இணையத்தில் எதையும் பகிர்ந்து கொள்வது எளிதானது தான். இணையதளங்களின் முகவரியாக இருந்தாலும் சரி, வீடியோ கோப்பாகவும் சரி, அவற்றை பகிர்ந்து கொள்ள இமெயிலில் துவங்கி பேஸ்புக், வாட்ஸ் அப் என பலவழிகள் இருக்கின்றன. இவற்றோடு இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியை கூகுள் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் டோன் எனும் பெரியரிலான இந்த சேவை மூலம் ஆடியோவாக அதாவது ஒலி வடிவில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த சேவையை பயன்படுத்த முதலில் கூகுள் டோன் நீட்டிப்பு சேவையை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். பிரவுசர் டூல்பாரில் இந்த சேவை நீல நிற பட்டனாக குடிகொண்டு விடும்.அதன் பிறகுஎப்போது இணையதள முகவரிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலும் சரி, நீல நிற பட்டனை கிளிக் செய்தால் போதும், அருகே உள்ள கம்ப்யூட்டரில் அந்த சின்னதாக ஒரு பீப் சத்தம் கேட்கும். கூடவே இணையதள முகவரிக்கான அறிவிப்பு வாசகமும் எட்டிப்பார்க்கும். அதை கிளிக் செய்தால் இணையதள முகவரி அந்த கம்ப்யூட்டரில் ஓபனாகும்.
இணையதள முகவரிகளை மட்டும் அல்ல, புகைப்படம் ,வீடியோ ஆகியவற்றை கொண்ட இணைய பக்கங்களையும் இந்த முறையில் பகிர்ந்து கொள்ளலாம். கூகுல் தேடல் முடிவுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
முகவரிகளை காபி செய்து இமெயில் அல்லது பேஸ்புக்கில் பேஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே கிளிக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த சேவை ஒலி வடிவில் செயல்படுவதால் கம்ப்யூட்டரில் உள்ள மைக் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அருகே உள்ள கம்ப்யூட்டர் அல்லது சாதனத்திலும் கூகுள் டோன் இருக்க வேண்டும்.
உலகில் எந்த மூளையில் இருப்பவருடனும் இணையம் வழியே இணைப்புகளை எளிதாக பகிர்ர்ந்து கொள்ளலாம் தான். ஆனால் ஒரே அறையில் உள்ளவர்களுடன் இணைப்புகளை பகிர்ந்து கொள்ள கூகுள் டோன் எளிமையான மற்றும் சுவார்ஸ்யமான வழி. ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆக, ஒரே அலுவலகத்திற்குள் அடிக்கடி பீப் சத்தம் கேட்டால் அது இணையமுகவரி பரிமாற்றமாக இருக்கலாம்.
கூகுள் டோன் சேவையை டவுண்லோடு செய்ய: https://chrome.google.com/webstore/detail/google-tone/nnckehldicaciogcbchegobnafnjkcne
—