இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் மூழ்கி இருக்கலாம். எப்போதாவது வேறு பாடல் தேவை எனில், அடுத்த பாடலுக்கான பட்டனை கிளிக் செய்து கொள்ளலாம்.
பாடல்களையோ அதன் வகைகளையோ தேர்வு செய்யும் அவசியம் இல்லாமல் தொடர்ந்து இசை மழையில் நனைய இந்த தளம் வழி செய்கிறது.
இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள பாடல்கள் அனைத்தும், பணியின் போது கவனத்தை அதிகரித்து செயல்திறனை மேம்படுத்தக்கூடிய ரகத்தை சேர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சேவையின் எளிமை கவர்ந்திழுக்கிறது. ஒரு கிளிக்கில் இசையமான சூழலில் ஆழ்ந்துவிடலாம்.
பாப் இசையில் ஆர்வம் என்றால் இதே போல இன்னும் சில அருமையான இணையதளங்கள் இருக்கின்றன. கன்சோல்.எப்.எப் இணையதளம் மனதுக்கு ஆறுதல் அளிக்க கூடிய பாடல்களை வரிசையாக கேட்கச்செய்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் வரிசையாக பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்த பாடலை வேண்டுமானாலும் கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம். அருகிலேயே பிளேயர் இருப்பதால் கிளிக் செய்தவுடன் பாடல் ஒலிக்கத்துவங்கி விடுகிறது. பாடல்கள் அனைத்தும் சவுண்ட் கிளவுட் சேவையில் இருந்து தேர்வு செய்யப்படுபவை.
பிரைன்.எப்.எம் தளமும் இப்படி இதம் அளிக்கும் பாடல்களை கேட்க வழி செய்கிறது. செயற்கை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை வழங்குவதாக இந்த தளம் தெரிவிக்கிறது. பத்து நிமிடம் கேட்டால் போதும் உங்கள் மனச்சோர்வு எல்லாம் மாயமாகிவிடும் என்கிறது இந்த தளம். பாடல்கள் தேர்வு செய்யப்படும் விதம் பற்றி விரிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:http://focusmusic.fm/