கூகுள் சமீபத்தில் டெஸ்க்டாப்பில் இருந்தே போனை தேடுவதற்கான பைன்ட் மை போன் வசதியை அறிமுகம் செய்ததை ஆண்ட்ராய்டு பயனாளிகள் கவனித்திருக்கலாம். அட நல்ல வசதியாக இருக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்திருக்கலாம். கூகுள் இத்துடன் நின்றுவிடவில்லை, டெஸ்க்டாப்பில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதன்ங்களுக்கு திசைகளை அனுப்பி வைக்கும் செண்ட் டைரக்ஷன் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்புகள் மற்றும் எச்சரிக்கை( அலர்ட்) ஆகியவற்றை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் மூலம் ஒருவர் தனது டெஸ்க்டாப்பில் இருந்தே ஆண்ட்ராய்டுக்கு குறிப்புகளை அனுப்பலாம்.
இந்த வசதிகளை பயன்படுத்துவது எளிதானது. ஆனால் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் செயலி அப்டேட்டாகி இருக்க வேண்டும். போனில் பயன்படுத்தும் அதே கூகுள் கணக்கில் தான் டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்த வேண்டும் போன்ற சில முன் நிபந்தனைகள் இருக்கின்றன. அதே போல கூகுள் நவ் கார்ட்ஸ் வசதியை ஆன் செய்திருக்க வேண்டும். இவை எளிதானது தான். மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால் கூகுள் இதற்காகவே , உங்களை போனை கூகுளுடன் இணைப்பது எனும் தலைப்பில் வழிகாட்டி பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளது: https://support.google.com/websearch/answer/6128427
—