புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை தளம் அறிமுகமாகி இருக்கிறது தெரியுமா?
பேஸ்புக்கிற்கு போட்டியா? அல்லது என்ன இருந்தாலும் பேஸ்புக்கை மிஞ்ச முடியுமா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னால் ஒரு விஷயம்; இந்த சமூக வலைத்தளம் உண்மையில் புதுமையானது! எப்படி என்றால், பயனாளிகளுக்கு ’டிஜிட்டல் சாகாவரம்’ அளிக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் இறந்த பின்னரும் கூட அவர்கள் சமூக வலைப்பக்கத்தை உயிருடன் வைத்திருந்து அவர்கள் சார்பில் பதிவுகளையும் நிலைத்தகவலையும் வெளியிட்டுக்கொண்டிருக்கும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
மரணத்திற்கு பின் என்ன? எனும் கேள்வி மனித குலம் தோன்றிய நாள் முதல் கேட்கப்பட்டு வருகிறது. இந்த கேள்விக்கு விடை காணும் தத்துவ தேடலும் , விஞ்ஞான வேட்கையும் தொடரும் நிலையில், சமூக வலைப்பின்னல் யுகத்தில், இன்னொரு கேள்வியும் இதிலிருந்து கிளை விட்டிருக்கிறது.இணைய பயனாளிகளின் டிஜிட்டல் இருப்பு அவரது மரணத்திற்கு பிறகு என்ன ஆகும் எனும் கேள்வி தான் அது.
டிஜிட்டல் உலகின் இருத்தலியல் சிக்கல் என்று கூட இதை சொல்லலாம். இந்த கேள்விக்கு பதிலாக தான் எட்டர்9 (www.eter9.com) வலைப்பின்னல் சேவை உருவாகி இருக்கிறது. போர்ச்சுகல் நாட்டின் சாப்ட்வேர் வல்லுனரான ஹென்ரிக் ஜோர்கே இந்த சேவையை உருவாக்கி உள்ளார்.
அடிப்படையில் பேஸ்புக் போன்றது தான் என்றாலும் இரண்டு முக்கிய விதங்களில் இது மாறுபட்டது. இந்த சேவை செயற்கை அறிவு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் பயனாளிகளின் ஆளுமையை புரிந்து கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆக, காலப்போக்கில் இந்த தளம் அதன் பயனாளிகளின் குணாதிசயத்தை புரிந்து கொண்டு செயல்படும் தன்மை கொண்டிருக்கிறது என்று ஹென்ரிக் சொல்கிறார். இதன் காரணமாகவே இந்த தளம் பயனாளிகள் இறந்த பின்னரும் கூட அவர்கள் சார்பிலே பதிவுகளை வெளியிட்டிக்கொண்டிருக்கும். அவர்கள் உயிருடன் இருந்த போது இந்த சேவையை எப்படி பயன்படுத்தி வந்தனரோ அதே விதமாக மரணத்திற்கு பின்னரும் தொடர்ச்செய்யும். இந்த வகையில் பயனாளிகளுக்கு டிஜிட்டல் சாகாவரத்தை அளிக்க கூடியதாக இருக்கிறது.
ஒருவரது மரணத்திற்கு பின் அவரது சமூக வலைப்பின்னல் பக்கம் தொடர்ந்து இயங்குவது சுவாரஸ்யமாகவும், அதே நேரத்தில் திகிலூட்டக்கூடியதாகவும் கூட இருக்கலாம். ஆனால் இதற்கான சாத்தியத்தை செயற்கை அறிவு ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதை இந்த தளம் அழகாக பயன்படுத்திக்கொள்ள முற்பட்டிருக்கிறது.
இந்த தளத்தை பயன்படுத்துவதும் சுவாரஸ்யமாக தான் இருக்கும் என்ற எண்ணத்தை அதன் அறிமுக பகுதி உண்டாக்குகிறது.
இதில் பயனாளிகளுக்கு இடையிலான தொடர்பு இணைப்பு என குறிப்பிடப்படுகிறது. இணைப்புகள் அழைப்பு மூலம் உருவாக்கப்பட வேண்டும்.அழைப்புகளை ஏற்கலாம் ,நிராகரிக்கலாம். அதன் பிறகு பயனாளிகள் பதிவுகளை வெளியிடலாம். மற்றவர்கள் பதிவுகளை பார்த்து கருத்து தெரிவிக்கலாம் அல்லது புன்னகைக்கலாம். பேஸ்புக் லைக் போல இதில் புன்னகை. பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட சுவர் என்றால் இதில் அந்த பகுதி கார்டெக்ஸ் என குறிப்பிடப்படுகிறது. ( மூளையின் ஒரு அங்கம்).
