மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பார்களே,அதே போல இணைய நட்சத்திரமாக விளங்கிய குழந்தை இன்று சிறுநீரக கோளாறால் வாடும் தந்தையின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டி கொடுத்து நெகிழ வைத்திருக்கிறார்.
முதலில் கொஞ்சம் பிளேஷ்பேக்.
இணைய வரலாறை திரும்பி பார்க்கும் போது, இணைய குழந்தை வெற்றி புன்னகையோடு கையுர்த்தி நிற்கும் காட்சியை கட்டாயம் பார்க்கலாம். இணையம் முழுவதும் பரவிய இணைய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது. நீங்களும் கூட அந்த புகைப்படத்தை பார்த்து ரசித்திருக்கலாம்.அல்லது இப்போது இணையத்தில் இண்டெர்நெட் கிட் என டைப் செய்து பார்த்தால் கூட அந்த புகைப்படத்தை பார்த்து ரசிக்கலாம்.
அந்த புகைப்படத்தில் இருப்பது சாம் கிரின்னர். படம் எடுக்கப்பட்ட போது கிரின்னரெ 11 மாத குழந்தை. கடற்கரை மணலில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சேமின் அம்மா லானே கிரின்னர் புகைப்பட பகிர்வு தளமான பிலிக்கரில் பகிர்ந்து கொண்டார்.
கைப்பிடி கடல் மண்ணுடன் கள்ளச்சிரிப்பு சிரித்தபடி வெற்றி எனதே என்பது போல கம்பீரமாக போஸ் அந்த குழந்தை கொடுத்த போஸ் காண்பவர்களை கவர்ந்தது. அதன் பிறகு மைஸ்பேஸ் வலைப்பின்னல் தளத்தில் பகிரப்பட்டு பிரபலமானது.
அவ்வளவு தான் அந்த படத்தை பார்த்த பலரும் அதனோடு புகைப்பட குறிப்பையும் சேர்ந்த்து பகிர்ந்து கொள்ளத்துவங்கினர்.
சூழ்நிலையை மீறி வெற்றி கொள்ளும் அல்லது நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் குறிப்புகளை இடம் பெற வைத்து இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து கொண்டனர். இப்படி வைரலாக பரவி இணையம் முழுவதும் அந்த குழந்தையை வெற்றிக்குழந்தையாக கொண்டாடியது.
இப்போது குழந்தை சேமிக்கு 8 வயதாகிறது.இப்போது சேமியின் தாய் இணையத்தின் உதவியை நாடி வந்திருக்கிறார். அவரது கணவருக்கு அதாவது சேமியின் தந்தை சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கடந்த ஆறு ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் ஜஸ்டின் கிரின்னருக்கு இப்போது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.
அறுவை சிகிச்சை செலவு மற்றும் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் 75,000 டாலருக்கான நிதி திரட்ட சிறுவனின் அம்மா லேனே கிரின்னர் இணையத்தின் உதவியை நாடினார். இணைய நிதி திரட்டும் மேடையான கோஃபண்ட்மீ தளத்தில் கணவரின் சிகிச்சைக்காக நிதி உதவி கோரும் பக்கத்தை அமைத்தவர், ஜஸ்டினின் அம்மா சிறுநீரக கோளாரால் உயிரிழந்தார், ஆனால் ஜஸ்டினுக்கும் அவரது மகனுக்கும் அவ்வாறு நிகழக்கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கணவர் மற்றும் சிறுவன் சேமியிடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தவர், இந்த நிதி கோரிக்கை பற்றி டிவிட்டரிலும் தகவல் தெரிவித்திருந்தார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், அன்பான மக்களே இணைய குழந்தை தனது தந்தைக்காக நிதி திரட்டுக்கிறான் என குறிப்பிட்டு இந்த இணைய பக்கத்திற்கு இணைப்பு கொடுத்திருந்தார்.
சேமியை வெற்றிக்குழந்தையாக ஆக்கிய ஒவ்வொருவரும் ஒரு டாலர் கொடுத்தால் கூட போதும், அவனது அப்பா உயிரை காப்பாற்ற முடியும் என்றும் அடுத்த குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.
அவ்வளவு தான், இந்த குறும்பதிவை பார்த்த பலரும், இணையக்குழந்தையின் அழகிய படத்தை நினைத்துப்பார்த்து அவனது தந்தைக்கு உதவுவது தங்கள் கடமை என நினைத்து டாலர்களை அள்ளிக்கொடுத்தனர். பலரும் இந்த செய்தியை தங்கள் சமூக வட்டத்தில் #SuccessKid எனும் ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொண்டனர். இதன் பயனாக இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி சிகிச்சைக்கான நிதி குவிந்தது.
முதல் ஒரு வாரத்திலேயே கேட்ட தொகைக்கும் மேலாக நிதி குவிந்துவிட்டது.
நிதி அளித்தவர்கள் பலரும் இணையத்தில் சிறுவன் சேமியின் புகைப்படத்தை பார்த்து ரசித்ததை நினைவு கூர்ந்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆதரவால் சேமியின் அம்மா லானே நெகிழந்து போயிருக்கிறார். நல்ல இணைய குழந்தையின் பெற்றோர்கள் என பெருமையாக குறிப்பிட்டுள்ள லானே, இணையத்தின் ஆற்றலையும் வீச்சையும் அறிந்து மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.
லானே அமைத்த நிதி திரட்டும் பக்கம்:http://www.gofundme.com/opp5cs
—-