இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா?
அமெரிக்கவின் புரூக்லின் நகரைச்சேர்ந்த ஜூலியா வெய்ஸ்ட் என்னும் இளம்பெண் இத்தகைய ஒரு வார்த்தையை கண்டுபிடித்திருக்கிறார். நியூயார்க் பொது நூலகத்தில் 17 ம் நூற்றாண்டு புத்தகம் ஒன்றை ஆய்வு செய்து கொண்டிருந்த போது அந்த வார்த்தை அவர் கண்டறிந்திருக்கிறார். இரண்டு கயிறுகளால் பிணைக்கப்பட்டு ஒன்றிணைவது எனும் பொருளுக்காக பயன்படுத்தப்படும் அந்த வார்த்தை மாலுமிகள் மத்தியில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
ஜூலியா வெய்ஸ்ட் இந்த அரிதினும் அரிதான் சொல்லை உலகுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். அதற்காக என்றே ஒரு இணையதளம் அமைத்துள்ளார். இந்த வார்த்தை இடம்பெறும் பிரம்மாண்ட விளம்பர பலகையையும் அமைத்திருக்கிறார். ஆனால் இந்த வார்த்தையின் அரிதான தன்மை நீடிக்க வேண்டும் என நினைக்கும் அவர் தான் மட்டுமே அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறார். அதனால் தான் அதை இணையத்தில் வேறு யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
இது ஒரு பரிசோதனை தான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை என்றும் ஜூலியா கூறியிருக்கிறார். இணையத்தில் யாரேனும் இந்த வார்த்தையை பயன்படுத்தினால் அவர்களை தொடர்பு கொண்டு அதை அகற்றுமாறு கேட்டுக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இங்கு நான் தனிமையில் இருக்கிறேன். இங்கு நாம் ஒன்றாக இருக்கிறோம் என்று தனது இணையதளத்தில் அவர் கவித்துவமாக குறிப்பிட்டுள்ளார். இணையதளத்திற்கு யாரேனும் வருகை தரும் போதெல்லாம் அவரது வீட்டில் விளக்கு எரிவது போலவது அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த வகையில் இணையவாசிகளுடன் அவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
எல்லாம் சரி, அது என்ன வார்த்தை என் கேட்கிறீர்களா? ஜுலியா கோரிக்கைக்கு மதிப்பளித்து நாமும் அந்த சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.( விளம்பர பட புகைப்படத்தில் அதை காணலாம்).
இன்னும் ஆர்வம் இருந்தால் அவரது இணையதளத்திற்கு விஜயம் செய்யவும்: http://work.deaccession.org/reach/
தளம் புதிது; எங்கேயும் கேட்கும் கீதம்
இணையம் இசைமயமான வாழ்க்கையை அளித்திருக்கிறது. கம்ப்யூட்டரிலோ, டேப்லெட்டிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். இதற்கு கைகொடுக்கும் இணையதளங்களும் ஏராளம் இருக்கின்றன. ஆனால் கம்ப்யூட்டரில் கேட்டுக்கொண்டிருக்கும் அருமையான பாடலை அடுத்த அறையிலோ அல்லது தோட்டத்திலோ வேறு ஒரு சாதனத்தில் கேட்டு ரசிக்க விரும்பினால் என்ன செய்வது? கேபிள் இணைப்பு ,கான்பிகரேஷன் தொல்லைகள் இல்லாமல் இதை சாத்தியமாக்குகிறது ஸ்டீரிம் வாட் யூ ஹியர் இணையதளம்.
இதில் உள்ள மென்பொருளை டவுண்லோடு செய்து கொண்டால் கம்ப்யூட்டரில் ஒலிக்கும் பாடலை அருகாமையில் உள்ள எந்த சாதனத்திலும் கேட்கச்செய்யலாம். இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி: http://www.streamwhatyouhear.com/
—-
செயலி புதிது; இணைய உளவு
உங்கள் அபிமான இணையதளங்களில் புதிய தகவல்கள் இடம்பெறும் போதேல்லாம் தகவல் சொல்லும் கண்காணிப்பு சேவை இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அடிக்கடி விஜயம் செய்யும் தளங்களில் ஏற்படும் மாற்றங்களை அந்த தளங்களுக்கு செல்லாமலே தெரிந்து கொள்ள இவை உதவுகின்றன. இப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு இதே வசதியை கொண்டு வந்திருக்கிறது வெப் அலர்ட் செயலி.
இந்த செயலியை டவுண்லோடு செய்து கொண்ட பின், நாம் பின் தொடர விரும்பும் இணையதள முகவரியை இதில் குறிப்பிட்டு அந்த தளத்தில் எந்த பகுதியை கண்காணித்து தகவல் சொல்ல வேண்டும் என தெரிவித்தால் போதும் அதன் பிறகு அந்த தளம் அப்டேட் ஆகும் போதெல்லாம் தகவல் தெரிவித்து எச்சரிக்கை செய்யும். இகாமர்ஸ் தளங்களில் பொருட்களின் விலை மீது ஒரு கண் வைத்திருப்பதில் துவங்கி புதிய கட்டுரைகள் பதிவேற்றப்படுவதை தெரிந்து கொள்வது வரை பலவிதங்களில் இதை பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டில் டவுண்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=me.webalert&hl=en
இணைய செயல்பாடு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டை மேலும் விரைவாக்கும் பலவிதமான கீபோர்டு ஷார்ட்கட்களை நீங்கள் அறிந்திருக்கலாம். கீபோர்டில் மட்டும் அல்ல, நீங்கள் பயன்படுத்தும் மவுசிலும் இதே போன்ற ஷார்ட்கட்களை பயன்படுத்தலாம் தெரியுமா? பயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தும் போது ,இணைய இணைப்பை பார்க்கும் போது அதின் மீது கர்சரை வைத்து மவுசின் நடுவே கிளிக் செய்தால் அந்த இணைப்பு புதிய டேபில் தானாக ஒபனாகும். ஷிப்டில் கை வைத்து மவுசில் ஸ்கிரால் செய்தால் இதற்கு முன்னர் பார்த்த இணைய பக்கத்திற்கு செல்லலாம். மேல் பக்கமாக ஸ்கிரால் செய்தால் அடுத்த பக்கத்திற்கு தாவலாம்.
இதையே கண்ட்ரோல் கீயில் கை வைத்து செய்தால் எழுத்துருக்களை சிறியதாகவும், பெரிதாகவும் மாற்றிக்கொள்ளலாம். ஒரு டேபின் நடுவே கிளிக் செய்தால் அது மூடப்பட்டு விடும்.
—
இசை மோதல்
தொழில்நுட்பத்தை ரசிக்க விருப்பம் கொண்டவர்கள் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சேவை ஜாய் ஆப் டெக். இணையத்தின் பழமையான சேவைகளில் இதுவும் ஒன்று. தொழில்நுட்ப பித்தர்களுக்காக தொழில்நுட்ப பித்தர்களால் நடத்தப்படும் கீக்கல்சர் தளத்தின் உப சேவையான இதில் இணைய போக்குகளை விவரிக்கும் மற்றும் விமர்சிக்கும் கார்ட்டூன்களை கண்டு ரசிக்கலாம். ஒரே நேரத்தில் நகைச்சுவையும் வேண்டும், தொழில்நுட்ப தரிசனமும் தேவை என நினைப்பவர்களுக்கு இந்த கார்ட்டூன்கள் அருமையான விருந்தாக இருக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆப்பிள் மற்றும் பாடகி டெய்லர் ஸ்விப்ட் இடையிலான மோதல் பற்றி இதில் வெளியாகி இருக்கும் கார்ட்டூன்.
ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய இசை சேவைக்கு பாடகி துணிச்சலாக எதிப்பு தெரிவித்த விவகாரம் பற்றி தான் இணையத்தில் பெரிதாக பேசப்ப்படுகிறது. இதை கச்சிதமாக காட்சி மொழியில் சற்றே கேலி கலந்து சொல்கிறது இந்த பக்கம்.; http://www.geekculture.com/joyoftech/joyarchives/2157.html
—-
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.