அகதிகள் நிலையும், ஸ்டீவ் ஜாப்சும்

images
ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா?
இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியுமா?ஆப்பிள் இணை நிறுவனர்,ஐபாடு துவங்கி ஐபோன் வரை உருவாக்கியவர், அதற்கு முன்னர் மேக்கிண்டாஷ் நாயகன் ஸ்டீவ் ஜாப்சை யாருக்கு தான் தெரியாது!
ஆனால்,இந்த கேள்வியை தான் பேங்க்ஸி (Banksy) கேட்டிருக்கிறார். அதாவது கேட்க வைத்திருக்கிறார்.அவர் உருவாக்கியுள்ள சுவரோவியம் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் யார் தெரியுமா? என கேட்டுள்ளோடு,யோசிக்கவும் வைத்திருக்கிறார்.

இப்போது பலருக்கும், யார் இந்த பேங்க்ஸி என்று கேட்கத்தோன்றலாம்.பேங்க்ஸி ஒரு வீதி கலைஞர். கொஞ்சம் கலகத்தன்மை கொண்ட ஓவியர்.உலகம் இதுவரை அவரது சுவரோவியங்களை தான் பார்த்திருக்கின்றன.ஆனால் அவரை பார்த்ததில்லை.ஒருவருக்கும் பேங்க்ஸி யார் என்பது தெரியாது. அதனால் தான் அவரை தலைமறைவு ஓவியர் என்று அழைக்கின்றனர்.பொது இடங்களில்- பெரும்பாலும் சுவர்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓவியங்களை வரைந்துவிட்டு சென்று விடுவது தான் அவரது ஸ்டைல்.

பேங்க்ஸி வரைந்து செல்லும் ஓவியங்கள் அநேகமாக சமூக போக்கை விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கும். அதன் காரணமாகவே பேசப்படுவதாகவும் இருக்கும்.
உலகம் கவனிக்க வேண்டும் என தான் நினைக்கும் விஷயங்களை சுவரோவியமாக வரையும் பழக்கம் கொண்ட பேங்க்ஸி,சிற்பங்கள்,மற்றும் நிகழ் கலை படைப்புகளையும் இதே பாணியில் உருவாக்கி கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது படைப்புகளை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
ஆனால்,பேங்க்ஸியின் கலை நிச்சயம் கவனத்தை ஈர்த்து,விவாதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.போர், சுற்றுச்சூழல்,இளமைக்கால வறுமை, நுகர்வு கலாச்சாரம் என்று பல பிரச்சனைகளை பேங்க்ஸி தனது படைப்புகள் மூலம் காட்டமாக விமர்சித்து வருகிறார்.
இப்படி தான் சமீபத்தில் பேங்க்ஸி ஆப்பிள் இணை நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்சை சுவரோவியமாக வரைந்திருக்கிறார்.

பேங்க்ஸி இந்த ஓவியத்தை வரைந்த இடம் மற்றும் வரைந்த விதம் இரண்டுமே முக்கியமானது. பிரான்சில் உள்ள கலியாஸ் (Calais) எனும் இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். ஓவியத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரது அடையாளமான ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட்டில், ஒரு கையில் அவர் உருவாக்கிய மைல்கல் கம்ப்யூட்டரான மேகிண்டாஷை பிடித்த படி மறு கையில் தனது மூட்டை முடிச்சுகளை தோளில் தொங்கவிட்ட படி காட்சி அளிக்கிறார். ஜாப்சின் இந்த தோற்றத்தை பார்த்தால் அவர் ஒரு அகதி போல தோன்றும்.
இப்படி ஒரு தோற்றத்தில் ஜாப்சை வரைந்தன் நோக்கம் எந்த விதத்திலும் அவரது புகழுக்கு கலங்கம் விளைவிப்பது அல்ல; மாறாக , ஸ்டீவ் ஜாப்ஸ் யார் என்று தெரியுமா? என கேட்டு, அதற்கு பதிலாக அவர் அகதியின் மகன் என்பதை நினைவுபடுத்துவது தான்.உலகை உலுக்கி கொண்டிருக்கும் சிரியா அகதிகள் பிரச்சனை குறித்து கவனத்தை ஈர்க்கும் விதமாக தான் ஜாப்சை இந்த கோலத்தில் வரைந்திருக்கிறார்.