இந்த இரண்டையும் இணைக்கும் பாலமும் இருக்கிறது.
அதாவது , பயனாளிகள் இந்த தளத்தில் தங்களுக்கான டிஜிட்டல் பிரதிநிதியை உருவாக்கி உலாவ விடலாம். கவுண்டர்பார்ட் என குறிப்பிடப்படும் இந்த பிரதிநிதி பயனாளிகள் லாக் அவுட செய்து சென்ற பிறகு கூட அவர்கள் சார்பில் வலைப்பின்னலுக்குள் உறவாடிக்கொண்டிருக்கும். சும்மாயில்லை, பயனாளிகள் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் புன்னகைக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு அவர்களை பற்றிய புரிதலை உண்டாக்கி கொள்ளும். இந்த டிஜிட்டல் ஆளுமையே பயனாளிகள் உலகில் இருந்து விடை பெற்ற பிறகும் அவர்கள் சார்பாக இயங்கி கொண்டிருக்கும்.
இவை தவிர நைனர்ஸ் எனும் டிஜிட்டல் ஜீவராசிகளும் இந்த தளத்தில் தோன்றுமாம். அவற்றை பயனாளிகள் சுவகரித்துக்கொண்டு வளர்க்கலாம். இவை எல்லாம் சேர்ந்து தான் இந்த தளத்தை செயற்கை அறிவின் மையமாக்குகிறது.
இணைய உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த சமூக வலைத்தளம் வேகமாக பயனாளிகளையும் ஈர்த்து வருவதாக ஹென்ரிக் கூறியிருக்கிறார்.
டிஜிட்டல் சாகாவரம் அளிக்க முற்படும் இந்த தளத்திற்கு முதலில் அவரால் சாகாவரம் அளிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்!.
இணைய முகவரி: https://www.eter9.com/auth/login
அடடா நம்ம டெஸ்கும் கூட இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? என ஏங்க வைக்கிறது டெஸ்க்ஹண்ட் இணையதளம். பெயர் உணர்த்துவது போலவே பலவிதமான டெஸ்க் (மேஜை) சூழலை படம் பிடித்து காட்டும் தளம் இது. டெஸ்க்கை மட்டும் அல்லாமல் அவற்றை பயன்படுத்தும் வடிவமைப்பாளர்களையும் அறிமுகம் செய்கிறது. டேனியல் எனும் இணைய வடிவமைப்பாளர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். இந்த தளத்திற்காக என்றும் ஊக்கம் தரக்கூடிய பணி சூழலை பெற்றிருக்கும் வடிவமப்பாளர்களை சந்தித்து பேட்டி கண்டு அவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்டாப் அமைந்திருக்கும் டெஸ்க்கின் தன்மையை விவரிக்கிறார். புதுமையான டெஸ்க் அமைப்பிற்கான யோசனையை நாடுபவர்களுக்கு இந்த தளம் ஊக்கமளிக்கும். நீங்களும் கூட உங்கள் டெஸ்க் சூழலை இதில் பகிர விருப்பம் தெரிவிக்கலாம்.
இணையதள முகவரி; http://deskhunt.com/
–
செயலி புதிது; உலகமே உங்கள் அலுவலகம்
நம் காலத்து செயலியாக கியூப் ப்ரி அறிமுகமாகி இருக்கிறது. அதாவது
அலுவலகம், வீடு தவிர பணியாற்றுவதற்கு பொருத்தமான கச்சிதமான இடத்தை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழி காட்டும் செயலியாக உருவாகி இருக்கிறது.
லேப்டாப் இருந்தால் போதும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றிக்கொள்ளலாம் எனும் சுதந்திரத்தை நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தி தந்திருப்பதால், ஓட்டல் வரவேற்பரை, பொது நூலகம், கஃபேக்கள் என பல இடங்களில் இருந்து வேலை பார்க்க முடிகிறது. இவை மட்டுமா, பலர் இணைந்து பணியாற்றும் பகிர்வு அலுவலக இடங்களும் இருக்கவே செய்கின்றன. அலுவகலத்தில் இருந்து விடுபட்ட நவீன நடோடிகளும் சரி, அலுவலகத்திற்கு வெளியே பணி புரியும் தேவை உள்ளவர்களும் சரி இத்தகைய பொது பணி இடங்களை விரும்பி நாடுகின்றனர். அவரவர்க்கு அபிமான பொது பணியிடங்கள் இருந்தாலும் பல நேரங்களில் புதியதொரு இடத்தை நாடும் நிலை வரலாம். புதிதாக ஒரு நகரத்திற்கு செல்லும் போது அங்கு அமைதியாக அமர்ந்து பணியாற்ற ஏற்ற வை-பை வசதி கொண்ட கஃபே அல்லது பொது நூலகம் எங்கிருக்கிறது என தேடலாம். இவ்வளவு ஏன் உள்ளூரிலேயே ஒரு மாற்றத்திற்காக இத்தகைய இடத்தை தேடலாம். இது போன்ற நேரங்களில் வழிகாட்டுகிறது கியூப் ப்ரி செயலி.
உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் எங்கெல்லாம் பொது பணியிடங்கள் அல்லது பகிர்வு பணியிடங்கள் இருக்கின்றன என்பதை இந்த செயலி வரைபடம் மூலம் சுட்டிக்காட்டுகிறது. அந்த இடங்களின் தன்மை, அங்குள்ள வை-பை வசதியின் ஆற்றல் உள்ளிட்ட விவரங்களையும் தருகிறது. அது மட்டுமா ? அங்கே இருக்கும் சக நடோடி பணியாளர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழி செய்கிறது. ஆக நட்பையும் தேடிக்கொள்ளலாம். இணைந்து பணியாற்றக்கூடிய தோழர்களையும் தேடலாம்.கூட்டு முயற்சி பிரியர்களுக்கு கூடுதலாக பயன் தரக்கூடிய செயலி இது!
செயலியை பயன்படுத்த: http://cubefreeapp.com/
——–
டிராப் பாக்சில் புதிய வசதி
கோப்பு பகிர்வு சேவையான டிராப் பாகிசில் இருந்த சின்ன குறை இப்போது சரி செய்யப்பட்டிருக்கிறது.இனி, டிராப் பாக்சில் கோப்புகளை சேமிக்கும் போது அவற்றுடன் இணைய முகவரிகளையும் சேமித்து வைக்கலாம். இதற்கான புதிய வசதி டிராப் பாக்சில் அறிமுகமாகி இருக்கிறது. இணைய முகவரிகளை டிராக் செய்து டிராப் பாக்ஸ் பக்கத்தில் சேமித்து விடலாம். டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் என எல்லா சாதனங்களிலும் இந்த வசதியை பயன்படுத்தலாம். இதன் பொருள் சேமித்த இணைய முகவரிகளை எந்த இடத்தில் இருந்தும் எந்த சாதனத்தில் இருந்தும் பயன்படுத்தலாம்.
சேமிக்கும் இணைய முகவரிகளை எப்போது வேண்டுமானால் கிளிக் செய்து பயன்படுத்தலாம். கிட்டத்தட்ட புக்மார்க் வசதி போலவே இதை பயன்படுத்தலாம். ஆனால் , சேமிக்கும் முகவரிகளை டேக் செய்யவோ, குறிப்பிட்ட தலைப்பில் வகைப்படுத்தி அடையாளப்படுத்தவோ வசதி இல்லாதது தான் ஒரே குறை.
இது தொடர்பான டிராப் பாக்ஸ் அறிவிப்பு: http://tech.firstpost.com/news-analysis/you-can-now-drag-and-drop-urls-into-your-dropbox-278707.html
——-
ஹாங்கவுட்டிற்கு புதிய இல்லம்
கூகுள் ஹாங்கவுட் சேவைக்காக புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. hangouts.google.com எனும் அந்த தளத்தின் மூலம் ஹாங்கவுட் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். வீடியோ அழைப்பு, தொலைபேசி அழைப்பு மற்றும் மேசிஜிங் ஆகிய வசதிகளை முகப்பு பக்கத்தில் இருந்தே எளிதாக அணுகலாம். ஹாங்கவுட்டை பயன்படுத்துவதற்காக இன்னொரு வழியை அறிமுகம் செய்திருப்பதாக கூகுள் இது பற்றி தெரிவித்திருக்கிறது இதன் மூலம் ஜி-மெயில் மற்றும் ஜி-பிளஸ்சில் இருந்து ஹாங்கவுட்டை விடுவித்திருக்கிறது. பிரவுசரில் இருந்தே ஹாங்கவுட் வசதியை எளிதாக பயன்படுத்துவதையும் இது சாத்தியமாக்குகிறது.
—–
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.