தளம் புதிது: ஒவ்வொரு டேபிலும் ஒரு செய்தி
செய்திகளை தெரிந்து கொள்ள மேலும் ஒரு புதிய வழியாக தி ஹாஷ் டுடே இணையதளம் அறிமுகமாகியுள்ளது. இந்த தளத்தில் இப்போதைய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் வழக்கமான செய்தி தளங்கள் போல் அல்லாமல் புதுமையான முறையில், தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை முன்வைக்கிறது.
ஹாஷ் டேப் எனும் பெயரில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவையை தரவிறக்கம் செய்து கொண்டால் அதன் பிறகு ஒவ்வொரு முறை பிரவுசரில் புதிய டேப்பை திறக்கும் போது, ஒரு தலைப்புசெய்தி தோன்றும். ஆர்வம் இருந்தால் அதை கிளிக் செய்து படித்து மேலும் விவரங்களை அறியலாம்.
டிவிட்டரில் குறும்பதிவுகளாக அதிகம் பகிரப்படும் செய்திகளின் அடிப்படையில், புதிய செய்திகளை தேர்வு செய்து, பிரவுசர் டேபில் தோன்றச்செய்கிறது இந்த சேவை. எனவே பிரவுசர் டேப்பை கிளிக் செய்தாலே உலக நடப்புகளை தெரிந்து கொள்ளலாம். பிரவுசர் நீட்டிப்பு தவிர, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலி வடிவிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
இணையதள முகவரி:https://thehash.today/
—-
செயலி புதிது: விடாமல், துயிலெழுப்ப உதவும் செயலி
ஆண்ட்ராய்டிலும் சரி ஐபோனிலும் சரி, காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்க உதவும் செயலிகள் விதவிதமாக இருக்கின்றன. என்ன தான் அலாரம் அடித்தாலும் விடாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களை விடாமல் தொல்லை செய்து அவர்கள் தூக்கத்தை கலைக்க வழி செய்யும் விநோதமான செயலிகளும் கூட இருக்கின்றன.
இந்த வரிசையில் தான் வருகிறது ஐ காண்ட் வேக்கப் செயலி. இதில் நேரத்தை செட் செய்ததும் மறுநாள் காலை அலாரம் அடிக்கத்துவங்கும். அதன் பிறகு வரிசையாக ஒரு கணித புதிர், நினைவு விளையாட்டு, புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு என எட்டு விதமான புதிர்களை விடுவித்தால் தான் அலாரம் நிற்கும். இதற்குள் தூக்கம் காணமால் போயிருக்கும் என்பதால் சுறுசுறுப்பாக வேலையை பார்க்கத்துவங்கிவிடலாம்.
மேலும் விவரங்களுக்கு:https://play.google.com/store/apps/details?id=com.kog.alarmclock
—
பாஸ்வேர்டை இப்படியும் உருவாக்கலாம்!
இணைய சேவைகளை இயக்க உருவாக்குவதற்கான பாஸ்வேர்டு வலுவானதாக இருந்தால் தான் பாதுகாப்பானதாக இருக்கும். ஆனால் பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்க கடினமாக முயற்சி செய்தால், அதை நினைவில் வைத்துக்கொள்வதும் கடினமாகலாம். அதற்காக வழக்கமாக எல்லோரும் பயன்படுத்தும் பாஸ்வேர்டு உத்தியையே பயன்படுத்தக்கூடாது. அதைவிட ஆபத்தானது வேறில்லை.
மிகவும் வலுவான ஆனால் எளிதாக நினைவில் கொள்ளக்கூடிய பாஸ்வேர்டை உருவாக்கும் எளிய வழியை ரெட்டிட் தளத்தின் பயனாளி ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எந்த சேவைக்காக பாஸ்வேர்ட் தேவையோ அந்த தளத்தின் பெயரை தலைகிழாக எழுத வேண்டும். இப்போது அந்த எழுத்துக்களுக்கு நடுவே உங்கள் பிறந்த நாள் எண்களை வரிசையாக இடம்பெறச்செய்ய வேண்டும். முதல் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்றுங்கள். அவ்வளவு தான் வலுவான பாஸ்வேர்டு தயார். இதை உருவாக்கிய வழிமுறையை நினைவில் வைத்துக்கொண்டால் போதும் பாஸ்வேர்டை எளிதாக டைப் செய்து விடலாம். ஒவ்வொரு தளத்திற்கும் இதே முறையில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒன்று இந்த முறையை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொண்டு உங்களுக்கான பிரத்யேக மாற்றத்துடன் இதை பயன்படுத்துவது இன்னும் கூட நல்லது!.