ஜெஸா கிரிஸ்பின், இணையத்தில் மிகப்பெரிய சாதனையாளர் எல்லாம் கிடையாது- அதனால் தான் அவரை அறிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதாவது அவர் இணையத்தில் பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை; ஆனால் எல்லோரும் அறிந்தவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. அதற்காக முயற்சிக்கவில்லை. முக்கியமாக எந்த சமரசங்களிலும் ஈடுபடாமல், கிளிக்குகளை அள்ளுவதற்கான வலை விரிப்பு உத்திகளில் எல்லாம் ஈடுபடாமல் தனக்கும்,தன்னை போன்றவர்களுக்கும் ஈடுபாடு மிக்க கதை,கவிதை,கட்டுரைகள் தேடி பகிர்ந்து கொண்டு வந்தார். இதற்கான வாகனமாக திகழ்ந்த புக்ஸ்லட் இணைய இதழை மூடப்போவதாக அவர் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
யாரிந்த கிரிஸ்பின்
உண்மையில் இந்த அறிவிப்பு மூலமே ஜெஸா கிரிஸ்பினையும், அவரது இணைய இதழான புக்ஸ்லட்டையும் அறிந்து கொண்டுள்ளேன். இருந்தும் என் இணைய அறியாமையை நொந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன எனில், கிரிஸ்பின், 14 ஆண்டுகளாக நடத்தி வந்த இணைய இதழை நிறுத்த முடிவு செய்திருக்கிறார் என்பது தான். அதைவிட முக்கியமான விஷயம் இந்த முடிவை முன்வைத்து அவர் இணையம் தொடர்பாக முன்வைத்திருக்கும் சில கருத்துக்கள் தான். ஒரு சுயேட்சை இலக்கிய ஆர்வலராக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இணையதத்தின் சமகால போக்கை லேசாக உலுக்கியெடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இணைய இதழ்கள் செழித்து விளங்கிய இணைய பொற்காலத்தையும் திரும்பி பார்த்து ஏங்க வைத்திருக்கிறது.
இந்த இடத்தில் இணைய இதழ் எனும் சொல் உண்டாக்க கூடிய கிளர்ச்சியை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறேன். இணையம் மூலம் நடத்தப்படும் பத்திரிகைகளே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை வெப்சைன் என அழைக்கப்படுகின்றன. வெப்சைன் என்றால் ஆர்வம் உள்ள எவரும் நடத்தக்கூடிய இதழ் என்று பொருள். அதற்கு முதலீடு வேண்டாம். பெரும் வாசக கூட்டம் வேண்டாம். வருவாயும் கொட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. இலக்கிய மகுடங்களும், விமர்சன சான்றிதழ்களும் தேவையில்லை. ஆர்வம் உள்ள ஒருவர் அந்த ஆர்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்தாலே போதுமானது. அந்த ஆர்வத்தை புரிந்து கொண்டு படித்து பாராட்டக்கூடிய வாசகர்களை தேடிக்கொள்ளலாம்.
ஒரு பத்திரிகை நடத்தும் ஆர்வத்தை இணையம் நிறைவேற்றி தந்தது தான் இணைய இதழ்களின் சிறப்பாக இருந்தது.
புக்ஸ்லட் துவக்கம்
இப்படி இணையத்தின் ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு 2002 ல் கிரிஸ்பின் துவக்கிய இணைய இலக்கிய இதழ் தான் புக்ஸ்லட். அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் பிறந்து வளர்ந்து ஆஸ்டின் நகரில் வசித்து வந்த கிரிஸ்பினுக்கு அப்போது 23 வயது தான். கல்லூரி படிப்பை கூட முடித்திராத கிரிஸ்பின் புத்தகங்களை தேடித்தேடி படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். அவர் பார்த்து வந்த வேலையில் கைநிறைய நேரம் இருக்கவே, நேரத்தை கொல்லும் சோதனை முயற்சியாக புத்தக விமர்சனங்களை தனது வலப்பதிவில் எழுதத்துவங்கினார். அதை பலரும் படித்து ஊக்குவிக்கவே கூடுதல் உற்சாகத்துடன் அதிகமாக எழுதத்துவங்கினார்.
அதன் பிறகு பணி மாற வேண்டிய நிலை ஏற்பட்ட போது, புக்ஸ்லட்டையே முழு நேர வேலையாக ஏற்றுக்கொண்டு இலக்கிய இதழாக நடத்தினார். அந்த ஆண்டே டைம் பத்திரிகை 50 சிறந்த இணையதளங்களில் ஒன்றாக அவரது இணைய இதழை அடையாளம் காட்டியது.
அங்கீகாரமும் பாராட்டும்
அதன் பிறகு அவர் தொடர்ந்து அந்த இதழை உற்சாகமாக நடத்தி வந்தார். புத்தக விமர்சனம், இலக்கிய கட்டுரைகள், எழுத்தாளர்கள் நேர்கானல்கள் என ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார். இதனிடையே இலக்கிய வலைப்பதிவாளராக அங்கீகரிக்கப்பட்டு முன்னணி நாளிதழ்களில் புத்தக விமர்சனம் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. பதிப்புலகம், பத்திரிகை உலகம் இரண்டிலுமே எந்த அனுபவம் இல்லாதவர் இலக்கிய உலகில் தனக்கான சிறிய இடத்தை தேடிக்கொண்டார். அவர் எழுதிய கட்டுரைகள் புத்தக வடிவிலும் வெளியாகின.
இதை எல்லாம் விட முக்கியமான விஷயம் புக்ஸ்லட் இணைய இதழை கிரிஸ்பின் நடத்திய விதம் தான். எல்லோரும் பெஸ்ட் செல்லர் பின்னர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அவர் வெகுஜன சந்தை பற்றி கவலைப்படாமல் பரவலாக கவனிக்கப்படாத படைப்புகளை அடையாளம் காட்டி வந்தார். அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களை விரிவாக பேட்டி கண்டு நீளமான நேர்கானல்களை வெளியிட்டு வந்தார். வெளிநாட்டு படைப்பாளர்கள் எழுத்துக்களை அறிமுகம் செய்தார். தொலைதூர நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்களை எல்லாம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த வகையில் உண்மையான இலக்கிய இதழாக புக்ஸ்லட் செயல்பட்டு வந்தது. ஆக, இணையம் மூலம் சாதித்த சாமானியராகவே கிரிஸ்பின் இருக்கிறார்.
மூடுவிழா ஏன்?
இந்நிலையில் தான் அவர் புக்ஸ்லட்டை தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். புக்ஸ்லட்டின் கடைசி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவை எடுத்தது பற்றி அவர் கார்டியன் நாளிதழில் அருமையான பத்தி ஒன்றை எழுதியிருக்கிறார். இணைய சுதந்திரம் செழித்த காலத்தில் புக்ஸ்லட் மலர்ந்தது, இன்று இணையமே அதை கொன்றுவிட்டது என்பது போன்ற தலைப்பில் அமைந்துள்ள அந்த கட்டுரையின் மைய விஷயம், இணையம் மாறிவிட்டது, இப்போது இணையத்தில் எல்லோரும் கிளிக்குள் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதை என்னால் செய்ய முடியாது என்பது தான்.
இணையம் மூலம் கருத்துக்களை பகிரும் சுதந்திரம் மட்டுமே பொருட்படுத்தக்கூடிய விஷயமாக இருந்த நிலை மாறி இப்போது இணையத்தில் பணம் சம்பாதிக்க முடிகிறது. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு விளம்பர நிறுவனங்களை கவர வேண்டும், அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கிளிக்குகளை காட்ட வேண்டிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். ஆனால் கிளிக்குகளை பெற வேண்டும் என்றால், எதை விரும்பி படிக்கின்றனரோ அதை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளவர், இந்த நிலையில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார்.
ஒரு ஆர்வலராக மட்டும் இருக்கும் போது விரும்பியதை எல்லாம் எழுத முடிகிறது, 20 பேர் மட்டும் கேள்விபட்டுள்ள எழுத்தாளரின் நீளமான பேட்டியை வெளியிட முடிகிறது. எந்த தடையும் ,வரம்பும் இல்லாமல் செயல்பட முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளவர், கிளிக்களுக்கு தூண்டில் போடும் இடமாக இணையம் மாறிவிட்ட காலத்தில் இது சாத்தியமாகவில்லை என கூறியிருக்கிறார்.
இணைய கால விமர்சனம்
அவருடைய கட்டுரை, புலம்பலாகவோ, முறையீடாகவோ அமையாமல் இந்த காலத்தின் இணைய போக்கை படம் பிடித்து காட்டி விமர்சிக்கும் வகையிலேயே இருக்கிறது.கவனம் பெறுவதையும், லைக்குகளை அள்ளுவதையும், வைரலாக பரவுவதையுமே முக்கியமாக கருதும் இணையவாசிகளை அவர் ஐய்யோ பாவம் என பார்ர்த்து பரிதாப்படுவதாகவே தோன்றுகிறது.
அந்த கால இணையம் காணமால் போன குறைய நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளவர், கடந்த காலத்தில் மூழ்கியிருக்க விரும்பாவிட்டாலும், இணையத்தில் வருவாய் ஈட்டுவதற்காக மட்டுமே தன்னால் அதன் விதிகளுக்கு ஏற்ப வளைய முடியாது என்பது போல குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த ஒரு இதழ் மூடப்படுவது கொஞ்சம் வருத்தமானது தான். ஆனால் புக்ஸ்லட் மூடப்பட்டது மட்டும் வருத்தம் தரவில்லை, புக்ஸ்லட் போன்ற சுயேட்சையான இணைய இதழ்கள் மூடப்படும் நிலையை இன்றைய இணையம் ஏற்படுத்தியிருப்பது தான் வருத்தமாக இருக்கிறது.
ஏதாவது ஒரு கட்டத்தில் இதற்கு இணைய வாசகர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் கிரிஸ்பின்.
இணையம் மாறிவிட்டது. லாப கணக்குகள் பற்றிய கவலை இல்லாமல் ஈடுபாட்டின் அடிப்படையில் மட்டுமே இலக்கிய ஆர்வலர்கள் இயங்கிய காலம் திரும்பி வருமா என்று தெரியவில்லை. அப்படி எதிர்பார்ப்பதும் சரியாக இருக்குமா? என்று தெரியவில்லை. இணையத்தின் பரிணாம வளர்ச்சி இது. நாம் பார்த்து பழகிய இணையம் இன்னும் என்ன என்னவோ மாற்றங்களை வளர்ச்சியாக சந்திக்க உள்ளது.
அதற்காக இணையத்தின் ஆதார தருணங்களை திரும்பி பார்க்காமல் இருந்துவிட முடியுமா என்ன? அந்த வகையில் இணைய இதழ்களின் பொற்காலம் பற்றி அசைபோட வைத்து நம் கால இணையம் பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார் கிரிஸ்பின்.
தமிழ் இணைய இதழ்கள்
இந்த கட்டுரையை முன் வைத்து தமிழ் இணைய இதழ்களை நினைத்து பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும்.
இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் மற்றும் பிர இதழ் கட்டுரைகளை வெளியிட்டு வரும் கீற்று, ஆழமான அறிவியல் கட்டுரைகள் வெளியிட்டு வரும் சொல்வனம், அருமையான இலக்கிய கட்டுரைகள் உள்ளிட்ட படைப்புகளை வெளியிட்டு வரும் மலைகள் ஆகிய முயற்சிகள் பளிச்சென நினைவுக்கு வருகின்றன.
கிரிஸ்பின் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் சூழலில் கிளிக்குகள் பின்னே சென்று, இணையம் தந்த சுதந்திரத்தை இழக்க விரும்பாதது பற்றி குறிப்பிட்டு ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால் இணையம் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு அதிகம் இல்லாத தமிழ் இணைய சூழலில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த இணைய இதழ்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அந்த வகையில் வருவாய் வாய்ப்பில்லாத நிலையிலும் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் வலைப்பதிவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்பிக்கிறேன்.
—
புகஸ்லட் இணைய இதழ்;http://www.bookslut.com/
ஜெஸா கிரிஸ்பின் எழுதியுள்ள கட்டுரை: http://www.theguardian.com/books/booksblog/2016/may/16/bookslut-was-born-in-an-era-of-internet-freedom-todays-web-has-killed-it
———
பிரதிலிபியில் பகிர்ந்து கொண்டது:
தகவல் திங்கள் எனும் பெயரில் தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதி வந்த இணையம் தொடர்பான பத்தியை இனி பிரதிலிபியில் தொடர உள்ளேன். தற்பதிப்பு சேவைக்கான தளமாக விளங்கும் பிரதிலிபியில் பிரத்யேக ஆக்கம் எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், தகவல் திங்கள் பத்தியை இதில் தொடர்கிறேன். சாமானியர்கள் இணையத்தில் தங்களை படைப்புகளை வெளியிடும் ஆற்றல் மற்றும் எளிதான பதிப்பிக்கும் சாத்தியத்தை உணர்ந்த ஆரம்ப கால இணையத்தின் அடையாளமாக திகழும், ’இணைய இதழ்கள்’ பற்றிய கருத்துக்களை அசைபோடும் வகையில் முதல் பத்தி அமைந்த்து தற்செயலானது என்றாலும் பொருத்தமாகவே இருக்கிறது——

1 Comments on “தகவல் திங்கள்; இணைய இதழ் எனும் பழைய அற்புதம்!”
இ.பு.ஞானப்பிரகாசன்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சைபர்சிம்மன் அவர்களுக்கு நேச வணக்கம்!
இது, இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாத கேள்விதான். இருந்தாலும் நேயர்களின் விருப்பத்துக்கேற்பப் பதிவு எழுத விரும்புவதாகக் ‘கேளுங்கள்’ பக்கத்தில் தெரிவித்துள்ள நீங்கள் கண்டிப்பாக இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.
அண்மையில், பிளாகர் தன் வலைப்பூக்கள் அனைத்தும் ‘http’-யிலிருந்து ‘https’-க்கு மாறப் போவதாக அறிவித்திருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பின், கடந்த மாதக் கடைசியில் ஒருநாள், மாற்றி விட்டதாக அறிவிப்பும் வந்தது. ஆனாலும், எல்லா பிளாகர் வலைப்பூக்களும் இன்னும் ‘http’-யில்தான் அமைந்திருக்கின்றன. எனில், நாமேதான் போய் ‘அமைப்புகள்’ பகுதியில் மாற்றிக் கொள்ள வேண்டுமா? அந்த வசதிதான் ஏற்கெனவே இருந்ததே? மேலும், அப்படி நாமே மாற்றினாலும், உலவியின் முகவரிப் பட்டியின் (address bar) ஓரத்தில் ‘இந்தத் தளம் பாதுகாப்பானது இல்லை’ என்கிற அறிவிப்புடன் முக்கோணக் குறியீடு ஒன்று காட்டப்படுகிறதே? எனில், இதை வைப்பதால் என்ன பயன்?
இப்படி, இந்த மாற்றம் குறித்து நிறையக் கேள்விகள், குழப்பங்கள். எனவே, கனிவு கூர்ந்து நீங்கள் இது பற்றி விரிவாக எழுத வேண்டுகிறேன்! இப்படி, இணைய உலகின் மாற்றங்கள், அறிவிப்புகள் குறித்து உடனுக்குடன் எழுதினீர்களானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி! வணக்கம்!