வாட்ஸ் அப்பிலும் வீ சாட்டிலும் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுபவர்கள் கேம்சாட் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. கேம்சாட் செல்போன்களுக்கான புதிய மெசேஜிங் வசதியை அளிக்கும் செயலி (ஆப்). ஆனால் இது வாட்ஸ் அப்பிற்கு போட்டி அல்ல; இதன் நோக்கமே வேறு. ஒரு நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது.
நீங்கள் யாருடப் உரையாட விரும்புகீறிர்களோ அவர்களுக்கு இந்த செயலி மூலம் ஒரு நிமிடம் உங்களால் ஒதுக்க முடியுமா? என கோரி ஒரு செய்தி அனுப்பலாம். கோரிக்கை ஏற்கப்பட்டால் ஒரு நிமிடத்தில் அவருடனான உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டும். என்ன தேவையோ, எது முக்கியமோ அதை மட்டும் கேட்டு விட்டு வேறு வேலை பார்க்க வேண்டியது தான். ஒருவேளை கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அந்த செய்தி டெலிட் செய்யப்பட்டு விடும்.
ஒயாமல் ஸ்மார்ட்போன் திரையை பார்த்துக்கொண்டு கவனச்சிதறலுக்கு ஆளாகி தவிப்பதைவிட காரியத்தில் கண்ணாக இருக்க உதவும் இந்த செயலி அருமையான யோசனை தான் இல்லையா? ஆண்ட்ராய்டு, ஐபோன் இரண்டிலும் செயல்படும் செயலி இது; http://gamchat.com/

1 Comments on “ஒரு நிமிட உரையாடலுக்கான புதுமையான செயலி”
stalin wesley
thanks