கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பம் மூலம் பல வங்கிகளுக்கு விண்ணபிக்க முடியும். மாண்வர்கள் கல்வி கடன் விண்ணபங்களையும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
13 வங்கிகள் தங்களது 22 கல்வி கடன் திட்டங்களை இந்த தளத்தில் இடம்பெற வைத்துள்ளன. 5 முக்கிய வங்கிகள் தங்கள் அமைப்பை இந்த தளத்துடன் இணைத்துள்ளன.
இதே போல மத்திய அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.
கல்வி கடன் தொடர்பான தகவல்களை பெறவும், விண்ணப்பிக்கவும் வழி செய்யும் இந்த வகையான இணையதளம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் கடனுக்கான விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவலையும் இதன் மூலம் தெரிவிக்கும் வசதி உள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை மற்றும் சந்தேகங்கள் குறித்து இ-மெயில் மூலம் கோரிக்கை அனுப்பி விவரங்கள் பெறலாம்.
இணையதள முகவரி: https://www.vidyalakshmi.co.in
———