டாம் மெக்கெல்ராயை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மெக்கெல்ராய் யார், அவரை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என விவரிப்பதற்கு முன், ஒரு சின்ன ஒப்புதல் தகவல்; மெக்கெல்ராயை அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு அவரை நான் நன்கறிந்தவனல்ல. இணைய உலாவலின் போது வாசிப்பு தேடலில் அறிமுகமானவர் தான் அவர். ஆனால் டெகிரிபப்ளிக் தளத்தில் அவரது பேட்டியை படித்த்துமே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டானது; அவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
மெக்கெல்ராய் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், வெளிப்புற பகுதிகளில் வாழும் திறனை கற்றுத்தரும் பயிற்சியாளர் என சொல்லலாம். அதாவது, நிலத்தை விட்டு காடுகளில் திரிய நேரும் போது அங்கு எப்படி தாக்குப்பிடிப்பது என கற்றுத்தருபவர் அவர். வனப்பகுதியில் வாழ தேவையான திறன் மற்றும் நுப்டங்களில் அவர் கைத்தேர்ந்தவர். அந்த வல்லமையில் தான் எல்லோருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
கையில் தீப்பெட்டில் இல்லாமல் நெருப்பு பற்ற வைக்கவும், வெறும் குச்சிகளை கொண்டு வில் அம்பு செய்து வேட்டையாடவும் கற்றுத்தருவது தான அவரது பயிற்சியின் நோக்கம். இயற்கை ஆர்வலர்களும், வெளிப்புற நேசர்களும், சாகசப்பிரியர்களும் அவரிடம் இந்த நுட்பங்களை கற்றுக்கொள்கின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்களில் துவங்கி, பள்ளி மாணவர்கள் வரை பலதரப்பட்ட மனிதர்கள் அவரிடம் மாணவர்களாக இருப்பதாக அவரது பயிற்சி பள்ளி இணையதளம் தெரிவிக்கிறது.
ஆக, முதல் பார்வைக்கு, மலைகளிலும், காடுகளிலும் வாழ்வதற்கான நுட்பங்களை கற்றுத்தரும் வித்தியாசமான பயிற்சியாளர் என்று மட்டுமே நினைக்கத்தோன்றும். இந்த வித்தியாசத்திலும், இயற்கை மீதும் ஆர்வம் இல்லாவிட்டால் அட அப்படியா என கேட்டு கடந்து போய்விடத்தோன்றும். ஆனால் சாகசக்கலை பயிற்சியாளர் என்பதை மீறி மெக்கெல்ராயிடம் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முதல் விஷயம் தொழில்நுட்பம் பற்றிய நமது பார்வையை மாற்றக்கூடியவராக அவர் இருக்கிறார் என்பது தான். இந்த வார்த்தையை சொன்னதுமே நமக்கு நவீன தொழில்நுட்பம் தான் நினைவுக்கு வரும். ஆனால் மெக்கெல்ராய் ஆதிகாலத்து தொழில்நுட்பத்திடம் நம் கவனத்தை கொண்டு செல்கிறார்.
புதுமை, புதுமை என உலகமே அடுத்த பெரிய தொழில்நுட்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் பழைய தொழில்நுட்பத்தை மறந்து விடக்கூடாது என்கிறார். அப்படி சொல்வதோடு நிற்காமல் அவற்றை தெரிந்து கொள்வதிலும், மற்றவர்களுக்கு கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வில் அம்பு செய்வது, காடுகளில் குடில் அமைப்பது, மண் பானை செய்வது என ஆதிகாலத்து நுட்பங்களில் அவர் பயிற்சி தருகிறார். இந்த நுட்பங்களின் முக்கியத்துவத்தை நாம் சரியாக உணர்ந்து கொள்வதற்காக, இவற்றுக்கான பயிற்சி களமாக வனப்பகுதியை தேர்வு செய்கிறார்.
கைகளில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு ,ஜி.பி.எஸ் வரைபடம் மூலம் இடங்களை தேட பழக்கப்பட்ட தலைமுறைக்கு, கையில் எந்த பொருளும் இல்லாமல் வனப்பகுதி சுழலில் எப்படி தாக்குபிடிப்பது என அவர் கற்றுத்தருவது வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் மட்டும் அல்லாமல் முரணாக கூட இருக்கலாம். இருப்பினும் மெக்கெல்ராய் புதிய தொழில்நுட்பங்களை அலட்சியப்படுத்துவரல்ல. பழைமைக்கு திரும்புவோம் எனும் பல்லவியை பாடுபவரும் அல்ல: பழைய தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்து மட்டுமே அவர் விரும்புகிறார். நவீன வாழ்க்கையிலும், கேட்ஜெட்களின் உலகிலும் கூட நாம் ஆதிகாலத்து நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது அவரது சிந்தனைப்பள்ளி!.
’நான் பாரம்பரிய தொழுல்நுட்பங்களை கற்றுக்கொண்டு அவற்றை பயிற்றுவிக்கிறேன்” என்கிறார் மெக்கெல்ராய். அவ்ரது வீட்டில் பலவிதமான குச்சிகள் நிறைந்திருப்பதாகவும், அதை முதல் முறை பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றாது என்றும் ஆனால் ஒவ்வொரு குச்சிக்கும் ஒரு அர்த்தமும், பயன்பாடும் இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இவற்றை எல்லாம் தான் அவர் கற்றுத்தருகிறார்.
ஆனால், அதற்கு முதலில் அவர் இந்த நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நோக்கத்துடன் அவர் விமானத்தில் ஏறி, இனக்குழு மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அவர்களுடன் தங்கியிருந்து ஆய்வு செய்கிறார். அதோடு மானுடவியல் புத்தகங்களையும் ஆழமாக படித்துப்பார்க்கிறார். சில நேரங்களில் யூடியூப் வீடியோக்களையும் பார்த்து கற்றுக்கொள்கிறார். ஆதி காலத்து நுட்பங்களை கற்றுக்கொள்ள நவீன தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றும் கூறும் மெக்கெல்ராய், எந்த சூழலிலும் தாக்குபிடிக்க கூடிய அளவுக்கு அதிக அளவிலான திறன்களை கண்டறிந்து காப்பாற்றுவதே தனது நோக்கம் என்கிறார்.
அதோடு இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் எந்த அளவு அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பதையும் உலகிற்கு உணர்த்த விரும்புவதாக சொல்கிறார். இதற்கு ஒரு உதாரணமாக, மண்ணில் படிந்திருக்கும் காலடித்தடங்களை வைத்தே அவற்றை விட்டுச்சென்ற விலங்குகள் பற்றிய விவரங்களை கண்டறியக்கூடிய ஆற்றலை அவர் விவரிக்கிறார். இதன் பின்னே முழுமையான அறிவியல் இருப்பதாகவும், இவை வாய் மூலமாக தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்.
இந்த விவரங்களை எல்லாம் பாதுகாப்பதும் அவரது நோக்கமாக இருக்கிறது. அதனால் தான் தேடி அலைகிறார்.
இன்று நமக்கு பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராமும், யூடியூப்பும் இருக்கிறது, அவற்றை கொண்டு பழைய கால நுட்பங்களை கற்றுத்தரவும், பாதுகாக்கவும் இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் உற்சாகமாக சொல்கிறார்.
மெக்கெல்ராய் செல்ல விரும்பும் செய்தியை இப்படி புரிந்து கொள்ளலாம்: நவீன கேட்ஜெட்கள் எல்லாம் நகரத்து வாழ்க்கையில் வழிகாட்டலாம். ஆனால் காட்டிலும், மலைகளிலும் வாழ வேண்டும் என்றால், அந்த காலத்தில் மனிதர்கள் கண்டறிந்து உருவாக்கிய நுட்பங்களை தான் நாட வேண்டும் , அதை கற்றுக்கொள்வது நல்லது!
எல்லாம் சரி, நாம் ஏன் பழைய நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்? இந்த கேள்விக்கு மெக்கெல்ராய் சொல்லும் பதில் சிந்திக்க வைக்கிறது.
“நம்முடைய அறிவுத்திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மீறி, இந்த சாதனைகளுக்கான விலை ஒன்று இருப்பதை தொழில்நுட்பவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். பழங்காலத்தில் இயல்பாக இருந்த சமூக உண்ர்வு நவீன உலகில் இல்லை. நவீன சமூகத்தில் இடைவெளியை நிரப்ப சமூக ஊடகம் இருக்கிறது. நம்முடைய நண்பர்கள் ஆயிரம் மைல் தொலைவில் இருக்கலாம். இணையம் மூலம் 140 எழுத்துக்களில் நாம் அவர்களை தொடர்பு கொள்கிறோம். ஆனால், பழமையில் எந்த பலனும் இல்லை எனும் எண்ணத்தால் வழி வழியாக வரும் தகவலின் மதிப்பு குறைந்து, வயதானவர்களை அவர்கள் அனுபவத்திற்காக போற்றும் உணர்வு இல்லாமல் போய் விட்டது”
இப்படி சொல்லும் மெக்கெல்ராய், நவீன தொழில்நுட்பம் உற்சாகமளிக்கலாம் ஆனால் நமக்கு அவை ஆற்றலை அளிக்கவில்லை என்கிறார்.
நாம் நம்முடைய உள்ளுணர்வை அதிகம் நம்ப கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
இந்த நம்பிக்கையில் தான் அவர் இயற்கைக்கு நெருக்கமாக உணரச்செய்யும் பழங்கால நுட்பங்களை கற்றுக்கொண்டு புதிய திறன் பெற ஊக்கம் அளிக்கிறார்.
நாம் வேட்டையாடும் காலத்திற்கு திரும்ப வேண்டும் என்பதில்லை. ஆனால் எந்த நிலையிலும் தாக்குப்பிடிக்க முடியும் என்ற உணர்வு தரும் விடுதலை உணர்வை அனுபவிக்க வேண்டும் என்கிறார்.
நவீன தொழில்நுட்பத்தில் மூழ்கி இருந்தாலும், நம்முடைய பாரம்பரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதன அவசியத்தை மெகெல்ராய் உணர்த்தி வருகிறார். நாம் அறிந்து கொள்ளவும், போற்றி பாதுகாக்கவும் எண்ணற்ற நுட்பங்கள் இருப்பதால் மெக்கெல்ராய் நமக்கும் ஊக்கம் அளிப்பவராகவே இருக்கிறார்.
மெக்கெல்ரார் நேர் காணல்:http://www.techrepublic.com/article/how-to-survive-in-the-wilderness-using-primitive-technology/
மெக்கெல்ராய் பயிற்சி பள்ளி: http://www.wildsurvivalskills.com/about.html
–