இணைய உலகை பிடித்தாட்டும் போக்கேமான் பிடிக்கும் விளையாட்டு!

pokemon_go_geodude_androidமொபைல் கேம்களான டெம்பிள் ரன்னையும், கேண்டி கிரஷ்யையும் கொஞ்சம் மறந்து விடுங்கள். ஆங்ரி பேர்ட் மற்றும் கிளாஷ் ஆப் கிளேன்ஸையும் விட்டுத்தள்ளுங்கள். ஏனெனில் உலகம் இப்போது போக்கேமான் பின்னே அலைந்து திருந்து கொண்டிருக்கிறது. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களை எல்லாம் போக்கேமான் விளையாட்டு தான் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அறிமுகமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் போக்கேமான் கோ விளையாட்டு ஸ்மார்ட்போன் விளையாட்டுகளில் மிகவும் பிரபலமானதாக வர்ணிக்கப்படுக்கிறது. ஜூலை மாத துவக்கத்தில் அறிமுகமான விளையாட்டு இன்னமும் பல நாடுகளில் அதிகாரபூர்வமாக அறிமுகமாத நிலையில், போக்கேமான் கோ காய்ச்சல் எல்லோரையும் பிடித்துக்கொண்டிருக்கிறது.

போக்கேமான் கோ
இதற்கு முன்னரும் கூட ஸ்மார்ட்போன் உலகில் திடிரென பல மொபைல் கேம்கள் பிரபலமாகி பயனாளிகளை பித்துப்பிடிக்க வைத்திருக்கின்றன. சின்ன குருவியை காப்பாற்ற வேண்டிய பிளாப்பி பேர்டு கேமையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த வரிசையில் சமீபத்திய கிரேசாக போக்கேமான் கோ அமைந்திருந்தாலும், மற்ற விளையாட்டுகளுக்கும் இதற்கும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. பிளாப்பி பேர்ட், டெம்பிள் ரன் உள்ளிட்ட எல்லா கேம்களையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆடலாம். எனவே வீட்டு சோபாக்களிலும், அலுவலக மேஜைகளிலும் ஸ்மார்ட்போனும் கையுமாக பலர் இந்த விளையாட்டில் மூழ்கியிருப்பதை பார்க்கலாம். சிறுவர்களும், இளசுகளும் பக்கத்தில் இருப்பவர்களை கூட கவனிக்காமல் ஸ்மார்ட்போனுக்குள் லயித்திருப்பதையும் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.

ஆனால் போக்கேமான் கோ, இவர்களை எல்லாம் சோபாக்களில் இருந்து கிளப்பி, வீட்டுக்கு வெளியே திரிய வைத்திருக்கிறது. இந்த கேமை விளையாடுபவர்கள் போக்கேமான் பிடிப்பதற்காக சாலைகளிலும், பூங்காக்களிலும் அலைந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான், பொது இடங்களில் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை நோக்கிய படி, எதிரே வருபவர்களை எல்லாம் கவனிக்காமல் தங்களை மறந்து நடந்து சென்று கொண்டிருக்கும் பலரை பார்க்க முடிகிறது. போக்கேமான் கோ விளையாட்டு தான் இவர்களை இப்படி தன்னிலை மறக்கச்செய்திருக்கிறது. இந்த விளையாட்டையும் பிரபலமாக்கி இருக்கிறது.

முதல் கட்டமாக அறிமுகமான நாடுகளில் இந்தியா இல்லாவிட்டாலும் கூட நம் நாட்டிலும் போக்கேமான் கோ மோகம் பலரை பிடித்துக்கொண்டிருக்கிறது. போக்கேமான் கோ எப்படி விளையாடுவது என வழிகாட்டும் யூடியூப் வீடியோக்கள் கூட இந்தி மொழியில் உருவாக்கப்பட்டுவிட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அது மட்டும் அல்ல போக்கேமான் கே விளையாட்டின் தாக்கம் மற்றும் பாதிப்பு தொடர்பான கதைகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் வரலாறு

போக்கேமான் கோ விளையாட்டில் அப்படி என்ன இருக்கிறது? அதன் மீது இந்த அளவு ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்று பார்ப்பதற்கு முன் முதலில் போக்கேமான் உலகை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். வீடியோ கேம் பிரியர்கள் போக்கேமான் பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள். இக்கால தலைமுறை கார்ட்டூன் படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி தொடர்கள் வாயிலாகவும் போக்கேமானை பரிட்சியம் செய்து கொண்டிருப்பார்கள்.
pokemon_go_starter_set
போக்கேமான் என்பது நவீன உலகிற்கு ஜப்பான் அளித்த கொடைகளில் ஒன்று. 1990 களில் வீடியோ கேம் வடிவில் அறிமுகமான இந்த விளையாட்டு அதன் பின் தனக்கென தனி உலகை உருவாக்கி கொண்டு அதில் உலாவ விரும்பும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றிருக்கிறது.

போக்கேமான் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அதில் உலாவும் விசித்திர ஜிவராசிகளான போக்கேமான்களை பிடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக மற்ற போக்கேமான் குழுவினருடன் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். விதவிதமான போக்கேமான்கள் உண்டு. அவற்றை பிடிப்பவர்களுக்கு பயிற்சியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். போக்கேமான்களுக்கு பெயர்களும் உண்டு. தனி விதிகளும் உண்டு. அவற்றை பிடித்து வளர்ப்பதற்கான உத்திகளும் உண்டு. சவால்களும் உண்டு. மொத்தத்தில் அது ஒரு அலாதியான தனி உலகம்.
ஜப்பானிய வீடியோ கேம் வடிவமைப்பாளரான சடோஷி தஜிரி (Satoshi Tajiri ) தான் இந்த உலகின் பிரம்மா. சிறு வயத்தில் பூச்சிகளை பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த தஜிரி, அந்த பழக்கத்தோடு தனது வீடியோ கேம் மோகத்தையும் இணைத்து கேம்பாய் சாதனத்தில் விளையாடக்கூடிய கேமாக இதை உருவாக்கினார். முதல் கட்டமாக 151 வகை போக்கேமான்களை அவர் படைத்தார். வெறும் கருப்பு வெள்ளை வசதி கொண்ட வீடியோ கேம் சாதனமான கேம்பாயில் அறிமுகமான இந்த விளையாட்டு ஜப்பானில் சூப்பர் ஹிட்டாகி அதன் பிறகு உலகம் முழுவதும் பிரபலமானது. இதை அறிமுகம் செய்த நிண்டெண்டோ நிறுவனமும் வருவாயை அள்ளிக்குவித்திருக்கிறது. இன்று போக்கேமான்களின் உலகம் வீடியோ கேமை கடந்து ,கார்ட்டூன், தொலைக்காட்சி என பல வடிவங்களில் வியாபித்திருக்கிறது.

இணையத்தில் தேடல்
இதன் அடுத்த கட்டமாக தான் இப்போது போக்கேமான் கோ மூலம் ஸ்மார்ட்போன் உலகில் நுழைந்திருக்கின்றன. அறிமுகமான வேகத்திலேயே இந்த விளையாட்டு போக்கேமான் பிரியர்களை கவர்ந்திழுத்து இருக்கிறது. இந்த விளையாட்டு அறிமுகமான வேகத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம் இது நிஜ உலகையும், கற்பனை உலகையைம் இணைக்கும் வகையில் அமைந்திருப்பது தான். போக்கேமான் பிடிப்பது என்பது கற்பனையானது என்றாலும், அதை விளையாடி மகிழ் வெளியுலகில் அடியெடுத்து அலைந்து திரிய வேண்டும். இந்த இரண்டும் இணைந்த தன்மை தான், போக்கேமான் தேடல் படலத்தை மிகுந்த சுவாரஸ்யம் மிக்கதாக ஆக்கியிருக்கிறது. இந்த தன்மை ஆக்மெண்டட் ரியாலிட்டி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வகையில் அமைந்த முதல் கேம் இல்லை என்றாலும் கூட, போக்கேமான் நிகழ்வின் செல்வாக்கு இந்த விளையாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

போக்கேமான் கற்பனை உலகிற்கு சொந்தமானது என்றாலும், இந்த தேடலை நிஜ உலகில் நிகழ்த்த முடிந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் போக்கேமான் பிரியர்களுக்கு எப்போதும் உள்ளுக்குள் உண்டு. இதை நிறைவேற்றும் வகையில் போக்கேமான் கோ அமைந்திருக்கிறது.

