடிதம் பெற்று வெறுத்து போகிறவர்கள் எல்லாம் தங்கள் சார்பாக அழகாக பதிலடி கொடுத்திருப்பதாக அவரை தலையில் வைத்து கொண்டாடாத குறையாக பாராட்டுகின்றனர்.

மாணவியின் நிராகரிப்பு மெயில்: http://scarrlettjohanson.tumblr.com/tagged/mine

———

( இந்த பதிவு விக்டன்.காமில் எழுதியது. இப்படி இணையம் மூலம் கவனத்தை ஈர்க்கும் சாமானியர்கள் பற்றி தொடர்ந்து எழுது வருகிறேன். இவர்களில் இணைய நெட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் பற்றி விரிவான் அறிமுகமாக நெட்சத்திரங்கள் தொகுப்பு அமைந்துள்ளது: https://www.google.co.in/search?q=%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%8B&oq=%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%8B&aqs=chrome..69i57.1407j0j1&sourceid=chrome&espv=2&es_sm=93&ie=UTF-8#q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *