தளம் புதிது: ஸ்வீடனுக்கு கால் செய்யவும்!
ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்? கூகுளில் தேடிப்பார்ப்பது தான் பரவலாக அறியப்பட்ட வழி. அதைவிட அருமையான சுவாரஸ்யமான வழி ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. அது ஸ்வீடன் நாட்டுக்கே கால் செய்து பேசுவது தான்.
ஸ்வீடனுக்கு எப்படி கால் செய்வது என்று அல்லது எந்த எண்ணை அழைப்பது என நீங்கள் குழம்பலாம். ஆனால் இதற்காக என்றே ஸ்வீடன் சுற்றுலாத்துறை ஒரு பிர்த்யேக தொலைபேசி எண் மற்றும் அதற்கான இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
திஸ்வீடிஷ்நம்பர் எனும் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு யார் வேண்டுமானால் அழைத்துப்பேசலாம். அந்த அழைப்புக்கு யாரவது ஒரு சராசரி ஸ்விடன்வாசி பதில் அளிப்பது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்வீடன் பற்றி அவரிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டு பதில் பெறலாம். வழக்கமான அலுப்பூட்டக்கூடிய சுற்றுலா தகவல்களுக்கு மாறாக சராசரி ஸ்வீடன் மக்களை தொடர்பு கொண்டு பேசும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனுக்கு தொலைபேசி செய்யும் செலவை ஏற்றுக்கொள்ளத்தயார் என்றால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் இந்த அழைப்புகளுக்கு சர்வதேச கட்டணம் பொருந்தும். ஸ்வீடனின் தணிக்கை செய்வது அகற்றப்பட்டதன் 250 ம் ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை எத்தனை நாடுகளில் இருந்து அழைத்துள்ளர், இப்போது எந்த நாட்டில் இருந்து அழைக்கின்றனர் போன்ற விவரங்களையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.
ஒரு நாட்டின் முக்கிய மைல்கல்லை கொண்டாடும் வகையில் இணையத்தை புதுமையாக பயன்படுத்தி இது போன்ற புதுமையான சேவைகளை அறிமுகம் செய்வது அருமைதான் அல்லவா!
இணையதள முகவரி: http://theswedishnumber.com/
செயலி புதிது; மனித உடல்கூறு அறிய உதவும் செயலி
ஸ்மார்ட்போன் செயலிகள் எல்லாமே பொழுதுபோக்கு ரகமாக தான் இருக்க வேண்டுமா என்ன? கற்றல் நோக்கில் உதவும் செய்லிகளும் அநேகம் இருக்கின்றன. அந்த வகையில் மனித உடற்கூறு பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டுகிறது ஹியூமன் அனாடமி அட்லெஸ்.
மனித உடற்கூறு தொடர்பான பல படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த செயலி மனித உடல் உறுப்புகளையும், அதன் தன்மையையும் முப்பரிமான தன்மையில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் உடற்கூறு அமைப்பில் 4,600 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் விவரங்களை பார்க்கலாம். மேலும் நுட்பமான விவரங்களும் இருக்கின்றன.
கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் கட்டணச்செயலி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.visiblebody.com/index.html
இலக்கிய குறும்பதிவுகள்
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான அயன் ராண்ட் தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது உங்களுக்குத்தெரியுமா? 1971 ல் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நான் ஏன் தபால் தலை சேகரிப்பை விரும்புகிறேன் எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார். இது போன்ற சுவாரஸ்யமான இலக்கிய தகவல்களை அறிய விரும்பினால் லிட்டரரி இண்டிரஸ்ட் (https://twitter.com/InterestingLit) டிவிட்டர் பக்கத்தை நீங்கள் பின் தொடரலாம்.
ஆங்கில இலக்கியம் தொடர்பான மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை இந்த டிவிட்டர் பக்கம் குறும்பதிவுகளாக வெளியிட்டு வருகிறது. இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் தொடர்பான சுவை மிகு தகவல்களை அளிப்பதை நோக்கமாக கொண்ட இண்டிரஸ்டிங் லிட்ரேச்சர் இணையதளம் சார்பில் இந்த டிவிட்டர் பக்கம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இலக்கியத்தில் ஆர்வத்தை உண்டாக்கி கொள்ள சுவாரஸ்யமான வழியாக இந்த டிவிட்டர் பக்கம் விளங்குகிறது. கவிஞர்களின் படைப்புகள், எழுத்தாளர்களின் பொன்மொழிகள் என மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன இதன் குறும்பதிவுகள். இலக்கிய வாசிப்பிற்கான புத்தகம் மற்றும் கட்டுரைகளை தேர்வு செய்யவும் இந்த பக்கம் உதவும்.
—