இணைய உலகின் முதல் தேடியந்திரம் எதுவென நீங்கள் அறிந்திருக்கலாம். ஆர்ச்சி தான் அது. ஆர்ச்சி இப்போது பயன்பாட்டில் இல்லை. இணைய சரித்திரத்தில் மட்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரி, உலகின் முதல் நவீன தேடியந்திரம் எது என்பது தெரியுமா? தயவு செய்து கூகுள் என்று மட்டும் பதில் சொல்ல வேண்டாம். தேடியந்திர உலகில் கூகுள் முழு முதல் தேடியந்திரம் போல தோன்றினாலும் அது சற்று தாமதமான வரவு . அதற்கு முன்னரே எண்ணற்ற முன்னோடி தேடியந்திரங்கள் தோன்றிவிட்டன. பல மறைந்துவிட்டன என்பது வேறு விஷயம்.
லைகோஸ், ஜம்ப்ஸ்டேஷன், மெட்டா கிராலர் என நீளக்கூடிய ஆரம்ப கால தேடியந்திர பட்டியலில் ஒன்றாக இடம்பெறும் வெப்கிராலர் தேடியந்திரமே முதல் நவீன தேடியந்திரமாக கருதப்படுகிறது.
இணையதளங்களை துழாவுவது, அவற்றை பட்டியலிடுவது மற்றும் அந்த பட்டியலில் இருந்து தேடுவதற்கான வசதியை அளிப்பது ஆகியவை தான், எந்த ஒரு தேடியந்திரத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. தேடியந்திரங்களுக்கான சாமுந்திரிகா லட்சனம் என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் கொண்ட முதல் தேடியந்திரமாக வெப்கிராலர் அறிமுகமானது. எப்போது தெரியுமா? 1994 ல்!
அதற்கு முன்னர் உருவான தேடியந்திரங்கள் பெரும்பாலும் மனித கைகளால் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பை கொண்டதாகவும், மிக குறைவான செயல்பாடு கொண்டதாகவும் இருந்தன.
ஆர்ச்சி இதை ஒரளவு மாற்றியது. பின்னர் ஜம்ப்ஸ்டேஷன் தான் முதன் முதலில், இணையதளங்களை துழாவி,பட்டியலிட்டு தேட வழி செய்தது. ஆனால், இதுவும் கூட இணையதளங்களின் முழுவதையும் பட்டியலிடாமல், தலைப்பை மேட்டும் தேட வழி செய்வதாக அமைந்தது.
மாறாக, இணையத்தில் துழாவி, இணையதளங்களை பட்டியலிட்டு, அவற்றின் முழு பக்கத்தையும் தேடக்கூடிய முதல் தேடியந்திரமான வெப்கிராலர் அறிமுகமானது. அநேகமாக நவீன தேடியந்திர பாதை வெப்கிராலரில் இருந்து தான் துவங்குகிறது.
தேடியந்திர முன்னோடியான வெப்கிராலர் பின்னர் தேடியந்திர அலையில் பின்னுக்குத்தள்ளப்பட்டு மறக்கப்பட்டு விட்டது. 1995 ல் ஏ.ஓ.எல் நிறுவனத்தால் வாங்கப்பட்டு பின்னர் பல நிறுவனங்களின் கைகளுக்கு மாறிய வெப்கிராலர் ஒரு கட்டத்தில், மற்ற தேடியந்திர முடிவுகளை ஒப்பிடும் மெட்டா தேடியந்திரமாக மாறிப்போனது. இன்று வெப்கிராலர் தளம் இருந்தாலும், செயல்பாடில்லாமல் தான் இருக்கிறது.
—
* நவீன தேடியந்திரம் எது? http://www.howtogeek.com/trivia/what-was-the-first-modern-web-search-engine/
* வெப்கிராலர் :http://www.webcrawler.com/
* முதல் தேடியந்திரமான ஆர்ச்சி பற்றி:http://cybersimman.com/2013/06/29/search-48/
* முக்கிய தேடியந்திரங்கள்: http://cybersimman.com/2016/09/28/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8/