ஆட்டத்தின் விதிகள்
இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று பார்க்கலாம். ஆண்ட்யாய்ட் அல்லது ஐபோனில் இந்த விளையாட்டை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் போனின் ஜி.பி.எஸ், கூகுள் வரைபடம் மற்றும் காமிரா ஆகியவற்றை இது பயன்படுத்திக்கொள்ள கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால் போக்கேமான் வேட்டைக்கு தயாராகிவிடலாம். போக்கேமான் தேடலைத்துவங்கியதும், விளையாட்டை தொடர வெளியே வந்தாக வேண்டும். ஏனெனில் போக்கேமான்களை வீட்டுக்குள் இருந்த படி பிடிக்க முடியாது. வெளியே முக்கிய இடங்களுக்கு அருகாமையில் செல்லும் போது தான் போக்கேமான்கள் தோன்றும். அங்கு சென்று தான் அவற்றை பிடிக்க முடியும். ஜிபிஎஸ் மூலம் பயனாளிகள் இருப்பிடத்தை உணர்ந்து கொண்டு, கூகுள் வரைபடத்தில் முக்கிய இடங்களில் போக்கேமான்கள் தோன்றும் வகையில் விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

போகேமான் இருக்கும் இடங்களை நெருங்கியதும், அருகாமையில் தான் இந்த ஜீவன்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படும். அப்படியே போன் திரையை பார்த்த படி அங்கும் இங்கும் நடந்தால், திடிரென போன் வைப்ரேட்டாகி, காமிரா ஆனாகும். காமிராவில் பயனாளி இருக்கும் காட்சி படமாக்கப்பட்டு அதன் மீது போக்கேமான் தோன்றும். இனி, போக்கேமானை பிடிப்பதற்கான வழக்கமான உத்தியை பின்பற்ற வேண்டும். திரையில் ஒரு தட்டு தட்டு, போக்கேமானை பிடிக்கும் பந்தை வீச வேண்டும்.

இன்னும் இருக்கு!
இது தான் விளையாட்டின் அடிப்படை. இதில் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. போக்கேமானில் பிடிக்க நிஜ உலக இடங்களை தேடிச்செல்வதே இந்த விளையாட்டின் பலருக்கு மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே பூங்காக்களிலும், நீர்நிலை அருகாமையிலும் பலரை போனை பார்த்தபடி நடந்து செய்ய வைத்திருக்கிறது.
இந்த விளையாட்டு குறுகிய கால இடைவெளியில் லட்சக்கணக்கானோரை கவர்ந்திருப்பது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போன்களின் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், கேம் ஆடுவதற்காக பொது இடங்களில் போனை மட்டும் பார்த்தபடி பயனாளிகளை நடந்துசெல்ல வைக்கும் இந்த விளையாட்டின் தன்மை கடும் விமர்சனத்திற்கு இலக்காகி உள்ளது. அதே நேர்த்தில் மற்ற விளையாட்டுகள் போல சோபாவில் முடிக்கிவிடாமல் வீட்டை விட்டு வெளியே வரச்செய்திருப்பதே இதன் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. கற்பனை மற்றும் நிஜ உலகம் இணைந்த இந்த வகை விளையாட்டுகள் தான் இனி எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவதாகவும் ஆருடம் சொல்லப்படுகிறது.

இந்த விளையாட்டின் தாக்கம் பற்றி பலவிதமான கதைகளும் வெளியாகி வருகின்றன. நியூசிலாந்தில் ஒருவர் போக்கேமான் பிடிப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். பலர் போக்கேமான் கோ விளையாட்டால் உடற்பயிற்சி செய்யத்துவங்கியிருப்பதாக சொல்கின்றனர். இப்படி எராளமான அனுபவங்களும் கதைகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

போக்கேமான் கோ போக்கு பற்றி பல வித தகவல்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அதன் தாக்கம் , பலன்கள், இந்த வகை விளையாட்டின் பிற பலன்கள் என அவை விரிகின்றன. அவை பற்றியும் எழுத விருப்பம்.
– அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *