போட்டோஷாப் அறையில் இருந்து இன்றைய நேரடி ஒளிபரப்பு !

str1பெட்டிக்கடை விற்பனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாமா? அல்லது, திருநெல்வேலி அல்வா செய்யப்படும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்வது பொருத்தமாக இருக்குமா?

இவை எல்லாம் கேள்விகளா? என அலட்சியமாக நினைக்க வேண்டாம். இவை எல்லாம் நம் காலத்து கேள்விகள். இணைய நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்றவை எவை என யோசிக்க வைக்கும் கேள்விகள்.

நேரடி ஒளிபரப்பு என்பது ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆனால் இணையம் இதை மாற்றி இன்று யார் வேண்டுமானாலும் நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. லைவ் ஸ்டீரிமிங் என இது பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. பெரிஸ்கோப், மீர்கேட்டில் துவங்கி ஸ்டீரிமிங் செய்ய உதவும் செயலிகளும் அநேகம் இருக்கின்றன. பேஸ்புக் லைவ் உள்ளிட்ட வசதிகளும் அறிமுகமாகி இருக்கின்றன. எனவே,இணையவாசிகள் எந்த நிகழ்வையும் இணையம் வழி நேரடியாக ஒளிபரப்பலாம். இவைத்தவிர ஸ்டீரிமிங் செய்வதற்கு என்றே பிரத்யேக சேவையான டிவிட்ச் தளம் இருக்கிறது. அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான டிவிட்ச், வீடியோகேம் விளையாடுவதை ஒளிபரப்புவதற்காக என்றே உருவாக்கப்பட்டு, இதற்காக என்றே வீடியோகேம் பிரியர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் சேவை.

வீடியோகேம் விளையாடுவதை எல்லாம் பார்த்து ரசிக்க முடியுமா என அப்பாவித்தனமாக கேட்க முடியாது. வீடியோகேம்களை தனிப்பட்ட முறையில் விளையாடி ரசிக்கலாம் என்பதோடு, அவற்றில் மிகவும் சிக்கலான கேம்களை பார்வையாளர்கள் மூன் ஆடிக்காட்டலாம். இந்த வகையான கேம்கள் இ- விளையாட்டு என தனிப்பிரிவாகவே உருவாகி இருக்கின்றன. இவை போலவே நுணுக்கமான வீடியோகேம்களை ஆடிக்கொண்டே அதில் முன்னேறிச்செல்லும் லாவகத்தை ஒளிபரப்ப டிவிட்ச் வழி செய்கிறது. ஒரு முறை டிவிட்ச் தளத்தில் நுழைந்து பார்த்தால் இது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நிற்க, டிவிட்ச் வீடியோகேம் ஒளிபரப்பிற்காக அறியப்பட்டாலும், மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்துள்ளது. வீடியோகேம் போலவே மற்ற செயல்களையும் டிவிட்சில் சேனல் அமைத்து நேரடியாக ஒளிபரப்பலாம். ஆனால், டிவிட்ச் ஒளிபரப்பிற்கு என்று விதிகள் இருக்கின்றன. அதில் எல்லோரும் ஒளிபரப்பு செய்துவிட முடியாது. டிவிட்ச்சில் எதை எல்லாம் ஒளிபரப்பு செய்யலாம், எவற்றை எல்லாம் ஒளிபரப்பக்கூடாது என பெரிய பட்டியலே இருக்கிறது. ஓவியம் வரைதலை,நகை செய்வதை, நாவல் எழுதுவதை, வீடியோ எடிட்டிங்கை ஒளிபரப்பலாம். ஆனால், வீட்டு வேலை செய்வதை, பர்னீச்சர்களை அடுக்குவதை, மொழி பாடங்களை ஒளிபரப்ப அனுமதி இல்லை.

சுருக்கமாக சொல்வது என்றால், படைப்பாற்றல் மிக்கதாக இருந்தால் டிவிட்சில் ஒளிபரப்பலாம். அதற்கு மாறாக சுவாரஸ்யம் இல்லாமல் அலுப்பூட்டக்கூடிய செயல்கள் என்றால் அனுமதி இல்லை என்று டிவிட்ச் விதிகள் கூறுகின்றன.
str2
இந்த வேறுபாட்டை இன்னும் கச்சிதமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒளிபடங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். போட்டோஷூட் எனப்படும் ஒளிபடங்களை எடுக்கும் நிகழ்வை டிவிட்சில் பகிர அனுமதி இல்லை. ஆனால் ஒளிபடங்களை திருத்தி மேம்படுத்தும் போட்டோ எடிட்டிங்கை ஒளிபரப்பலாம். ஒளிபடம் ஒரு கலையாக இருக்கலாம். ஆனால், ஒளிபடம் எடுக்கும் செயல்முறை கலை அல்ல- குறைந்த பட்சம் டிவிட்ச் ஒளிபரப்பிற்கு ஏற்ற கலை அல்ல.