ஜாப்சின் தந்தை, அப்துல் பத்தா ஜண்டாலி, சிரியா நாட்டைச்சேர்ந்தவர். பின்னர் லெபனான் நாட்டில் படித்திக்கொண்டிருந்தவர்,அங்கு புரட்சி ஏற்பட்ட போது அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். அமெரிககாவின் ஜாப்சின் தாயை சந்தித்து காதல் கொண்டவர், பிறகு ஜாப்சை தத்து கொடுத்துவிட்டார்.
ஜாப்சை நன்கறிந்தவர்களுக்கு கூட இந்த பின்னணி அவ்வளவாக தெரிந்திருக்காது.
இதை தான் பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் நினைவுபடுத்தி, அகதிகள் பிரச்சனையில் அவர்கள் சார்பாக குரல் கொடுத்திருக்கிறார்.
சிரியாவில் இருந்து குடிபெயர்ந்த அகதியின் மகன் எனும் குறிப்பை மட்டும் இந்த ஓவியத்துடன் பேங்க்ஸி எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் லட்சகணக்கில் குவிந்துள்ள சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அகதிகளை ஒரு பிரச்சனையாக அல்லாமல் , ஒரு வளமாக கருத வேண்டும் எனும் கருத்தை பேங்க்ஸி தனது ஓவியம் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.
பொதுவாக பேங்க்ஸி ஓவியங்கள் மூலம் மட்டுமே பேசுவார். விதிவிலக்காக இந்த முறை தான் வரைந்த ஓவியம் தொடர்பாக ஒரு விளக்கத்தையும் அவர் பிரிட்டன் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், குடிபெயர்தலை (அகதிகள்) நாட்டின் வளத்திற்கான இழப்பாக பார்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது, ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிரிய அகதியின் மகன் தான். அவர் உலகின் மதிப்பு மிக்க ஆப்பிள நிறுவனத்தை உருவாக்கினார்.சிரியாவின் ஹாம்ஸில் இருந்து வந்த ஒரு இளைஞரை நாம் அனுமதித்ததால் தான் இது சாத்தியமாயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

அகதிகளாக வருபவர்களில் அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கலாம் எனும் கருத்தை முன்வைத்து அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த ஓவியங்களை அவரது இணையதளத்திலும் (http://www.banksy.co.uk/index1.asp )காணலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர சிரிய அகதிகளின் நிலையை உணர்த்தும் வேறு இரண்டு சுவரோவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இந்த ஓவியங்கள் அகதிகள் சார்பாக மனிதநேய வாத்ததை வலுவாக முன்வைக்கின்றன.
——–

செயலி புதிது; எனக்கேற்ற செயலி

ஆண்ட்ராய்டு புதிய செயலிகளை கண்டறிய வேண்டும் என்றால் கூகுள் பிளேஸ்டோரில் தேடலாம். அதே போல ஐபோன் அல்லது ஐபேடிற்கான செயலிகள் தேவை என்றால் ஆப்ஸ்டோரில் தேடிக்கொள்ளலாம். ஆனால், இந்த தேடல் வசதி குறித்து அதிருப்தி கொள்ளும் பயனாளிகள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆப்ஸ்டோரில் ஒருவர் எதிர்பார்க்கும் செயலியை தேடுவது அத்தனை எளிதல்ல என்ற பலரும் நினைக்கலாம்.இந்த குறையை போக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது ஆப்ஆப்.இயோ (https://appapp.io/us).
இதில் ஐபோன் பயனாளிகள் தாங்கள் எதிர்பார்க்கும் செயலிகளை எளிதாக தேடிக்கொள்ளலாம். தேவையான செயலிகளை எளிதாக தேடுவது தவிர இதில் பரிந்துரைக்கப்படும் செயலிகளையும் பல வித தலைப்புகளில் பார்க்கலாம். விளம்பர தொல்லைகள் கொண்ட செயலி போன்றவற்றை தவிர்த்து, எதிர்பார்க்கும் பயனுள்ள செயலியை தேடிக்கொள்ளலாம் என உறுதி அளிக்கிறது இந்த தளம். ஏனெனில், இதனை உருவாக்கியவர், தனது மகளுக்காக ஐபேடில் பயன்படுத்தக்கூடிய கணிதம் சார்ந்த நல்ல செயலியை எளிதாக தேட முடியாமல் வெறுத்துப்போன பின், தன்னைப்போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த தளத்தை ஐபோன் செயலிகளுக்கான தேடியந்திரமாக உருவாக்கி இருக்கிறார்.

———

தளம் புதிது: காமிரா கல்லூரி

உடனடியாக புகைப்படம் எடுக்க உதவிய போலாராய்டு காமிராக்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் நினைவிருக்கிறதா? ஸ்மார்ட் போன் யுகத்தில் போலாராய்டு காமிராவின் மகத்துவம் மங்கிதான் போய்விட்டது. அதனால் என்ன ,இக்காலத்திற்கு ஏற்ப தன்னை தக்கவைத்துக்கொள்ள முயன்று வரும் போலாராய்டு ஸ்மார்போனை வைத்துக்கொண்டு சிறந்த முறையில் புகைப்படம் எடுக்கும் கலையை கற்றுத்தர விரும்புகிறது. இதற்காக என்றே போலாராய்டு யூனிவர்சிட்டி எனும் இணைய பல்கலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த காமிரா கல்லூரியில் தொழில்முறை புகைப்படக்கலைஞர்கள் புகைப்பட கலையில் பாடங்களை கற்றுத்தர உள்ளனர். முதல் பாடம் என்ன தெரியுமா? ஐபோனை தொழில்முறை புகைப்பட கலைஞர் போல பயன்படுத்துவது எப்படி ? என்பது.
இதே போல தொடர்ந்து புகைப்பட பாடங்கள் பதிவேற்றப்பட உள்ளது. முதல் பாட்த்தை இலவசமாக பயிலலாம். ஆனால் அதன் பிறகு ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும். எந்த ஒரு காமிராவையும் கொண்டு உயர் தரமான புகைப்படம் மற்றும் வீடியோவை உருவாக்குவது எப்படி என கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்த பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இணைய முகவரி: https://www.polaroiduniversity.com/

வைரல் வீடியோக்கள்

இணையத்தில் வைரலாக பரவும் வீடியோக்களுக்கு பஞ்சமேயில்லை. புதிதாக வைரலாக பரவுக்கொண்டிருக்கும் வீடியோக்களை அடையாளம் காட்டுவதற்கு என்றே பஸ்ஃபீடில் துவங்கி நம்மூரின் ஸ்கூப்வூப் வரை பல இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் என்ன சிக்கல் என்றால் எந்த வீடியோ வைரலாக பரவும் என்பதை அடையாளம் காண்பது தான். அதாவது ஒரு வீடியோ வைரலாக பரவும் முன்னரே அதை கணிப்பது என்பது மிகவும் கடினமானது.ஆனால் இப்போது வைரல் வீடியோக்களை ஆரம்பத்திலேயே கண்டறியக்க்கூடிய வசதியை வீடியோ பகிர்வு சேவை தளமான யூடியூப்பே அறிமுகம் செய்திருக்கிறது.செய்தி தளங்களில் பிரபலமாகும் இருக்கும் , அதிகம் வாசிக்கப்படும் செய்திகளை அடையாளம் காட்டும் டிரெண்டிங் பகுதி போல யூடியூப்பில் மேலெழும் வீடியோக்கள் டிரெண்டிங் பகுதியில் பட்டியலிடப்படுகின்றன. டிரெண்டிங் டேப் (https://www.youtube.com/feed/trending) மூலம் அடுத்த வைரல் வீடியோவை கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு சொல்கிறது யூடியூப். இணையவாசகள் ஆமோதிக்கின்றனரா? வைரல் வீடியோக்கள் இதற்கு கட்டுப்படுகிறதா? என பார்ப்போம்.

5 ஆண்டுக்கு பிறகு ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன்களின் அசுர வளர்ச்சி வியப்பை அளிக்கலாம். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போன்களே அவுட்டேடாகி விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எரிக்சன் நிறுவனத்தின் நுகர்வோர் ஆய்வுக்கூடம் நடத்திய ஆய்வில் தான் இப்படி ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 50 சதவீத்ம் பேர் ஐந்தாண்டுகளில் ஸ்மார்ட்போனுக்கான தேவையே இல்லாமல் போய்விடும் என்று கூறியிருக்கின்றனராம். செயற்கை அறிவின் வளர்ச்சியால் , கையில் போனே இல்லாமல் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியம் உண்டாகும் என்பதால் போனுக்கோ,டேப்லெட்டிற்கோ தேவையே இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கையில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பது என்பது தொல்லை தரும் அனுபவம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பலரும் கூறியுள்ளனர். கார் ஓட்டும் போதோ சமைக்கும் போதோ போனை கையில் வைத்திருப்பது போன்ற சங்கடத்தை சுட்டிக்காட்டி தான் இப்படி கூறியிருக்கின்றனர். எனில், வருங்காலம் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள்!.

——–

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *