தகவல் திங்கள்: ஒரு இணையதளம் ஏன் மூடப்படுகிறது? சில கேள்விகள், சில சிந்தனைகள் !

indexஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

சிகிரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச்செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகிரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச்செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

அதே போல இணையதளங்கள் மூடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் அவை விடைபெறும் போது ஒரு அறிவிப்பு, மூடப்பட்டதற்கான எளிய விளக்கம் இதை தான் எதிர்பார்க்கிறேன்.

ஆனால் எத்தனை இணையதளங்கள் இதை நிறைவேற்றுகின்றன?

பெரும்பாலான தளங்கள் முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்டு, இருந்த சுவடே தெரியாமல் காணாமல் போகின்றன. குறிப்பிட்ட அந்த இணையதளம் இனியும் செயல்பாட்டில் இல்லை என அறிய நேர்வதே அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் இணையத்தில் இத்தகைய அனுபவத்தை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை இணையவாசிகளும் ஒப்புக்கொள்வார்கள்.

உண்மையில் இதை விதவிதமாக எதிர்கொண்டு வருகிறோம். அருமையான ஒரு இணையதளத்தை தேடிக்கண்டுபிடித்து புக்மார்க் செய்து வைத்திருப்போம். தொடர்ந்து பயன்படுத்தியும் வருவோம். திடிரென ஒரு நாள் பார்த்தால் அந்த தளத்தின் முகவரியை டைப் செய்து அணுக முற்படும் போது அது செயல்பாடற்று முடங்கி விட்டிருப்பதை பார்க்கலாம். இன்னும் சில நேரங்களில், குறிப்பிட்ட தகவலை தேடும் போது என்றோ பார்த்த பொருத்தமான இணையதளம் நினைவுக்கு வரும். உடனே அந்த தளத்தை சென்று பார்க்கும் போது அது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவரலாம்.

இன்னும் பல நேரங்களில் நாம் பார்த்த இணையதளத்திற்கு என்ன ஆயிற்று என்பதை கூட தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கும். அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் தொடர்பே இல்லாத விளம்பரங்கள் மட்டும் இருக்கும். சில தளங்களில் பார்த்தால் ஏதாவது புரியாத மொழி விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கலாம். இன்னும் சில தளங்கள் புதுப்பிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கலாம். கூகுள் தேடல் பட்டியலில் கண்டெடுக்கும் இணையதளத்தை கிளிக் செய்து பார்த்தால் அது மூடப்பட்ட தளமாக இருக்கலாம். இவ்வளவு ஏன், சிறந்த இணையதளங்களை சுட்டிக்காட்டும் கட்டுரைகளை வாசிக்கும் போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள தளங்கள் செயல்படாமல் இருப்பதை எதிர்கொள்ளலாம். இன்னும் எத்தனையோ விதங்களில் கைவிடப்பட்ட தளங்களை எதிர்கொள்ள நேரலாம்.

சராசரி இணையவாசிகள் இதை எப்படி எடுத்துக்கொள்கின்றனர் என்று தெரியவில்லை. பெரும்பாலும் லேசான ஏமாற்றத்துடன் உதட்டை பிதுக்கி விட்டு, பயன்பாட்டல் இல்லாத அந்த தளத்தை மறந்துவிட்டு அடுத்த தளத்தை நோக்கி சென்றுவிடலாம். வேறு என்ன செய்ய முடியும் என கேட்கலாம்?

துவங்கப்படும் எல்லா இணையதளங்களுமே வெற்றிகரமாக செயல்படுவதில்லை. பல இணையதளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. நல்ல இணையதளங்களே கூட ஏதேனும் ஒரு காரணத்தால் காணாமல் போகலாம். எல்லா இணையதளங்களுமே செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த இணையதளம் கூட ஒரு கட்டத்தில் மூடப்படுவது உண்டு. இது பலரும் அறிந்த இணைய யதார்த்தம் தான்.

ஆனாலும் கூட, ஒரு நல்ல இணையதளம் இனியும் பயன்பாட்டில் இல்லை என்று தெரிய வரும் போது வருத்தமாகவே இருக்கிறது. இத்தகைய வருத்தத்தை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் அதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆனால் இதில் தனிப்பட்ட விஷயம் எதுவுமில்லை. தொடர்ந்து இணையதள அறிமுகங்களை ஆர்வமுடன் செய்து வருபவன் என்ற முறையிலேயே இணையதளங்கள் இல்லாமல் போவது எனக்கு ஏமாற்றத்தை தருகிறது. சில நேரங்களில் வேதனையாகவும் இருக்கிறது.

இந்த இடத்தில் என்னை இணைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அந்த உணர்வுடன் தான் இணையதளங்களை அறிமுகம் செய்கிறேன். ஒரு நல்ல கவிதையை படித்த ஆனந்தம் பொங்க, ஒரு நல்ல பாடலை கேட்ட மகிழ்ச்சியுடன் தான் இணையதளங்கள் பற்றி எழுதுகிறேன். அதனால் தான், இந்த தளம் இதை செய்கிறது என்று தெரிவித்து இணைப்பை சுட்டிக்காட்டுவதோடு நில்லாமல், அறிமுகம் செய்யும் இணையதளம் பற்றி விரிவாகவே எழுதுகிறேன். கிட்டத்தட்ட ராக ஆலாபனை போல, ஒரு திரைப்படத்திற்கான விமர்சனம் போல குறிப்பிட்ட தளங்களின் மைய கருத்தாக்கம், அதன் தனித்தன்மை, செயல்பாடு, பயன்படக்கூடிய விதம் பற்றி எல்லாம் எழுதுகிறேன்.

புதியதாக ஒரு நல்ல இணையதளத்தை தற்செயலாக தேடலின் மூலமே அல்லது இணைய பரிந்துரை வாயிலாகவோ அறிந்து கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சியை எல்லையில்லாததாக உணர்கிறேன். எல்லா தளங்களும் இது போன்ற உணர்வை அளிப்பதில்லை. அதன் கருத்தாக்கம் புதுமையாக இருக்க வேண்டும். அது அளிக்கும் சேவை அல்லது தீர்வு பயன்மிக்கதாக, ஏதோ ஒரு விதத்தில் இணையவாசிகள் எதிர்பார்த்ததாக இருக்க வேண்டும். இணையத்தின் ஆற்றலை, அதன் வீச்சை புதிய கோணத்தில் பயன்படுத்த வைக்க கூடியதாக இருக்க வேண்டும். இன்னும் பல அம்சங்களை சொல்லலாம். முக்கியமாக இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள் என மனமுவந்து பரிந்துரைக்க கூடியதாக இருக்க வேண்டும். தேவை எனில் அது பற்றி பக்கமாக எடுத்துச்சொல்ல முடியவேண்டும்.

இதனால் தான் நல்ல இணையதளங்கள் முடங்கிவிட்டன என்று அறிய வரும் போது போது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒரு கணம் இது தனிப்பட்ட சங்டமாக கூட அமைகிறது. நாம் வளைத்து வளைத்து எழுதிய தளம் இப்போது பயன்பாட்டில் இல்லையே எனும் விஷயம் லேசான குற்ற உணர்வாகவும் அமைகிறது. ஆனால் அது முக்கியமல்ல: இதில் தனிப்பட்ட சார்பு தேவையில்லாதது. ஆனால் அருமையான இணையதளம் கைவிடப்படுவது ,சரி விட்டுத்தள்ளுங்கள் என அலட்சியம் செய்து நகரமுடியாமல், கொஞ்சம் ஆய்வு நோக்கில் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் தான், ஒரு இணையதளம் ஏன் மூடப்படும் நிலை உண்டாகிறது எனும் கேள்வி எழுகிறது. கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது போல போதுமான ஆதரவு இல்லை என்றால் மூடப்படலாம். அல்லது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் போனாலும் இந்த நிலை வரலாம். சமயங்களில் வரவேற்பு இருந்தாலும் வருவாய்க்கான சாத்தியம் இல்லாத போது மூடப்படலாம். மேலும் சில நேரங்களில் வேறு ஒரு நிறுவனத்தால் வாங்கப்படும் போது அந்த தளம் கைவிடப்படலாம். இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.
அவை ஒரு புறம் இருக்க, ஒரு நல்ல இணையதளத்தை எப்பாடுபட்டாவது தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதை இணைய அறமாக முன்வைக்கலாமா? என்ற பேராசை எண்ணமும் கூட தோன்றுகிறது. ஏனெனில், இணையதளத்தை துவக்கி அறிமுகம் செய்யும் போது, அதன் சிறப்புகள் இணையவாசிகளால் உணரப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். அதன் பிறகு இணையவாசிகளை கவரவும், தக்க வைத்துக்கொள்ளவும் பலவிதங்களில் முயற்சிக்கின்றனர். அப்படி இருக்க, ஒரு கட்டத்தில் திடிரென அந்த சேவையை கைவிட தீர்மானிப்பது இணையவாசிகளை ஏமாற்றும் செயல் அல்லவா என்றும் கேட்கத்தோன்றுகிறது. ( நிச்சயம் தளத்தை மூடுவது என்பது அதை துவங்கியவரின் உரிமை தான். அந்த முடிவுக்கான நியாயங்களும் அவரிடம் இருக்கவே செய்யும்).
இருப்பினும், பயனுள்ள தளங்களுக்கு இந்த முடிவு நேரும் போது இது போன்ற தளங்கள் நீடித்திருக்க வேண்டாமா எனும் ஏக்கம் உண்டாகிறது.

இந்த வருத்தமும், ஏக்கமும் இணையதள உரிமையாளர்களுக்கும் இருக்கலாம். எனவே தான் குறைந்த பட்சம் மூடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த தகவலை தெரிவித்து அதற்கான காரணத்தையும் விளக்குவது இணைய நியாயமாக இருக்கும் என சொல்லத்தோன்றுகிறது. பின்னாளில் எதிர்பார்ப்புடன் இந்த தளத்தை பார்வையிட வருபவருக்கு ஏற்படக்கூடிய குழப்பத்தை போக்க இது உதவும்.
நிற்க, அடடா இந்த தளம் மூடப்பட்டுவிட்டதே என வருந்த வைத்த தளங்கள் என என்னால் பலவற்றை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், மிக சமீபத்தில் இந்த எண்ணத்தை உண்டாக்கிய புக்வைப் தளத்தை மட்டும் உதாரணமாக குறிப்பிட விரும்புகிறேன்.

புக்வைப் ஒரு புத்தக பரிந்துரை இணையதளம். வழக்கமான முறையில் புத்தகங்களை பரிந்துரைக்காமல் சமூக வலைப்பின்னல் யுகத்திற்கு ஏற்ற வகையில், இந்த தளம் குறும்பதிவுகளில் பகிரப்படும் புத்தகங்களை தேடி கண்டுபிடித்து அடையாளம் காட்டியது. அதாவது, டிவிட்டர் பயனாளிகளில் பலர் புத்தகங்கள் பற்றிய தகவல்களை பரிந்து கொள்வது உண்டல்லவா? இந்த பரிந்துரைகளை அவரது பாலோயர்களே கூட தவறவிடலாம். அவ்வாறு நிகழாமல், ஒருவர் தனது டிவிட்டர் நட்பு வட்டத்தில் பகிரப்படும் புத்தகங்களை தவறவிடாமல் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவற்றை பரிந்துரைக்கும் சேவையை இந்த தளம் வழங்கியது. புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதில் புதிய வழியாக அமைந்த்தோடு மட்டும் அல்லாமல் அந்த அறிமுகம் சமூக நட்பு சார்ந்ததாகவும் அமைந்திருந்தது.

நம்முடைய நட்பு வட்ட பகிர்வு மட்டும் அல்லாமல் டிவிட்டரில் பொதுவாக பிரபலமாக இருக்கும் புத்தகங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய தளங்களின் பட்டியலில் நிச்சயம் இந்த தளத்தை நான் பரிந்துரைப்பேன்.
விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும் என நினைத்து தள்ளிப்போட்டு இணையதளங்களில் இதுவும் ஒன்று. சமீபத்தில் வேறு ஒரு புத்தக பரிந்துரை தளம் பற்றி படித்த போது இந்த தளம் நினைவுக்கு வருவே புகவைப் தளத்தை தேட முற்பட்டேன். கூகுளில் இந்த பெயரை டைப் செய்த்தும் அது முதல் முடிவாக எட்டிப்பார்க்கவில்லை. அந்த தளத்தின் முகவரியை பிரவுசரில் டைப் செய்து பார்த்த போது, அந்த தளம் இனியும் பயன்பாட்டில் இல்லை எனும் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.; (http://www.parakweet.com/announcement.html ) குறும்பதிவுகளில் உள்ள புத்தக தகவல்களை தேடி பரிந்துரைக்கும் அல்கோரிதம் சார்ந்து செயல்பட்ட இந்த இணையதளத்தை தொடர்ந்து மேலும் சில சேவைகளை உருவாக்கியதாகவும், தற்போது இவற்றில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய திசையில் செயல்பட தீர்மானித்திருப்பதாக அந்த அறிவிப்பு தெரிவித்தது.
என்னைப்பொருத்தவரை இது மிகப்பெரிய ஏமாற்றம்!

ஆனால் என்ன, நாளை புக்வைப் தளம் இருந்த்து என்று கூட பலருக்கும் தெரியாது. அப்படியே புக்வைப் தளம் பற்றிய குறிப்பை எங்கேனும் படித்தால் கூட அது எத்தனை அருமையான சேவையாக இருந்தது என தெரிந்து கொள்ள முடியாது.

பின் குறிப்பு : என்னுடைய முதல் புத்தகமான ’இணையத்தால் இணைவோம்’ (http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D)புத்தகத்திற்காக, மிகச்சிறந்த இணையதளங்கள் என நான் கருதியவற்றை தொகுக்க முயன்ற போது ஏற்கனவே விரிவாக அறிமுகம் செய்திருந்த பல தளங்கள் மூடுவிழா கண்டிருப்பதை எதிர்கொண்டேன். அவற்றை மீறி கவனமாக தொகுத்த போதும் கூட அதில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களில் ஒரு சில காணாமல் போய்விட்டன. அந்த தளங்களை நீக்கிவிட்டு புதிய தளங்களோடு இந்த தொகுப்பை புதுப்பிக்கும் எண்ணம் இருக்கிறது.
இந்த தொகுப்பில் நான் சேர்க்க நினைத்து இயலாமல் போனதற்காக மிகவும் வருந்திய தளங்களில் ஒன்று ஏர்டரடக்‌ஷன்ஸ் தளம். – AirTroductions. அது என்ன தளம் என்று யாருக்கேனும் தெரியுமா?

சைபர்சிம்மன்

பிரதிலிபியில் முதலில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *