மதங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான இடம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது டெம்பில்.இயோ இணையதளம்.
எல்லா மதங்களும் அன்பையும்,மனிதநேயத்தையும் தான் வலியுறுத்துகின்றன. இதை மதங்களின் புனித நூல்கள் மூலம் புரிந்து கொள்ள அழகாக வழி செய்கிறது இந்த தளம்.எளிமையான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கிறிஸ்துவம், இந்து மதம், இஸ்லாம் , யூத மதம் உள்ளிட்ட மதங்களின் புனித நூல்களை படிப்பதற்கான வசதி இருக்கிறது.
கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை படிக்க விரும்பினாலோ , இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை படிக்க விரும்பினாலோ அல்லது இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை படிக்க விரும்பினாலோ அந்த நூல்களுக்கான இணைப்பை கிளிக் செய்து வாசிக்கலாம்.
நூல் தலைப்பை கிளிக் செய்ததுமே அவற்றின் உள்ள்டக்கம் ஒவ்வொரு அத்தியாயமாக தோன்றுகிறது. எளிமையான் வடிவமைப்பு வாசிப்பை எளிதாக்குகிறது என்றால், படித்த பகுதியில் மனதுக்கு பிடித்தவற்றை அடிக்கோடிட்டு கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த பகுதிகளை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
புனித நூல்களில் குறிப்பிட்ட பகுதியை மேற்கோள் காட்டி நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம். அவர்களுடன் விவாதிக்கவும் செய்யலாம்.
இந்த தளத்திலேயே உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டு புரிந்தலை வளர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேலும் புனித நூல்களில் தேவையான கருத்துக்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. அந்த வகையில் இந்த தளம் புனித நூல்களுக்கான தேடியந்திரமாகவும் செயல்படுகிறது.
மற்ற மதங்களில் உள்ள கருத்துக்களை அறிந்து கொண்டு மனிதநேய நோக்கில புரிதலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களை இந்த தளம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பீட்டர் மற்றும் ஜான் ஆகிய இரண்டு புரோகிராமர்கள் இந்த தளத்தை அமைத்துள்ளனர்.
இணையதள முகவரி; http://temple.io/