மாத வருமானம், செலவுகளை குறித்து வைக்க உதவும் நிதி நிர்வாக செயலிகள் பல இருக்கின்றன. இந்த செயலிகளில் செலுத்த வேண்டிய பில்கள் போன்றவற்றையும் குறித்து வைக்கலாம். இதே போல, நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து செய்யும் செலவுகளை பதிவு செய்து, யாருக்கு எவ்வளவு தொகை என பங்கு பிரித்து செலவுகளை நிர்வகிக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன.
இந்த வகையில் இப்போது, தனிநபர்கள் தங்களுக்கு வர வேண்டிய கடன் தொகை மற்றும் தாங்கள் மற்றவர்களுக்கு தர வேண்டிய கடன் தொகைகளையும்.
குறித்துவைத்துக்கொள்வதற்கான செயலி அறிமுகம் ஆகி உள்ளது. ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெப்ட் ரிமைண்டர் எனும் இந்த செயலி மூலம், ஒருவர் தங்களுக்கு யாரிடம் இருந்து பணம் வர வேண்டும் என குறித்து வைக்கலாம்.
அந்த விவரத்துடன் தொடர்புடைய நபர்களின் அடையாளத்தையும் இடம்பெற வைக்கலாம். இந்த விவரம் தொடர்பான நினைவூட்டலையும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். செயலியில் தேடினாலே , யார் எவ்வளவு தர வேண்டும் என தெரிந்து கொண்டு விடலாம். அதே போலவே ஒருவர் தர வேண்டிய கடனுக்கான நினைவூட்டலையும் இவ்வாறு குறித்து வைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு:https://itunes.apple.com/app/id1062994208?mt=8