ஒரு செயலின் நுணுக்கத்தை, அதை நிறைவேற்றுவதில் உள்ள நெளிவுசுளிவுகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யம் மிக்கதாக அமைகிறது. இது போன்ற செயல்களை ஒளிபரப்ப முன்வரும் போது பார்வையாளர்களுக்கும் ஆர்வம் பிறக்கும். காமிரா முன் மனிதர்களை நிறுத்தி படம் எடுக்கும் போது இது சாத்தியமாவதில்லை என டிவிட்ச் கருதுகிறது. ஆனால், ஒளிபடங்களை எடிட் செய்யும் போது அது கலையாகிவிடுகிறது. அந்த செயல்முறையை நேரடியாக ஒளிபரப்பலாம்.

டிவிட்ச் ஒளிபரப்பிலும் வர்ணனை உண்டு. ஒளிபரப்பு செய்பவர் தனது செயல் பற்றிய வர்ணனை மூலம் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கலாம். இது கூடுதல் சுவாரஸ்யம் அளிக்கும் என்பதோடு, பார்வையாளர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுத்தருவதாகவும அமையும்.
இதற்கு உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அமெரிக்க ஒளிபட கலைஞரான மைக் லாரேமோரை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். கொலோராடோவை சேர்ந்த லாரேமோர் புகழ்பெற்ற ஒளிபட கலைஞர் மட்டும் அல்ல: அவர் ஒரு டிவிட்ச் ஒளிபரப்பாளரும் கூட.

ஆம், லாரேமோர் தான் ஒளிபடங்களை போட்டோஷாப் மூலம் மேம்படுத்துவதை டிவிட்ச் மூலம் அடிக்கடி நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறார். அவர் மெருகேற்றும் ஒளிபடம் திரையில் போட்டோஷாப் சட்டகத்திற்குள் காட்சி அளிக்க, கீழே சிறிய பெட்டியில் லாரேமோர் தோன்றியபடி, ஒளிபட நுணுக்கங்களுக்கு விளக்கம் அளிப்பதை கேட்டபடி, ஒரு ஒளிபடம் காமிரா காட்சியில் இருந்து முழுமையான படமாக உருமாறும் அற்புதத்தை அதன் அனைத்து நுணுக்கங்களுடனும் பார்வையிடலாம்.

இதை அவர் போட்டோஸ்டீரிமிங் என குறிப்பிடுகிறார். பொதுவாகவே, ஒளிபடத்தை எடிட் செய்வது என்பது மிகவும் அலுப்பூட்டக்கூடிய செயல் என்பவர், ஆனால் இதை தவிர்க்கவும் முடியாது மற்றவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது என்கிறார். இந்த நுணுக்கமான செயல்பாட்டை டிவிட்ச் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சுவாரஸ்யமானதாக இருக்கிறது என்கிறார் அவர்.
பார்வையாளர்களுக்கும் இது சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. பெரும்பாலானோர் ஒளிபடத்தின் இறுதி வடிவதற்கு முன்னர் நடைபெறும் செயல்களை அறியாமலே இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம், போட்டோஷாப்பில் ஒளிபடத்தை மேம்படுத்துவதை பார்க்கும் அனுபவம் புதிய புரிதலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
ஒளிபடங்களை திருத்தியபடி, அது தொடர்பாக சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது சவாலானது என்றும் அவர் சொல்கிறார். வீடியோகேம் ஆர்வத்தில் வந்தவர்கள், அட இப்படி கூட சேனல்கள் இருக்கின்றனவா? என வியந்து போய் ஒளிபட திருத்தங்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர் என்றும் உற்சாகமாக சொல்கிறார். பார்வையாளர்கள் கேட்கும் ஒளிபடம் சார்ந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

பார்வையாளர்களுக்காக எடிட் செய்வது தனக்கான தனி பாணியை உருவாக்கி இருக்கிறது என்றும் அவர் உற்சாகம் கொள்கிறார். ஒளிபட உருவாக்கம் தொடர்பான பல விஷயங்களை பார்வையாளர்களுடன் விவாதிக்க முடிவதாகவும் கூறுகிறார்.

இணையம் தகவல்களை வெளியிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் வழி செய்துள்ளதோடு, படைப்பாளிகள் தங்கள் செயல்முறையை ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் உரையாடவும் வழி செய்திருக்கிறது. இதை லாரேமோர் போன்ற கலைஞர்கள் அழகாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு நெருக்கமாகி வருகின்றனர்.

லாரேமோர், ஒரே பிரேமில் ஒருவரது பல உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலான ஒளிபட தொடருக்காக பெரிதும் பாராட்டப்பட்டபர்.

இணைய நேரடி ஒளிபட்ரப்பு பற்றிய லாரேமோரின் நேர்காணல்:http://petapixel.com/2016/08/13/one-photographer-turned-photo-editing-live-entertainment/

டிவிட்ச் நெறிமுறைகள்: https://help.twitch.tv/customer/portal/articles/2176641-creative-faq

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *